பொழுதுபோக்கு

“11:11 விஷ்” – அனிருத் – காவ்யா வெட்டிங் க்ளிக்ஸ்! கிரீஸில் களைகட்டிய கொண்டாட்டம்.. சென்னையில் பிரம்மாண்ட வரவேற்பு

தற்போது அனிருத்- காவ்யாவின் திருமண புகைப்படங்கள் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்துள்ளது...

Muthu Lakshmi

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளரான அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியின் CEO காவ்யா மாறனின் திருமணம் இன்று கிரீஸ் நாட்டில் பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது. இவர்களது திருமணக் கொண்டாட்டங்கள் கிரீஸ் நாட்டில் நவம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாகவும், அதனை தொடர்ந்து நவம்பர் 21ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமான திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. கிரீஸ் நாட்டில் நடைபெற்ற இந்த திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் முக்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளது.

இந்த விழாவில் கலந்துகொள்ள திரையுலகம் மற்றும் அரசியல் உலகைச் சேர்ந்த பல முக்கியப் பிரபலங்கள் கிரீஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். ரஜினிகாந்த் அனிருத்தின் நெருக்கிய உறவினர் என்பது குறிபிடதக்கது. மேலும், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரபலங்களும் இந்த திருமணத்தில் பங்கேற்றுள்ளனர். இவர்கள் காவ்யாவின் நெருக்கிய உறவினர்கள் ஆவார்கள்.

aniruth kavya

தற்போது அனிருத்- காவ்யாவின் திருமண புகைப்படங்கள் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கிரீஸில் நடைபெற்ற திருமணக் கொண்டாட்டங்களைத் தொடர்ந்து, நவம்பர் 21ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமான திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.