பொழுதுபோக்கு

மீண்டும் மீண்டுமா? மற்ற கட்சி MLA-க்கள்.. ஆளுங்கட்சிக்கு தாவியதை கன்டென்ட் ஆக்கியதா பிக்பாஸ்? அடுத்த பரபரப்பை பற்ற வைத்த புரோமோ!

இது குறித்து விஜய் சேதுபதி பேசுவாரா? அல்லது கடந்து செல்வாரா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

Muthu Lakshmi

விஜய் டிவியின் பிரபலமான ரியாலிட்டி ஷோவான ‘பிக்பாஸ்’ சீசன் 10 இந்த மாதம் 6ம் தேதி தொடங்கி இரு வாரங்களாக நடந்து வருகிறது. முதல் வாரத்திலேயே மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது இந்த ஷோ. அதில் முதல் வீகெண்ட் எபிசோடில் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விஜய் சேதுபதி, பிக்பாஸ் போட்டியாளர் ஒருவருக்கு தலைமைத்துவம் குறித்து சில விஷயங்களை எடுத்துரைத்தார்.

அதில் “லீடர்ஷிப்  என்றால் என்னவென்றே தெரியாமல், வாய்க்கு வந்த வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு, பிரச்சனை என்று வரும்போது எதிர்க்கட்சியின் மீது பழியைப் போட்டுவிட்டு தெறித்து ஓடுவது தலைமைப் பண்பல்ல!” எனக் கூறிஇருந்தார். இது தமிழகத்தில் தற்போதைய அரசியல் சூழலை விமர்சிக்கும் விதமாக உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். மேலும் சிலர் “இது தமிழக முதல்வர் விஜயை விமர்சிப்பதாக உள்ளது” என்றும் கண்டனம் எழுப்பினர். அதன் பின் விஜய் டிவி சார்பில் ஒரு விளக்கமும் கொடுக்கப்பட்டது. ஆனால் விஜய் சேதுபதி இது குறித்து எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. வரும் வீகெண்ட் எபிசோடில் இதற்கான பதில் கொடுக்கலாம் என பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இன்று வெளியான ப்ரோமோ 2 ல் மீண்டும் சர்ச்சையை கிளப்பும் விதமாக சில கான்டென்ட்கள் சிக்கியுள்ளது. அந்த ப்ரோமோ-வில், “ஆளும் அணியில் இருந்து சிலர் எதிர்கட்சிக்கு தாவுவதாகவும், சிலர் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாகவும்” தெரிவிக்கின்றனர். இதை தற்போதைய அரசியல் சூழலில் பொருத்தி நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது குறித்து விஜய் சேதுபதி பேசுவாரா? அல்லது தவிர்த்து கடந்து செல்வாரா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. 

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட சில வேட்பாளர்கள், வெற்றி பெற்று ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் தங்களது MLA பதவியை ராஜினாமா செய்து, உடனடியாக ஆளும் கட்சியில் இணைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதை மறைமுகமா விமர்சிக்கிறதா? ‘பிக்பாஸ் ப்ரோமோ’ என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.  

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்