மாவட்டம்

“இறுதி சடங்கில் அசைந்த பெண்ணின் கால்” - குடிநீர் குடித்து இருவர் உயிரிழப்பு… முட்கள் போட்டு சாலை மறியலில் ஈடுபட்ட ஊர் மக்கள்!

கிராமத்தில் உள்ள 40 க்கும் மேற்பட்டோருக்கு வயிற்றுப்போக்கு வயிற்று வலி வாந்தி போன்றவை ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்திருக்கின்றனர்...

Mahalakshmi Somasundaram

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே கர்லம்பாக்கம் காலனியில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் மேல்நிலை குடிநீர் தொட்டியின் மூலம் குடி தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் வசித்து வரும் நூறுக்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்த பொதுமக்கள் இந்த தண்ணீரை குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் திடீரென்று இந்த கிராமத்தில் உள்ள 40 க்கும் மேற்பட்டோருக்கு வயிற்றுப்போக்கு வயிற்று வலி வாந்தி போன்றவை ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்திருக்கின்றனர்.

இதற்கு முறையாக பராமரிக்கப்படாமல் விநியோகிக்கப்பட்டு குடிதண்ணீர் தான் காரணம் என மக்கள் குற்றம் சாட்டி வந்த நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதனை தொடர்ந்து மேலும் சிகிச்சை இருந்த சுதா என்ற பெண்ணும் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் அவரது உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் அவரது உடலை பெற்று இறுதி சடங்கு செய்து கொண்டிருந்த போது சுதாவின் கால்கள் அசைந்ததாக சொல்லப்படுகிறது. எனவே உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்றிருக்கின்றனர்.

அப்போது அங்கு சுதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது இறப்பை உறுதி செய்திருக்கின்றனர். இதனை தொடர்ந்து ஆத்திரமடைந்த ஊர் மக்கள் இருவரின் இறப்புக்கும் குடிதண்ணீர் பிரச்சனை தான் காரணம் என்று நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் அனைவரும் ஒன்று திரண்டு பள்ளிப்பட்டு ஆர்.கே. பேட்டை செல்லக்கூடிய மாநில நெடுஞ்சாலையில் அமர்ந்து புத்தர் செடிகள் ஆற்றும் முட்களை சாலையில் போட்டு சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருவர் உயிரிழந்த நிலையிலும் சம்பந்தப்பட்ட இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் பிரதாப் சுகாதாரத் துறை அதிகாரிகள் வட்டார வளர்ச்சித் துறை அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றும் பலமுறை குற்றம் சாட்டியும் இந்த குடிதண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காணவில்லை என்றும் குற்றச்சாட்டை முன்வைத்து தொடர்ந்து சாலை மறியல் செய்து வருகின்றனர். எனவே எந்த வித அசம்பாவிதங்களும் நடக்காமல் இருக்க சம்பவ இடத்தில் முப்பதுக்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.