கோவை அரசியல் களம் இப்போ சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கு. ஒரு பக்கம் அதிமுகவோட முன்னாள் அமைச்சரும், கோவையின் பெரிய அரசியல் மாஸ் லீடருமான எஸ்.பி. வேலுமணி; மறுபக்கம் திமுகவோட செம பவர்ஃபுல் அமைச்சரும், கோவை மாவட்ட இன்சார்ஜுமான செந்தில் பாலாஜி. இந்த சூழல்ல, வேலுமணியோட ரொம்ப நெருக்கமான ஆதரவாளரா இருந்த ஆர். சந்திரசேகர், திடீர்னு அதிமுகவ விட்டு வெளியேறியிருக்காரு.
இது அதிமுகவுக்கு செம ஷாக் கொடுத்திருக்கு. சந்திரசேகர் தன்னோட விலகலுக்கு ஒரு காரணத்தை சொல்லியிருந்தாலும், இதுக்கு பின்னாடி செந்தில் பாலாஜியோட நகர்வு இருக்குமோ என்ற பேச்சும் அடிபடாமல் இல்லை.
யார் இந்த சந்திரசேகர்?
சந்திரசேகர்னு பேரு கேட்டாலே கோவையில அதிமுக தொண்டர்களுக்கு ஒரு மரியாதை இருக்கு. எஸ்.பி. வேலுமணி கோவையில தன்னோட அரசியல் ஆதிக்கத்தை உருவாக்க ஆரம்பிச்ச காலத்துல இருந்தே சந்திரசேகர் அவருக்கு வலது கையா இருந்தவர். எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணைச் செயலாளரா இருந்த இவரு, கட்சியோட அடிமட்ட வேலைகள்ல இருந்து மாநகராட்சி தேர்தல் களம் வரைக்கும் இறங்கி வேலை பார்த்தவர்.
வேலுமணி அமைச்சரா இருந்தப்போ, அவரோட முடிவுகளை தொண்டர்கள் மத்தியில கொண்டு சேர்க்குறதுலயும், கோவையில கட்சியோட அமைப்பை வலுப்படுத்துறதுலயும் சந்திரசேகரோட பங்கு ரொம்ப முக்கியம்.
இவரு கடந்த 20 வருஷமா அதிமுகவுக்காக உழைச்சவர். ஆனா, இப்போ திடீர்னு கட்சிய விட்டு வெளியேறியிருக்காரு. இதுக்கு “தனிப்பட்ட காரணங்களுக்காக கட்சி வேலையில தொடர்ந்து ஈடுபட முடியாத சூழல் இருக்கு”ன்னு அவர் தனது அறிக்கையில சொல்லியிருக்காரு. இது ஒரு சாதாரண காரணமா தெரிஞ்சாலும், கோவையில இந்த விலகலுக்கு பின்னாடி ஒரு பெரிய அரசியல் கணக்கு இருக்கு என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தா இருக்கு.
செந்தில் பாலாஜியோட நகர்வு: உண்மையிலயே மாஸ்டர் பிளானா?
சந்திரசேகர் தன்னோட முடிவு தனிப்பட்ட காரணம்னு சொன்னாலும், இதுக்கு பின்னாடி செந்தில் பாலாஜியோட மூவ் இருக்குன்னு கோவையில ஒரு பரபரப்பான டாக் இருக்கு. செந்தில் பாலாஜி, கோவை மாவட்டத்துக்கு திமுகவோட இன்சார்ஜா இருக்குறவர். 2021-ல திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கோவையில கட்சியோட செல்வாக்கை உயர்த்தியதில் இவருடைய பங்கு மிக முக்கியமானது. மக்கள் மத்தியில புது ப்ராஜெக்ட் அறிவிப்பு, தொண்டர்களை ஒருங்கிணைக்கிறது, மாநகராட்சி தேர்தல்ல திமுகவுக்கு வெற்றியை தேடி கொடுத்ததுன்னு, செந்தில் பாலாஜி இங்க ஒரு புது இமேஜை உருவாக்கியிருக்காரு.
