Admin
மாவட்டம்

“இந்த ஆசிரியர் எங்களுக்கு வேண்டாம்” - பள்ளிக்கு செல்லாத மாணவர்கள்.. குழந்தைகளுக்காக ஆர்ப்பாட்டம் செய்த பெற்றோர்கள்!

புகார்கள் உட்பட பல்வேறு புகார்கள் இருப்பதால் அந்த ஆசிரியர் தங்கள் பள்ளிக்கு வேண்டாம், என்று அங்கு பயிலும் மாணவ மாணவிகளின் பெற்றோர் கூறி வந்துள்ளனர்.

Mahalakshmi Somasundaram

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட காசி புதுப்பேட்டை பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 89 மாணவ மாணவிகள் பயின்று வரும் நிலையில், (ஜூலை 25)வெள்ளிக்கிழமை அன்று புதிய தலைமை ஆசிரியராக நெடுவாசல் கிராமத்தைச் சேர்ந்த கருப்பையன் என்பவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

தலைமை ஆசிரியர் கருப்பையின் மீது ஏற்கனவே முன்னர் பணிபுரிந்த பல்வேறு அரசு பள்ளிகளில் நிதி மோசடி, போலி முத்திரை அடித்து வங்கியில் மோசடி, செய்தது உள்ளிட்ட புகார்கள் உட்பட பல்வேறு புகார்கள் இருப்பதால் அந்த ஆசிரியர் தங்கள் பள்ளிக்கு வேண்டாம், என்று அங்கு பயிலும் மாணவ மாணவிகளின் பெற்றோர் கூறி வந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. மொத்தம் 89 மாணவர்கள் படிக்கும் அரசு நடுநிலைப் பள்ளியில் 11 மாணவர்கள் மட்டுமே வகுப்பிற்கு வந்துள்ளனர்.

இது குறித்துத் தகவல் அறிந்த அறந்தாங்கி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கலா ராணி மற்றும் திருவரங்குளம் ஒன்றிய வட்டார கல்வி அலுவலர்கள் அரங்கநாதன் மற்றும் கவிதா உள்ளிட்டோர் பள்ளி வளாகத்திற்கு வந்து பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர் உள்ளிட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவத்தின் காரணமாக காசிம் புதுப்பேட்டை பகுதியில் பரபரப்பான சூழல் உருவாகி உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்