நகைச்சுவை கலைஞர் பிரணித் மோரின் நிகழ்ச்சியில் இருந்து மற்றொரு காணொளி சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, அந்நிகழ்ச்சியைச் சுற்றி ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அந்தக் காணொளியில், பார்வையாளர்களில் இருந்த ஒரு பெண், ஆண் சடலங்களின் அந்தரங்க உறுப்புகள் குறித்து கருத்து தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது.
கூறப்படும் அந்தக் காணொளி இணையத்தில் விமர்சனங்களைத் தூண்டியுள்ளது, பல பயனர்கள் அதில் உள்ள கருத்துக்களைக் கேள்வி எழுப்பி, அவை மரியாதையற்றவை என்று கூறியுள்ளனர். அந்த வீடியோ பிரபலமடைந்த பிறகு, அந்தப் பெண் தனது இன்ஸ்டாகிராம் கணக்கை தனிப்பட்டதாக மாற்றிக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த பெண் கூறுவது, மருத்துவமனைக்கு வரும் ஆண் சடலங்களின் அந்தரங்க உறுப்புகளை குறித்து தானும் தனது தோழியும் கேலி செய்வதாக அவர் கூறியிருந்தார். இதுவும் சமூக வலைத்தளத்தில் தற்போது பேசுபொருளாகியுள்ளது. இது குறித்து ஒரு இணையவாசி "ஒரு மருத்துவ மாணவராக, ஒரு சடலத்தைக் கேலி செய்வது நீங்கள் செய்யக்கூடிய மிக மோசமான செயல்களில் ஒன்றாகும். பி.டி. சௌராசியாவின் 'அனாடமி புக்' புத்தகத்தின் முதல் பக்கத்தில் எழுதப்பட்டிருந்த கவிதை எனக்கு இன்னும் நினைவிருக்கிறது; அதில் ஒரு சடலம் தன் மனதைக் கொட்டி, தன்னை அன்போடும் அக்கறையோடும் கையாளுமாறு கெஞ்சியிருக்கும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும், பிரணித் மோரின் நிகழ்ச்சியில் ஹிமான்ஷு ஜங்ரா என்ற நபர் இடம்பெற்ற மற்றொரு காணொளி வைரலான சில நாட்களுக்குப் பிறகு இந்த சர்ச்சை எழுந்துள்ளது. அந்த வீடியோவில், ஜங்ரா என்ற இளைஞர் அவர் சென்ற டேட் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார், அதில் அவர் சிக்கன் பிரியாணி மற்றும் ஒரு தண்ணீர் பாட்டிலுக்காக சுமார் 360 முதல் 370 ரூபாய் வரை செலவழித்திருந்தார். பின்னர் அவர், அப்பெண்ணை வீட்டில் இறக்கிவிட்ட பிறகு, உடல்ரீதியான நெருக்கத்திற்கு தனக்கு உரிமை இருப்பதாக உணர்ந்ததாக அவர் கூறியுள்ளார்.
இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அரங்கத்தில் உள்ள அனைவரும் சிரித்தது பரவலான எதிர்ப்பைத் தூண்டியது. மேலும் உரையாடலின் போது சிரித்ததற்காக ஜங்ரா மற்றும் பிரணித் மோரை பயனர்கள் விமர்சித்தனர். தற்போது அடுத்தடுத்த விமர்சனங்களால்பிரணித் மோர் தனது சமூக ஊடக கணக்கை செயலிழக்கச் செய்துள்ளார். ஏற்கனவே மன்னிப்பு தெரிவித்து ஒரு பதிவினை பதிவிட்ட நிலையில் இது நிகழ்ந்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.