தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் ஒரு புரட்சி, ஒரு புனித பிம்பம், ஒரு மாஸ் ஹீரோவின் உச்சகட்ட உருவகம். அவரோட படங்கள் வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, ஒரு தலைமுறையின் உணர்வுகளை பிரதிபலிக்கும் கலாச்சார சின்னங்கள். இதுல ‘பாட்ஷா’ (1995) மற்றும் ‘படையப்பா’ (1999) ரெண்டும் ரஜினியோட கரியர்ல மிகப்பெரிய மைல்கற்கள். இந்த ரெண்டு படங்களும் தமிழ் சினிமாவோட வணிக வெற்றியையும், ரஜினியோட சூப்பர் ஸ்டார் இமேஜையும் உலக அளவுல உயர்த்தியவை. ஆனா, இந்த ரெண்டு படங்களையும் ஒப்பிடும்போது எது சிறந்தது? எது அதிகமா ரசிகர்களுக்கு கூஸ்பம்ப்ஸ் கொடுத்தது? எது ரஜினியை இன்னும் உயரத்துக்கு கொண்டு போனது? எது ரசிகர்களோட முதல் ஃபேவரைட்?
‘பாட்ஷா’வும், ‘படையப்பா’வும் தமிழ் சினிமாவின் Commercial elements-ஐ முழுமையாகப் பயன்படுத்திய படங்கள். ஆனா, இவை ரெண்டும் வித்தியாசமான அணுகுமுறைகளோடு எடுக்கப்பட்டவை. ‘பாட்ஷா’, இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவின் படைப்பு, ஒரு மாஸ் ஆக்ஷன் படமா, கேங்ஸ்டர் கதைகளோட புது டெம்ப்ளேட்டை அறிமுகப்படுத்தியது. இதுல ரஜினி ஒரு ஆட்டோ டிரைவரா தொடங்கி, பின்னர் ஒரு Don-ஆக மாறுறது, தமிழ் சினிமாவில் “மாஸ் எலிவேஷன் சீன்ஸ்”னு ஒரு புது ட்ரெண்டை உருவாக்கியது. பஞ்ச் டயலாக்ஸ், மாஸ் இன்ட்ரோ சீன்ஸ், தீவிரமான ஆக்ஷன், மற்றும் தேவாவின் பின்னணி இசை—இவை எல்லாம் ‘பாட்ஷா’வை ஒரு மாபெரும் வணிக வெற்றிப் படமாக மாற்றியது. “நான் ஒரு தடவை சொன்னா, நூறு தடவை சொன்ன மாதிரி”னு ரஜினி சொல்லும்போது, தியேட்டர்கள் அதிர்ந்த சப்தத்தை இந்த தமிழ்நாடே கேட்டது.
மறுபக்கம், ‘படையப்பா’ ஒரு முழுமையான குடும்ப டிராமாவா, Mass Elements கலந்து, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஒரு பிளாக்பஸ்டர் கொடுத்திருப்பார். இதுல ரஜினியோட கதாபாத்திரம் ஒரு கிராமத்து மனிதரா, நேர்மையான, ஆனா சவால்களை எதிர்க்கும் தைரியமான மனிதனா காட்டப்பட்டிருக்கும். இந்த படத்துல நீலாம்பரியாக ரம்யா கிருஷ்ணனின் வில்லத்தனமும், சிவாஜி கணேசனின் கெஸ்ட் ரோலும், படத்துக்கு கூடுதல் வலு சேர்த்தது. படையப்பா படத்துக்கு ஏர்.ரஹ்மானின் கொடுத்த மாஸ் பிஜிஎம் அந்நாள் வரை தமிழ் சினிமா கேட்டிராத பிரம்மாண்டம். இவையெல்லாம் சேர்ந்து படையப்பாவை உச்சத்துக்கு கொண்டுச் சென்றன.
‘பாட்ஷா’ ஒரு ஆக்ஷன்-மையமான, ஒரு தனி நபருடைய மாஸ் படமா இருக்கும்போது, ‘படையப்பா’ குடும்ப உணர்வுகளையும், பழிவாங்கல் கதையையும் சமநிலையில் கலந்து, பல தரப்பிலான ரசிகர் கூட்டத்தை ஈர்த்தது. Commercial Elements-களை பொறுத்தவரை, ‘படையப்பா’ ஒரு முழுமையான பொழுதுபோக்கு பேக்கேஜா இருக்கும், ஆனா ‘பாட்ஷா’ மாஸ் சீன்ஸ் மற்றும் டயலாக்ஸ் மூலம் ஒரு புது ட்ரெண்டை உருவாக்கியது.
