Jaden Smith dating rumour 
பொழுதுபோக்கு

"ஜேடன் ஸ்மித்துக்கு 82 வயது டிசைனருடன் காதலா?" - இணையத்தில் கிசுகிசுக்கப்படும்.. நெருக்கமான புகைப்படங்கள்! நிச்சயதார்த்தமே முடிந்ததா?

இருவரும் கைகோர்த்து பொதுவெளியில் செல்வது, நெருக்கமான தருணங்களைப் பகிர்ந்துகொள்வதைக் காட்டும் சில புகைப்படங்களும் காணொளிகளும் இந்தக் கதைக்கு மேலும் வலு சேர்த்தது.

Vinvizhi Leninton

28 வயதான பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேடன் ஸ்மித் 82 வயதான பிரெஞ்சு ஆடை வடிவமைப்புத் தொழிலதிபர் மிஷேல் லாமியோடு காதலுறவில் இருப்பதாகவும் இருவரும் நெருக்கமான இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இவர்கள் இருவரையும் இணைத்து இணையவாசிகள் பேசுவதோடு நிச்சயமே செய்துவிட்டார்கள் என்று தொடர்ந்து வதந்திகள் பரவி வருகிறது. இவர்கள் இருவரும் உண்மையிலேயே காதலிக்கிறார்களா?, அல்லது செயற்கை நுண்ணறிவு மீண்டும் தன் கைவரிசையைக் காட்டிவிட்டதா? என்ற சந்தேகமும் தற்போது எழுந்த நிலையில் இதற்கு ஒரு பதிலும் கிடைத்துள்ளது.

பிரபல ஹாலிவுட் நடிகரான வில் ஸ்மித்தின் மகன்தான் ஜேடன் ஸ்மித். இவர் தனது தந்தையுடன் 2006-ல் வெளியான 'தி பர்சூட் ஆஃப் ஹேப்பினஸ்' திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். அதன் பின்னர், 2010-ல் ஜாக்கி சானுடன் இணைந்து நடித்த 'தி கராத்தே கிட்' திரைப்படத்தின் மூலம் உலகளவில் அறியப்பட்டார். இதுமட்டுமின்றி இசைத்துறையிலும் சரி 'ஃபேஷன்' துறையிலும் சரி இவர் பதித்த கால் பரவலாக மக்களிடம் அவரைக் கொண்டுபோய் சேர்த்தது. பிரபலத்தின் குழந்தை என்பதால் ஜேடன் ஸ்மித் மீது புகழ் வெளிச்சம் பரவியவண்ணமே இருந்தது. மக்களின் பார்வையில் இருந்த வண்ணமே இருந்தார். இதுமட்டுமின்றி, 'ஐ லவ் யூ ரெஸ்டாரன்ட்' என்ற பெயரில் இவர் வீடற்றவர்களுக்கு இலவசமாக உணவும் அளித்து வருகிறார்.

Michèle Lamy

அவ்வப்போது, மாறுபட்ட தனது உடையால் உலகளவில் கவனத்தை பெற்று வருவார். தற்போது இவரை சுற்றி ஒரு வதந்தி பரவி வருகிறது. அதில் அவர், 82 வயதான பிரெஞ்சு ஆடை வடிவமைப்புத் தொழிலதிபர் மிஷேல் லாமியோடு காதல் உறவில் இருப்பதாக இணையத்தில் சலசலக்கப்பட்டு வருகிறது. இருவருக்கும் இடையே 54 வயது வித்தியாசம் இருப்பதாகக் கூறப்படுவது மட்டுமல்லாமல், சில பதிவுகள் அவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாகவும் கூறிவருகிறது. அவர்கள் இருவரும் கைகோர்த்து பொதுவெளியில் செல்வது, நெருக்கமான தருணங்களைப் பகிர்ந்துகொள்வதைக் காட்டும் சில புகைப்படங்களும் காணொளிகளும் இந்தக் கதைக்கு மேலும் வலு சேர்த்தது. இருப்பினும், இந்தக் கூற்றுகளில் எந்த உண்மையும் இல்லை என்ற செய்தி வெளியதாகியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து ஏபிசி 10 நியூஸ் நடத்திய உண்மை சரிபார்ப்பில், இந்தக் காதல் விவகாரம் ஜோடிக்கப்பட்ட ஒரு கதை என்றும் இது செயற்கை நுண்ணறிவினால் உருவாக்கப்பட்டவை என்றும் கூறி இந்த புகைப்படங்கள் அனைத்தும் போலியானவை என்றும் கூறியுள்ளது. மேலும், ஜேடனோ அல்லது லாமியோ தங்களது உறவையோ அல்லது நிச்சயதார்த்தத்தையோ உறுதிப்படுத்தவில்லை. இந்த விவகாரமானது நவம்பர் 9 அன்று வெளியான ஒரு X பதிவில், ஜேடன் ஸ்மித் லாமியின் ஆசிகளைப் பெறுவதற்காக அவரது வீட்டிற்குச் சென்றதாகக் கூறப்பட்டதிலிருந்து இந்த வதந்தி தொடங்கியுள்ளது. ஆரம்பத்தில் ஒரு சாதாரண புகைப்படமாக எல்லோராலும் பார்க்கப்பட்டது பின்னாளில் வதந்தியாக மாறியது.

Jadan smith

யார் இந்த லாமி?:

பிரெஞ்சு ஆடை வடிவமைப்புத் தொழில்முனைவோர் மற்றும் ஆடை வடிவமைப்பு உலகில் தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியவர்தான் மிஷேல் லாமி. ஆடை வடிவமைப்புத் துறைக்குள் நுழைவதற்கு முன்பு, லாமி பிரான்சில் சட்டம் பயின்று, குற்றவியல் பாதுகாப்பு வழக்கறிஞராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் லாமி, அமெரிக்க ஆடை வடிவமைப்பாளரான ரிக் ஓவன்ஸை திருமணம் செய்த்துள்ளார். ஆரம்பத்தில், 1990-களில் லாமி தனது ஆடை வணிகத்திற்காக வடிவங்களை உருவாக்க ஓவன்ஸைப் பணியமர்த்தியபோதுதான் இருவரும் முதன்முதலில் சந்தித்துள்ளனர். அவர்களின் தொழில்முறை உறவு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. மேலும் அவர்கள் 2006-ல் திருமணம் செய்துகொண்டனர்.

தற்போது, இணையத்தில் காரசாரமாக விவாதிக்கப்பட்டு வரும் இந்த விவகாரமானத் போலியானது என்று உறுதியாகியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.