college student 
மாவட்டம்

"இப்படி ஆகும்னு கனவுல கூட நெனச்சிருக்க மாட்டாங்க” கல்ச்சுரல்ஸ் சென்ற கல்லூரி மாணவர்கள்.. பிணமாக மீட்கப்பட்ட பரிதாபம்..!

கலை விழா போட்டிகளில் கலந்து கொள்ள

Mahalakshmi Somasundaram

சென்னை பூந்தமல்லி பகுதியில் இயங்கி வரும் பிரபல சவிதா மருத்துவக் கல்லூரியில் படிக்கும் 15 மாணவர்கள் மற்றும் 13 மாணவிகள் கோவையில் உள்ள நேரு கல்லூரியில் நடக்கும், கலை விழா போட்டிகளில் கலந்து கொள்ள சந்தோஷ் என்பவரின் தலைமையில், நேற்று கோவை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் கோவைக்கு சென்றுள்ளனர்.

போட்டிகளை முடித்து விட்டு இரவு கல்லூரியிலேயே தங்கிய மாணவர்கள், இன்று காலை தமிழ்நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றான ஆழியார் அணைக்கு இரண்டு மினிவேன் மூலம் சென்றிருக்கின்றனர்.அப்போது தடை செய்யப்பட்ட பகுதியில் குளித்துக்கொண்டிருந்த, மூன்று மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளனர்.

இதனை பார்த்த சகா மாணவர்கள் கூச்சலிட்டு, அருகில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்துள்ளனர். அப்போது உள்ளூர் வாசியான நாகேஷ் என்பவற்றின் உதவியுடன் நீண்ட நேரத்திற்கு பிறகு மூன்று மானவர்களையும் சடலமாக மீட்டிருக்கின்றனர்.

இதில் பி.எஸ்.சி நான்காம் ஆண்டு பயிலும் சென்னையை சேர்ந்த ஜோசப் ஆன்டன் ஜெனிப் (21), திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு பயிலும் ரேவந்த் (21),மற்றும் சென்னையைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு மாணவன் தருண் விஸ்வரங்கன் (19) ஆகிய மூவரும் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மீட்கப்பட்ட மூவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.மேலும் இது குறித்து ஆழியார் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்