Ajith Kumar Gladiator Trailer 
பொழுதுபோக்கு

‘கிளாடியேட்டர்’ ட்ரெய்லருக்கு இப்படியொரு வரவேற்பா? நிரம்பி வழிந்த திரையரங்குகள்.. BookMyShow-வில் டிரெண்டிங்கில் அஜித்!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,000-க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது...

Mahalakshmi Somasundaram

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். 1993ஆம் ஆண்டு வெளியான அமராவதி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான அவர், இதுவரை 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சினிமாவைத் தாண்டி கார் பந்தயத்திலும் தீவிர ஆர்வம் கொண்ட அஜித், சர்வதேச ரேசிங் போட்டிகளில் மீண்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

நடிப்பில் மட்டுமின்றி, ரேசிங் மீதான தனது ஆர்வத்தையும் தொடர்ந்து முன்னெடுத்து வரும் அஜித், தனது பெயரில் ‘Ajith Kumar Racing’ என்ற அணியை உருவாக்கி சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று வருகிறார். இந்த அணியின் செயல்பாடுகள் மூலம் இந்தியாவுக்கும் பெருமை சேர்த்து வரும் அவர், சமீபத்தில் வெளியான Good Bad Ugly படத்துக்குப் பிறகு மீண்டும் ரேசிங் களத்தில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார்.

மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனுடன் அஜித்

இதற்கிடையே, Good Bad Ugly படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் அஜித் மீண்டும் இணைந்துள்ளார். அஜித்தின் 64வது படமாக உருவாகும் இப்படத்திற்கு ‘Daredevil’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இந்தப் படத்தை அஜித்தின் மனைவி ஷாலினி தயாரிக்கிறார். படத்தின் தலைப்பு மற்றும் கூட்டணி குறித்த அறிவிப்புகள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Ajith Kumar Racing Documentary

அஜித்தின் ரேசிங் பயணத்தை பதிவு செய்த ‘கிளாடியேட்டர்’

Daredevil படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக, அஜித்தின் கார் ரேசிங் பயணத்தை மையமாகக் கொண்ட ‘கிளாடியேட்டர்’ என்ற ஆவணப்படம் திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்த ஆவணப்படத்தை இயக்குநர் விஜய் இயக்கியுள்ள நிலையில், ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். அஜித்தின் சர்வதேச ரேசிங் அனுபவங்கள் மற்றும் ரேசிங் களத்தில் அவர் எதிர்கொண்ட சவால்கள் உள்ளிட்டவற்றை பதிவு செய்யும் வகையில் இந்த ஆவணப்படம் உருவாகியுள்ளது. இதன் டிரெய்லர் இன்று மாலை வெளியாகியுள்ளது.

Ajith Kumar Racing Documentary

ட்ரெய்லரை திரையரங்கில் கொண்டாடும் ரசிகர்கள்!

‘கிளாடியேட்டர்’ படத்தின்டிரெய்லர் வெளியீட்டை முன்னிட்டு, அதனை திரையரங்குகளில் திரையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து. இதற்கான முன்பதிவுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,000-க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ‘கிளாடியேட்டர்’ திரைப்பட டிரெய்லர் BookMyShow-வில் புதிய டிரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் டிரெய்லர் வெளியாகிய நிலையில் அதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதன் மூலம், ஒரு நடிகரின் கார் ரேசிங் பயணத்தை மையமாகக் கொண்ட ஆவணப்படத்தின் ட்ரெய்லரை திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் வெளியாகச் செய்து, இந்திய சினிமாவில் இதுவரை வேறு எந்த நடிகரும் செய்யாத வகையிலான சாதனையை அஜித்குமார் நிகழ்த்தியுள்ளதாக அவரது ரசிகர்கள் பெருமையுடன் கொண்டாடி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்