‘India has two language - Cinema and Cricket’ அதிலும் குறிப்பாக தமிழகத்தில் சினிமா ரசிகர்களின் பட்டாளம் ஏராளம். எம்.ஜி.ஆர் சிவாஜி காலத்திலிருந்தே தங்களுக்கான நாயகனை தேர்வு செய்து அவர்களை உச்ச நட்சத்திரமாக்கி அழகு பார்க்கும் பண்பு தமிழ் நாட்டு ரசிகர்களின் தொன்று தொட்ட வழக்கங்களில் ஒன்று.
இன்றைய சூழலில் தமிழகத்தின் மிக முக்கிய கதாநாயகர்கள் என்றால் அது அஜித்தும் விஜயும் தான். விஜய்யின் அரசியல் பிரவேசம் அவரை முழு நேர அரசியலுக்குள் கூடி சென்றாலும், அவர் தனது தொண்டர்களை கூட ‘நண்பா நண்பி’ என்று அழைக்கும் விதம் அவரின் படங்களை இன்னமும் நினைவு படுத்திக்கொண்டிருக்கிறது.
நடிகர் அஜித்தும் தனெக்கென ஒரு மாற்று பாதையை உருவாக்கி கொண்டார். படங்களில் தொடர்ந்து நடித்து வந்தாலும், கார் பந்தையங்களில் முழு மூச்சோடு செயல்பட்டு வருகிறார். ஆனால் இவர்கள் இருவரின் படமும் எப்போது வந்தாலும் எந்த வகைமையில் வந்தாலும் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி விட்டுவிடும் என்பதே நிதர்சனம்.
விஜய் நடித்து வெளியான பலபடங்கள் தற்போது ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்கள் மத்தியில் வழக்கம் போல பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘கில்லி’ ரீ ரிலீஸ் ஆன போதும் பெருவாரியாக கொண்டாடப்பட்டது.
அதன் நீட்சியாக 2005 -இல் ஜான் மகேந்திரன் இயக்கி விஜய் நடித்து வெளியான படம் ‘சச்சின்’ . இந்த படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக இல்லாமல் ‘சாக்லேட் பாய்’ பாணியில் நடித்திருப்பார். 20 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் ஆகும் இந்த படம் தமிழகம் முழுவதும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இந்த படம் பல திரையரங்குகளில் வெளியாகிறது. சென்னையில் இன்று மொத்தம் 116 காட்சிகள் ‘சச்சின்’ படத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
20 வருடங்களுக்கு பிறகு வெளியாகும் ஒரு படம் இன்னமும் அனைத்து தரப்பினராலும் விருப்பப்பட்டு, 116 காட்சிகள் ஓடுவது உண்மையிலேயே அசாதாரணமான விஷயம் தான்.
அப்படியே “ AK” பக்கம் வண்டியை திருப்புவோம். ‘AAA’, மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித் குமாரை வைத்து ‘good, bad, ugly’ என்ற படத்தை இயக்கினார், இந்த படமும் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
ஆனால் ஒரு வாரம் ஆகியும் ‘GBU’ நன்றாகவே போய்க்கொண்டிருக்கிறது. இன்று சென்னை முழுவதும் உள்ள திரையரங்குகளில் ‘GBU’ படத்திற்கு 306 காட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பல நாட்களுக்கு பிறகு ’விஜய் அஜித்’ படங்கள் ஒன்றாக வெளியாகி உள்ளதால். திரையரங்குகள் நிரம்பி வழிகின்றன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்