Actress Radha Net Worth 
பொழுதுபோக்கு

"நடிகை ராதாவின் சொத்து மதிப்பு.." - தினமும் 'ரூ.10 டூ 15 லட்சம் வருமானம்' - தலை சுற்ற வைக்கும் முழு பட்டியல்!

இந்த ஸ்டூடியோவானது 1983-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் திறந்து வைக்கப்பட்டது.

Vinvizhi Leninton

சமீபத்தில் நடிகைகளும், சகோதரிகளுமான ராதா மற்றும் அம்பிகாவிற்கு இடையே காசோலை சம்பந்தப்பட்ட பிரச்சனை போய்க்கொண்டிருக்கிறது. குறிப்பாக, தனது அக்காவான அம்பிகாவின் மீது புகாரளித்ததோடு, அம்பிகா அதற்கு விளக்கம் கொடுத்தும் வருகிறார்.

இந்நிலையில், "ராதாவின் சொத்து மதிப்பு 5000 கோடி.. உண்மையை கூறினால் ராதா சிறை செல்ல நேரிடும்" என்று நடிகையும் ராதாவின் சகோதரியுமான அம்பிகா கூறியிருப்பது தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அப்படியானால், "ராதாவிற்கு எவ்வளவுதான் சொத்து இருக்கிறது?", "ஒரு நாளைக்கே இவ்வளவு சம்பளமா?' என்று கேட்கும் அளவிற்கு இருக்கிறதாம். தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரகங்களாக 80's காலகட்டங்களில் வலம் வந்தவர்கள்தான் நடிகைகளும், சகோதரிகளுமான அம்பிகா மற்றும் ராதா. இவர்கள் இருவரும் அப்போதுள்ள முன்னணி நடிகர்களுடன் நடித்து பெயர் பெற்ற நடிகைகளாக இருந்தனர்.

தற்போது இவர்களுக்கு இடையே பண மோசடி குறித்த மோதல் நிலவி வருகிறது. பிரபல நடிகை ராதா காவல் ஆணையர் அலுவலகத்தில் அவருடைய சகோதரி நடிகை அம்பிகா மற்றும் அவருடைய சகோதரர் அர்ஜுன் ஆகியோர் மீது 46 கோடி அளவில் செக் மோசடி செய்துவிட்டதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

ராதா அவருடைய வீட்டில் வசித்துக் கொண்டிருக்கும் பொழுது அவருடைய சகோதரியும் ஒன்றாக அவருடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது அவருடைய சகோதரி அம்பிகா மற்றும் அவருடைய சகோதரர் ஆகிய இருவரும் ஒன்றாக சேர்ந்து சிறுக சிறுக ஐந்து செக்குகளை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டதாக புகார் அளித்திருந்தார்.

ஒரு கட்டத்தில் வங்கி கணக்கை பரிசோதனை செய்த ராதா, தன்னுடைய ஐந்து செக்குகளில் இதுவரை 46 கோடி அளவில் பணம் மோசடி நடந்துள்ளதாக தெரிவந்துள்ளதாக கூறி புகாரினை அளித்தார்.

இந்த விவகாரத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை அம்பிகா, ராதாவின் சொத்து மதிப்பு 5000 கோடி எனவும் உண்மையை கூறினால் ராதா சிறைசெல்ல நேரிடும் என்றும் அவர் தெரிவித்திருந்தது சினிமா வட்டாரத்தில் பெரும் பேசு பொருளானது.

அப்படி எவ்வளவுதான் அவரது வருமானமாக இருக்கும்? என்று நெட்டிசன்கள் பலரும் தற்போது தேடிவருகின்றனர். அதிலும் முக்கியமாக, நடிகை ராதாவின் ஒரு நாள் சம்பளம் மட்டுமே ரூ.10-ல் இருந்து 15 லட்சம் வரை வருவதாக கூறப்படுகிறது.

80-களில் கொடி கட்டி பரந்த நடிகை ராதா, ஒரு கட்டத்தில் சினிமாவில் பெரிதும் தலைகாட்டாது இருந்தார். குறிப்பாக, தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிய நடன நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது, "ராதாவிடம் என்ன என்ன சொத்துக்கள் இருக்கிறது?" என்பதை சுருக்கமாக பார்க்கலாம்.

அவரது சொத்துக்களாவன: RR Gardens (ARS GARDEN), அதாவது இதிலிருந்துதான் பிரச்சனையே தொடங்கியது. முதலில் ARS GARDEN என்று இருந்த அந்த இடமானது பின்னாளில் RR Gardens-ஆக மாற்றப்பட்டுள்ளது.

இந்த ஸ்டூடியோவானது 1983-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் திறந்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த இடமானது எம்.ஜி.ஆரால் வழங்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

A என்றால் அம்பிகா, R என்றால் ராதா மற்றும் S என்றால் சரசம்மா என்று வைக்கப்பட்டிருந்த பெயர் பின்னாளில் A என்ற அம்பிகாவின் பெயரை எடுத்து விட்டு RR Gardens என்று மாற்றப்பட்டுள்ளது. அடுத்தது, UDS GROUP OF HOTELS (7 STAR), இது ராதா-வின் கணவருடைய ஹோட்டலாகும். இதுபோக, திருவனந்தபுரத்தில் ரெண்டு 7 ஸ்டார் ஹோட்டல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், 12 ஏக்கர் நிலம், விமானநிலையத்தின் பக்கத்தில் இடம், ஹோட்டல் இருபதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஒரு மாநாடு அரங்கம் இருப்பதாகவும் இதிலும் கூட தினமும் ரூ.10-15 லட்சம் வருவதாகவும் கூறப்படுகிறது. நடிகை ராதா, தற்போது இருக்கும் சொந்த வீடானது வசந்த மாளிகைய விட ரெண்டு மடங்கு பெரியது என்று கூறப்படுகிறது. வீட்டினை தவிர்த்து, கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள செங்கல் கிராமத்தில் ராதாவிற்கு ஒரு வீடு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், நடிகை ராதா கேரளாவில் உள்ள ஆலப்புழா-வில் சொகுசு விடுதியும், பள்ளியும் வைத்திருக்கிறாராம். மேலும், வால்பாறையில் ஒரு சொகுசு விடுதியும், மூணாறில் ஒரு சொகுசு விடுதியும் வைத்திருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது "நடிகை ராதாவிற்கு கண்டிப்பாக ஒரு நாள் வருமானம் லட்சத்தில்தான் இருக்கும்" என்று கூறப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்