மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி, இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்த ஜெயிலர் 2 திரைப்பட பணியில், தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தீபாவளிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் மாஸாக ஒரு வீடியோவை கிரியேட் செய்து பதிவிட்டுள்ளார் பிரதமர் அன்வர் இப்ராஹிம். மலேசியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற இன்ஃப்ளூயன்ஸரான தேவராஜ் டேவிட் என்பவருடன் சேர்ந்து அன்வர் இப்ராஹிம், ஜெயிலர் 2 பட பாணியில் ரீல்ஸ் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். டேவிட் இயக்கி இந்த வீடியோவில், மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் சிறப்புத் தோற்றத்தில் ஹீரோ போல மாஸாக நடித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி உள்ளது.
அந்த வீடியோவில் ஒரு இளைஞரை அவரது தாய் தீபாவளிக்கு சொந்த ஊருக்கு வருமாறு அழைக்கிறார். அந்த இளைஞர் தனது காரை சரிசெய்துகொண்டே.. தாயின் அழைப்பை மறுத்து சில சாக்குபோக்குகளை சொல்லி கடிந்து கொள்ளும் வகையில் பேசுகிறார். அப்போது “டேய் தம்பி” என்று தமிழில் ஒரு குரல். அப்போது தான் ஜெயிலர் 2 படத்தின் “தலைவரு நிரந்தரம்” (டைகர் முத்துவேல் பாண்டியன்) பாடலுடன் என்ட்ரி என்று கொடுக்கிறார் பிரதமர் அன்வர்.
அந்த காட்சிகள் அப்படியே ஜெயிலர் பட பாணியில் பக்காவாக உள்ளது. தலைவர் என்ற டைட்டில் கார்டுடன் என்ட்ரி கொடுக்கும் பிரதமர் அந்த இளைஞரிடம், தாயின் பேச்சுக்கு மதிப்பளித்து தீபாவளிக்கு சென்று வருமாறு சொல்கிறார். பின்னர் பிரதமர் அன்வர் படையப்பா ரஜினி ஸ்டைலில் தோளில் துண்டை போட்டுக்கொண்டு மகிழ்ச்சி என்று தலைவரின் வசனத்துடன் புறப்படுகிறார்.
இதையடுத்து இருவரும் காரில் பயணித்தபடி முறுக்கு சாப்பிட்டு, தமிழில் தீபாவளி நல்வாழ்த்துகளைப் பகிர்ந்துகொள்கின்றனர். ரஜினியின் திரைப்பட பாணியையும், தமிழ் கலாச்சாரத்தையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.
ஏற்கெனவே ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வரும் நிலையில், மலேசிய பிரதமரே அந்தப் படத்தின் பாணியில் வீடியோவில் தோன்றியிருப்பது ரஜினி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரதமர் அன்வர் இப்ராஹிமின் இந்த வித்தியாசமான தீபாவளி வாழ்த்து தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்