ரஜினியோட படங்கள்னு வந்தா, கூஸ்பம்ப்ஸ் சீன்ஸ் இல்லாம இருக்காது. ‘பாட்ஷா’வுல இன்டர்வல் பிளாக்-ல ஸ்ட்ரீட் லைட்டின் மீது கட்டையை வீசி எறிந்து மாஸ் டயலாக் சொல்லி அவர் Don-ஆக மீண்டும் மாறும் அந்த காட்சி Cult Classic ரகம். அதெல்லாம் ரஜினி என்பவரைத் தவிர்த்து, வேறு யாராலும் கற்பனையில் கூட நடிக்க முடியாத காட்சி. இந்த சீன், தமிழ் சினிமாவில் “மாஸ் இன்டர்வல் பிளாக்”னு ஒரு புது கான்செப்டை உருவாக்கியது.
‘படையப்பா’வுல, ரஜினி - ரம்யா கிருஷ்ணனின் மோதல் தான் படமே. படத்தின் முதல் Scene ஆரம்பிப்பது மட்டும் தெரியும். பிறகு, படம் முடியும் போது தான், படையப்பனின் உலகத்தில் இருந்து நாம் வெளியே வருவோம். இண்டெர்வெல் காட்சியில், 'நான் உன்னை அடையாம விட மாட்டேன்' என்று ரஜினியை பார்த்து ரம்யா கிருஷ்ணன் சொல்லும் போது, பதிலுக்கு ரஜினி கொடுக்கும் அந்த சிரிப்பை கேட்டு, 'நான் இன்டர்வெல்லுக்கு போக மாட்டேன்..
படத்தை போடுங்க'-னு சொல்லி அடம் பிடித்தவர்கள் தான் அதிகம். குறிப்பாக, இரண்டாம் பாதியில், வயதான தோற்றத்தில், சிகார் உடன் ரஜினி வந்திருக்கும் காட்சி.. இன்றைய young directors கூட அப்படி எழுத முடியாது. ரஜினி என்ட்ரிக்கு முன்பு, ஒரு சிறிய பையன் கொண்டு வந்து லெட்டரை கொடுத்து விட்டு, படையப்பாவின் Signature Salute-ஐ போட்ட போது எழுந்த ரசிகர்களின் விசில் சப்தம், ரஜினி செய்த போது கிடைத்த விசில் சப்தத்துக்கு சற்றும் குறையாதது.. நீலாம்பரி ரஜினியை சவால் விடுற சீன்கள், அவரோட காதல் நிராகரிக்கப்படும் இடம், எல்லாமே தியேட்டரில் பயங்கர ரியாக்ஷனை உருவாக்கியது.
'பாட்ஷா’வுல கூஸ்பம்ப்ஸ் சீன்கள், ரஜினியோட கேங்ஸ்டர் இமேஜை மையமாக வைத்து கிடைத்தது. படையப்பாவின் அவருக்கு அப்படி ஒரு இமேஜ் கிடையாது. ஆனால், கூஸ்பம்ப்ஸ் சீன்களுக்கு சற்றும் குறைவிருக்காது. ஸோ, இந்த டாப்பிக்கில் படையப்பா தான் பெஸ்ட்.
ரஜினியோட சூப்பர் ஸ்டார் இமேஜை இந்த ரெண்டு படங்களும் வேற வேற விதமா உயர்த்தியிருக்கு. ‘பாட்ஷா’, ரஜினியை ஒரு “டெமி-காட்” ஸ்டேட்டஸுக்கு கொண்டு போனது. இந்த படம், ஒரு சாதாரண ஆட்டோ டிரைவரா இருக்குற ரஜினி, திடீர்னு ஒரு டானாக மாறுற கதையை சொல்லி, அவரோட மாஸ் இமேஜை உலக அளவுல நிலைநாட்டியது. “நான் ஒரு தடவை சொன்னா” டயலாக், ரஜினியோட பிம்பத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாத உயரத்துக்கு கொண்டு போனது. இந்த படம், பல படங்களுக்கு டெம்ப்ளேட்டாக மாறி, விஜய், அஜித், விக்ரம் போன்றவர்களோட மாஸ் படங்களுக்கு வழிகாட்டியாக இருந்தது.