என்ன விளைவு?
சந்திரசேகர் மாதிரி ஒரு முக்கிய ஆளு விலகினா, வேலுமணியோட செல்வாக்கு சற்று தடுமாறும் என்றும் கூறப்படுது. இது 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னாடி திமுகவுக்கு ஒரு பெரிய அட்வான்டேஜா இருக்கலாம். செந்தில் பாலாஜி இதுக்கு முன்னாடியும் இப்படி கச்சிதமாக வியூகம் அமைத்து காய் நகர்த்துவதில் கில்லாடி தான். ஒரு காலத்துல அதிமுகவோட பெரிய புள்ளிகளோட டீல் பண்ணவர், இப்போ திமுகவுக்கு வந்து அந்த அனுபவத்தை இங்கயும் பயன்படுத்துறாருன்னு பேசப்படுது.
அதிமுக பக்கம் பார்த்தா, சந்திரசேகர் விலகல் ஒரு பெரிய இழப்புதான். கோவை எப்பவுமே அதிமுகவோட வலுவான இடமா இருந்துச்சு. வேலுமணி இங்க தன்னோட அரசியல் செல்வாக்கை அபரிமிதமா உருவாக்கி வச்சிருக்காரு. தொண்டர்களை ஒருங்கிணைக்குறது, கட்சி நிகழ்ச்சிகளை கச்சிதமா நடத்துறது, தேர்தல் களத்துல வெற்றியை தேடி கொடுக்குறதுன்னு வேலுமணி ஒரு மாஸ் ஃபிகரா இருக்காரு. ஆனா, சந்திரசேகர் மாதிரி ஒரு முக்கிய ஆள் வெளியேறியது, வேலுமணிக்கு மட்டுமில்ல, மொத்த கட்சிக்குமே ஒரு பின்னடைவு.
கோவையில் புது கணக்கு?
2026 சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஒரு வருஷத்துக்கு மேல இருந்தாலும், கோவையில இப்பவே அரசியல் ஆட்டம் செம ஜோரா ஆரம்பிச்சிருக்கு. செந்தில் பாலாஜி, திமுகவுக்கு ஒரு வலுவான பேஸை உருவாக்குறதுக்கு முழு மூச்சோட வேலை செய்யுறாரு. கோவையை திமுகவோட கோட்டையா மாத்துறதுக்கு இந்த மாதிரி நகர்வுகள் ஒரு தொடக்கமா இருக்கலாம். அதே நேரத்துல, அதிமுக இந்த இழப்பை சரி செய்யுறதுக்கு வேலுமணி உடனே ஏதாவது ஒரு அதிரடி மூவ் எடுத்தாகணும். புதிய வியூகம் வகுக்கணும். சந்திரசேகர் விலகிய இடத்தை நிரப்புறதுக்கு கட்சிக்குள்ள இருக்குற இளம் தலைவர்களை முன்னிலைப்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கு.
சந்திரசேகர் விலகல் ஒரு தனிப்பட்ட முடிவா இருக்கலாம். ஆனால், செந்தில் பாலாஜி இந்த வாய்ப்பை பயன்படுத்தி, திமுகவோட செல்வாக்கை அடுத்த லெவலுக்கு கொண்டுச் செல்வார் என்பதில் சந்தேகமில்லை. அதிமுக பக்கம், இந்த சவாலை எதிர்கொள்ள வேலுமணி ஒரு கச்சிதமான பதிலடி தயார் பண்ண வேண்டிய நேரம் இது.
சொன்னதை செய்யும் செந்தில் பாலாஜி
அண்மையில் கோவை சென்றிருந்த முதல்வர் ஸ்டாலினிடம், "எதிர்வரும் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக கூட்டணி நிச்சயம் வெல்லும்" என்று செந்தில் பாலாஜி கூறியிருந்த நிலையில், சந்திரசேகரின் விலகல் மூலம் தனது ஆட்டத்தை தொடங்கிவிட்டார் என்பதில் சந்தேகமில்லை.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்