“உடல் நசுங்கி உயிரிழந்த சிறுமிகள்” - குழந்தைகளின் உயிருக்கு எமனான வீட்டின் சுவர்… மகள்களை இழந்து கதறும் பெண் காவலர்!

எனேவ வழக்கம் போல ராஜேஸ்வரி குழந்தைகள் மற்றும் தனது தங்கைக்கு தேவையான உணவு...
“உடல் நசுங்கி உயிரிழந்த சிறுமிகள்” - குழந்தைகளின் உயிருக்கு எமனான வீட்டின் சுவர்… மகள்களை இழந்து கதறும் பெண் காவலர்!
Published on
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே கொங்கலாபுரத்தை சேர்ந்தவர் ராஜாமணி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவருக்கும் கடந்த சில வருங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் 11 வயதில் கவின் என்ற மகனும், 9 வயதில் காமலிகா என்ற மகளும் உள்ளனர். ராஜாமணி வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில் அவரது மனைவி ராஜேஸ்வரி சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதால் பெண் காவலர் ராஜேஸ்வரியின் சகோதரியான சங்கரன்கோவிலை சேர்ந்த செவிலியர் தனலட்சுமி தனது 6 வயது மகன் நிஷாந்த் மற்றும் 4 வயது மகள் ரிஷிகாவுடன் தனது அக்கா ராஜேஸ்வரியின் வீட்டிற்கு வந்துள்ளனர். எனேவ வழக்கம் போல ராஜேஸ்வரி குழந்தைகள் மற்றும் தனது தங்கைக்கு தேவையான உணவு மற்றும் பிற வசதிகளை செய்து வைத்து விட்டு பணிக்குச் சென்றிருக்கிறார்.

Admin

பின்னர் தனலட்சுமி காலை சிற்றுண்டியை நன்கு குழந்தைகளைக்கும் கொடுத்துவிட்டு வீட்டில் இருந்த மற்ற வேலைகளை பார்த்து கொண்டு இருந்திருக்கிறார். அப்போது வீட்டின் முன்பாக உள்ள கேட்டில் சிறுமிகள் கமலிகாவும், ரிஷிகாவும் விளையாடிக்கொண்டிருந்தனர். இந்நிலையில் எதிர்பாராத விதமாக உறுதித் தன்மை இல்லாத சுவர் சரிந்து இரும்பு கேட்டுடன் சேர்ந்து விழுந்ததில் கேட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகள் கமலிகா 9, மற்றும் ரிஷிகா 4, ஆகிய இருவரும் தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தைலட்சுமி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உடனடியாக சிறுமிகளை மீட்டு சிவகாசி பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் செல்லும் வழியிலேயே இரு சிறுமிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். வீட்டிற்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகள் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் சிவகாசி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com