பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் விவாத நிகழ்ச்சியின், கடந்த வர தொகுப்பில் ஜென் Z தலைமுறையைச் சேர்ந்த பெண்கள் தங்களது வருங்காலக் கணவர் குறித்த எதிர்பார்ப்புகளைப் பகிர்ந்துகொண்டனர். தங்களது தாய்மார்களின் முன்னிலையிலேயே நடைபெற்ற இந்த உரையாடலில், ஒரு பெண் தெரிவித்த கருத்துகள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. நிகழ்ச்சியில் பேசிய அந்தப் பெண், தனது வருங்காலக் கணவர் “3 லட்சம் சம்பளம் வாங்கணும் தொழிலதிபரா இருக்கனும், ktm பைக் வச்சிருக்கணும், அப்புறம் நானே அவருக்கு மது ஊத்தி குடிக்க வைப்பான் இது தான் என் கனவு” என் கூறியுள்ளார்.
அதாவது மாதம் ரூ.3 லட்சம் சம்பளம் வாங்குபவராக இருக்க வேண்டும் என்றும், தொழில் செய்து வருபவராக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், முழுமையான தாடி வைத்திருக்க வேண்டும், KTM பைக் வைத்திருக்க வேண்டும் என்பதும் தனது எதிர்பார்ப்புகள் என அவர் கூறியுள்ளார். அதேபோல், தனது வருங்காலக் கணவருக்கு தானே மது ஊற்றி குடிக்க வைப்பது தான் தனது இலக்கு என்றும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார். இதற்கான காரணத்தை நெறியாளர் ஆவுடையப்பன் கேட்டபோது, தனது வாழ்க்கைத் துணைக்கு தேவையான விஷயங்களை தானே செய்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் தனக்கு இருப்பதாக அவர் விளக்கினார்.
“இந்தப் பழக்கத்தால் நிறைய காதல்கள் பிரிந்துபோயிருக்கின்றன. ஆனால், நான் அப்படி செய்யமாட்டேன். நமக்கு ஒருத்தர் வருகிறார் என்றால் அவர்களுக்கு எல்லாமே நாமே செய்ய வேண்டும். ஊட்டிவிடுவது முதல் சமைப்பது வரை, சாப்பாடு போடுவதிலிருந்து மது ஊற்றிக் கொடுப்பது வரை எல்லாமே நானே செய்ய வேண்டும்” என அந்தப் பெண் கூறியுள்ளார்.இதற்கு நெறியாளர், “ஊட்டிவிடுவது ஓகே... ஊற்றிக் கொடுப்பது எப்படிச் சரியாகும்?” என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அந்தப் பெண், குழந்தை போல தானே கவனித்துக்கொள்ள வேண்டும் என விரும்புவதாகவும், தனது வருங்காலக் கணவருக்கு மது ஊற்றிக் கொடுப்பது தனது கனவு என்றும் தெரிவித்துள்ளார்.
தனது பெற்றோரின் வாழ்க்கை குறித்தும் அந்தப் பெண் நிகழ்ச்சியில் பேசியுள்ளார். சிறு வயது முதலே தனது தாய், தந்தையிடம் மது அருந்தக்கூடாது எனக் கூறி வந்ததாகவும், இதன் காரணமாக இருவருக்கும் இடையே சண்டைகள் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தனது தந்தைக்கு பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டதாகக் கூறிய அவர், தனது வருங்காலக் கணவருக்கு அதுபோன்ற சூழல் ஏற்படக்கூடாது என்பதற்காகவே தானே மது ஊற்றிக் கொடுக்க வேண்டும் என நினைப்பதாக விளக்கமளித்துள்ளார்.
அதற்கு நெறியாளர் “உங்களுக்கு வரப்போகும் மாப்பிளை குடிக்காதவராக இருந்தால்” என கேள்வி எழுப்பிய நிலையில், அப்படி பட்ட மாப்பிளை எனக்கு வேண்டாம் குடிக்கும் வாலிபரை தான் நான் திருமணம் செய்துகொள்வேன் என பெண் தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பேச்சு இடம்பெற்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வரும் நிலையில், பெண்ணின் கருத்து குறித்து பல்வேறு விதமான கருத்துக்கள் பதிவாகி வருகின்றன.
சிலர், மாதம் ரூ.3 லட்சம் வருமானம், தொழில், குறிப்பிட்ட வகை பைக் உள்ளிட்ட எதிர்பார்ப்புகள் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். மற்றொருபுறம், திருமணத்தில் ஒவ்வொருவருக்கும் இருக்கும் தனிப்பட்ட எதிர்பார்ப்புகள் மற்றும் வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்வதில் வருமானம், தொழில், பழக்கவழக்கம் உள்ளிட்டவை எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெறுகின்றன என்பது குறித்தும் விவாதம் நடைபெற்று வருகிறது. அதேநேரத்தில், அந்தப் பெண் தனது குடும்ப அனுபவத்தின் அடிப்படையில் தனது விருப்பத்திற்கான காரணத்தை நிகழ்ச்சியில் விளக்கியிருப்பதையும் பலர் சுட்டிக்காட்டி வருகின்றனர். மேலும் சிலர் இப்படி ஆசைபட்டால் வருங்காலத்தில் அந்த பெண் திருமணத்திற்கு பிறகு பல சிக்கல்களை சந்திக்க நேரிடும் எனவும் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்