

குஜராத் மாநிலம், ஜூனாகாத் மாவட்டம் ஷோபாவத்தல கிராமத்தை சேர்ந்தவர் விபாபென் இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் 22 வயதில் ஷிவம்கிரி என்ற மகனும் 15 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கொரோனாவால் இவரது கணவர் உயிரிழந்த நிலையில் விபாபென் தனது இரண்டு மகன்களுடன் தனியாக வசித்து வந்தார். ஷிவம்கிரி அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் அவரது தம்பி எலெக்ட்ரீசியன் வேலை செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே இளைய மகன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தாய் மற்றும் அண்ணனிடம் தகராறு செய்து வந்திருக்கிறார்.
இந்நிலையில் ஷிவம்கிரிக்கு அதே பகுதியை சேர்ந்த 19 வயதுடைய காஞ்சனா குமாரி என்ற பெண்ணுக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்று அனைவரும் ஒரே வீட்டில் குடும்பமாக வசித்து வந்திருக்கின்றனர். காஞ்சனா குமாரி 6 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கடந்த (அக் 16) ஆம் தேதி வழக்கம் போல் ஷிவம்கிரியின் தம்பி குடித்துவிட்டு வீட்டில் இருந்தவர்களிடம் தகராறு செய்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ஷிவம்கிரி அவரது தம்பியை கண்டித்து தகாத வார்த்தைகளால் பேசியதாக சொல்லப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த 15 வயதுடைய சிறுவன் வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து அவரது அண்ணனை சரமாரியாக அடித்து கொலை செய்தார்.
இதனை தொடர்ந்து எங்கு இதனை தனது அண்ணி வெளியில் சொல்லிவிடுவார்களோ என நினைத்த சிறுவன் அவரது கர்ப்பிணி அண்ணியை கற்பழித்து வயிற்றில் மிதித்து கொடூரமாக கொலை செய்திருக்கிறார். மேலும் இருவரது உடலையும் வீட்டிற்குள் குழிதோண்டி புதைத்துவிட்டு மற்ற ஆதாரங்களை தீயிட்டு எரித்து அழித்துள்ளார். இதற்கு அவரது தாயும் துணைபுரிந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் 16 நாட்களுக்கு பிறகு தீபாவளி அன்று காஞ்சனாவின் பெற்றோர்கள் தனது மகளை தொடர்பு கொள்ள முயற்சித்திருக்கின்றனர். ஆனால் தனது மகள் மற்றும் மருமகன் இருவரையும் தொடர்புகொள்ள முடியாத நிலையில் 15 வயது சிறுவனிடம் அவர்களை பற்றிய விசாரித்துள்ளனர். அப்போது சிறுவன் முன்னுக்கு பின்னாக பதிலளித்து இருவரும் விபத்தில் இறந்து விட்டதாக தெரிவித்திருக்கிறார்.
இதனால் சந்தேகமடைந்த காஞ்சனாவின் பெற்றோர்கள் போலீசில் புகாரளித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டபோது 15 சிறுவன் அவரது அண்ணன் மற்றும் அண்ணியை கொலை செய்து வீட்டிற்குள் புதைத்து விபத்தில் இறந்தது போல் நாடகமாடியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த சிறுவனை கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். சொந்த அண்ணன் மற்றும் அண்ணியை 15 வயது சிறுவன் கொலை செய்து புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.