தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சியான் விக்ரம் இருவரும் விரைவில் உறவினர்களாகப் போகிறார்களா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் ஆகியோரின் திருமணம் குறித்த தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இதன் பின்னணியில் பல சுவாரஸ்யமான குடும்ப உறவுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே ரஜினிகாந்தின் குடும்பத்துடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ள அனிருத், காவ்யா மாறனைத் திருமணம் செய்துகொண்டால், கலைஞர் கருணாநிதியின் குடும்பத்துடனும் உறவுமுறை ஏற்படுமா? அப்படியானால், நடிகர் விக்ரமுக்கும் ரஜினிகாந்துக்கும் என்ன தொடர்பு? இந்தக் குடும்ப உறவுகளின் பின்னணி என்ன என்பதைப் பார்க்கலாம்.
தமிழ் சினிமாவின் ராக் ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத்துக்கு, சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனுக்கும் நவம்பர் 11ஆம் தேதி கிரீஸ் நாட்டில் திருமணம் நடைபெற உள்ளதாகவும், அதையடுத்து நவம்பர் 21ம் தேதி சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் இரு குடும்பத்தினரிடமும் தீவிரமடைந்துள்ளது. திருமண வரவேற்பிற்கு தமிழக முதல்வர் விஜய், தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மற்றும் பல்வேறு திரைத்துறையினருக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன்.
இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் சினிமா கூட்டணி நிறைய ஹிட் படங்களை கொடுத்துள்ளனர். சமிபத்தில் வெளியான ஜெயிலர் 2 திரைப்படம் வரை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர்களுக்கு குடும்ப ரீதியாக மிக நெருங்கிய உறவும் உள்ளது. ரஜினிகாந்தின் மனைவி லதாரஜினிகாந்தின் இளைய சகோதரர் நடிகர் ரவி ராகவேந்திரா. இவரின் மகன் தான் இசையமைப்பாளர் அனிருத். ரஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்த் அனிருத்திற்கு அத்தை \ மாமா உறவுமுறை வரும்.
அனிருத்தின் இசைப்பயணத்தில் ஆரம்பத்திலேயே ரஜினிகாந்த் குடும்பத்தினர் முழு ஆதரவு தெரிவித்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல் நடிகர் விக்ரம் பெண் வீட்டாரான கலாநிதி மாறனின் உறவினர் ஆவர். கொஞ்சம் தூரத்து சொந்தம் தான்.. ஆனாலும் முக்கிய புள்ளிகள் என்பதால் எளிதில் பரிச்சயப்பட்ட நபர்கள் தான்.
நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதா 'கெவின் கேர்' குழுமத்தின் நிறுவனர், CK ரங்கநாதனின் மகன், மனுரஞ்சித் என்பவரை 2017ல் திருமணம் செய்து கொண்டார். மனுரஞ்சித், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மூத்த மகன் மு.க.முத்துவின் மகள் வழி பேரன் ஆவார். இவர்களின் திருமணம் நவ 1ல், சென்னை கோபாலபுரம் வீட்டில், கலைஞர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அப்போது நடிகர் விகரம் கலைஞரின் குடுப்பதிற்கு உறவுக்காரரானார்.
கலைஞர் கருணாநிதியின் அக்கா மகன் தான் முன்னாள் அமைச்சரும் முரசொலி பத்திரிகையின் ஆசிரியருமான முரசொலி மாறன். இவரின் மகன் தான் சன் குழும தலைவர் தயாநிதி மாறன் ஆவார். தற்போது நடக்கவிருக்கும் அனிருத் - காவ்யா மாறன் திருமணம் ரஜினிகாந்திற்கும் கலைஞரின் குடும்பத்திற்கும் புதிய உறவை ஏற்படுத்தும். அப்படி பார்த்தால் நடிகர் ரஜினியும் விக்ரமும் உறவினர்களாக ஆகிறார்கள். புரிகிறது கொஞ்சம் தூரத்து சொந்தம் தான், எல்லாமே பிரபலங்களாக இருக்கும் பட்சத்தில் சொல்ல வேண்டியுள்ளதே.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.