நாமக்கல் மாவட்டம், கொசவம்பட்டி பகுதியை சேர்ந்தவர் 24 வயதுடைய ரஞ்சித். இவர் அதே பகுதியை சேர்ந்த 21 வயதுடைய ஜமீனா என்ற பெண்ணை இரண்டு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். பின்னர் இருவரும் தனியாக வீடு எடுத்து வசித்து வந்த நிலையில் ரஞ்சித்தின் குடிப்பழக்கத்தால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மனைவி ஜமீனா 9 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்த நிலையில் ரஞ்சித் தினம் தோறும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு செல்வதாகவும், இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு முற்றி விரக்தியடைந்த மனைவி ரஞ்சித்தை பிரிந்து அவரது தாயார் வீட்டில் சென்று வாழ்ந்து வருகிறார். மனைவி தன்னைவிட்டு பிரிந்து சென்றதால் மாணவருத்தத்தில் இருந்த ரஞ்சித் மனைவியை மீண்டும் வீட்டிற்கு அழைத்துள்ளார். அப்போது ஜமீனா ரஞ்சித்துடன் சேர்ந்து வாழ மறுத்ததாக சொல்லப்படுகிறது.
இதனால் தனது தாய் வீட்டில் இருந்த ரஞ்சித் மேலும் மன உளைச்சல் அடைந்து இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் ரஞ்சித் வீட்டில் இருந்து புறப்பட்டு தனது தங்கை வீட்டின் விசேஷத்திற்கு செல்வதாக கூறிவிட்டு, அங்கு செல்லாமல் ராசிபுரம் அடுத்த ஆண்டகளூர்கேட் சக்தி நகர் பகுதி அருகே நடந்து சென்று கொண்டு இருந்துள்ளார். அப்போது திடீரென சேலம் நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரி முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதில் லாரியின் பின்பக்க டயர் ரஞ்சித்தின் தலைப்பகுதியில் ஏறியதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராசிபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் விஜய்குமார் தலைமையிலான காவலர்கள் உயிரிழந்த ரஞ்சித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விபத்து தொடர்பாக ராசிபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் குடும்பத் தகராறு காரணமாக இளைஞர் லாரி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வாகாது, மன உளைச்சல் இருந்தால் அழைக்க வேண்டிய எண்-1800-599-0019.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.