DGL Family suicide DGL Family suicide
மாவட்டம்

“தொட்டில் கம்பியிலேயே தூக்குபோட்டு..” 2 பிஞ்சுகளை கொன்று தற்கொலை செய்துகொண்ட பாட்டிகள்..! என்ன நடந்தது தெரியுமா?!

கணவருக்கும் பவித்ராவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வேறு ஒரு நபருடன் ஏற்பட்ட காதலால் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

Saleth stephi graph

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அருகே சின்ன குளிப்பட்டியில் மகள் வேறொருவருடன் சென்று விட்டதால் அவமானம் தாங்க முடியாமல் மூதாட்டிகள் இருவரும் தனது இரண்டு பேத்திகளை கொன்றுவிட்டு இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே சின்ன குளிப்பட்டியை சேர்ந்த பவித்ரா 27. திருமணம் ஆகி கணவர் பிரபாகரன் உடன் பள்ளபட்டி அருகே சவுந்தராபுரத்தில் குடியிருந்து வந்தார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர். கணவருக்கும் இவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வேறு ஒரு நபருடன் ஏற்பட்ட காதலால் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

அதன் பின்பு உறவினர்கள் அழைத்து பேசி சமரசம் செய்து கணவருடன் குடும்பம் நடத்தும்படி கூறியுள்ளனர். மீண்டும் பவித்ரா கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு வேறு ஒரு நபருடன் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அதன் பின் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தனது இரண்டு குழந்தைகளான லித்திக்ஸா வயது (8) தீப்த்திகா வயது (5) ஆகிய இரண்டு பேரை அழைத்துக் கொண்டு தனது சொந்த ஊரான சின்னக் குளிப்பட்டியில் வந்து வசித்து வருகிறார்.

இவருடன் இவரது தாய் காளீஸ்வரி மற்றும் அவரது தாய் செல்லம்மாள் ஆகிய ஐந்து பேரும் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று 17-ம் தேதி காலை நான் 12 -ஆம் வகுப்பு டுடோரியல் கல்லூரியில் படித்து தேர்ச்சி அடைய வேண்டும் அதற்காக படிக்கச் செல்கிறேன் என்று தாய் காளீஸ்வரியிடமும் பாட்டி செல்லம்மாளிடமும் கூறிவிட்டு சென்றுள்ளார். படிப்பதற்காக சென்ற பவித்ரா இரவு 11 மணி ஆகியும் வீடு திரும்பாததால் கவலை அடைந்துள்ளனர்.

சிறிது நேரம் கழித்து மகள் மீண்டும் வேறு ஒரு நபருடன் சென்றுவிட்டார் என தகவல் கிடைத்த நிலையில் மனவேதனை அடைந்த காளீஸ்வரி மற்றும் அவரது தாய் செல்லம்மாள், இது ஊரில் மிகப்பெரிய அவமானம் என நினைத்து அவர்களது பேத்திகளான இரண்டு குழந்தைகளையும் ஒரு தொட்டில் கட்டும் கம்பியில் ஒரு சேலையில் இரண்டு குழந்தைகளையும் தூக்கில் தொங்கவிட்டு கொன்றுவிட்டு அதன் பின் காளீஸ்வரி மற்றும் அவரது தாய் செல்லம்மாள் ஆகிய இருவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ஆனால் இதுவரை தனது தாய் பாட்டி மற்றும் தனது இரண்டு குழந்தைகளை விட்டு விட்டுச் சென்ற பவித்ரா இதுவரை எங்கு உள்ளார் எவருடன் சென்றுள்ளார் என்பது தெரியவில்லை.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து ஒட்டன்சத்திரம் டிஎஸ்பி கார்த்திகேயன் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு 4 பேரின் உடலையும் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று அங்கிருந்து பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இது பற்றி இடையகோட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.