‘படையப்பா’வுல, ரஜினி ஒரு கிராமத்து ஹீரோவா, நேர்மையான, ஆனா ஒரு ஆக்ரோஷமான குணமுள்ள ஒரு கதாபாத்திரமா தோன்றி, ரசிகர்களோட இமோஷனல் கனெக்ஷனை உருவாக்கினார். நீலாம்பரியோட மோதல், அவரோட குடும்ப பாசம், மற்றும் ஸ்டைலான டயலாக்ஸ், ரஜினியை ஒரு முழுமையான ஹீரோவா காட்டியது. இந்த படம், ரஜினியோட வயது மற்றும் முதிர்ச்சியை சரியா பயன்படுத்தி, அவரை ஒரு குடும்ப மனிதராகவும், மாஸ் ஹீரோவாகவும் உயர்த்தியது.
‘பாட்ஷா’ ரஜினியை ஒரு ஐகானிக் மாஸ் ஹீரோவா உருவாக்கியது, ஆனா ‘படையப்பா’ அவரோட இமேஜை ஒரு முழுமையான, குடும்ப உணர்வு கலந்த ஹீரோவா விரிவாக்கியது. ‘பாட்ஷா’வின் தாக்கம், ரஜினியோட இளம் வயது ரசிகர்களை மையமாக வைத்து இருந்தது, ஆனா ‘படையப்பா’ எல்லா வயதினரையும் ஈர்த்தது.
வணிக ரீதியா, ‘பாட்ஷா’ 1995-ல் வெளியாகி, அந்த காலத்துல தமிழ் சினிமாவோட மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்னா இருந்தது. இந்த படம் 185 நாட்கள் சென்னையில் ஓடியது, மேலும் இதோட வெற்றி, ரஜினியை தமிழ்நாட்டுல மட்டுமல்ல, இந்தியா முழுக்க பிரபலப்படுத்தியது. இதோட இன்டர்வல் சீன் மற்றும் பஞ்ச் டயலாக்ஸ், பல படங்களுக்கு முன்மாதிரியாக மாறி, தமிழ் சினிமாவோட மார்க்கெட்டை விரிவாக்கியது.
ஆனா, ‘படையப்பா’ வணிக ரீதியா இன்னும் பெரிய வெற்றியைப் பெற்றது. 1999-ல் வெளியான இந்த படம், அப்போதைய தமிழ் சினிமாவின் மிக உயர்ந்த வசூலை பெற்றது, கமல்ஹாசனின் ‘இந்தியன்’ படத்தின் ரெக்கார்டை முறியடிச்சது. இந்த படம், தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தெலுங்கு டப்பிங் வெர்ஷனான ‘நரசிம்ஹா’வும் பெரிய வெற்றி பெற்றது. இதோட, ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு, ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, மற்றும் கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கம், இந்த படத்தை ஒரு கல்ட் கிளாசிக்காக மாற்றியது.
ரஜினி ரசிகர்களிடையே ‘பாட்ஷா’வும் ‘படையப்பா’வும் எப்போதும் சூடான விவாதத்துக்கு உரியவை. ‘பாட்ஷா’வை, அதோட மாஸ் சீன்ஸ் மற்றும் ஐகானிக் டயலாக்ஸ் காரணமா, பலர் தமிழ் சினிமாவோட தலைசிறந்த படமா கருதுறாங்க. அதேசமயம், 'படையப்பா' இன்னும் ஒரு படி மேலே போய், இதற்கு மேல் ஒரு நடிகனால் உச்சத்துக்கு போகவே முடியாது எனும் உயரத்துக்கு கொண்டு போய் அவரை உட்கார வைத்தது.
இன்று வரை, அஜித், விஜய், சூர்யா, விக்ரம் போன்ற நடிகர்களால் இப்படியொரு Mass படத்தை கொடுக்கவே முடியவில்லை என்பதும் மறுக்கவே முடியாத உண்மை!.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.