நடிகை சமந்தா - இயக்குநர் ராஜ் நிடிமொரு தம்பதிக்கு நேற்றைய தினம் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதுகுறித்து சமூக வலைத்தள பதிவு வெளியிட்டுள்ள சமந்தா, "எங்கள் அழகான ஆண் குழந்தை தேவ் நிடிமோரு 19.11.2026.
எங்கள் இதயங்கள் இதுவரை இல்லாத அளவுக்குப் பெருமகிழ்ச்சி அடைகின்றன." என எழுதியுள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. தெலுங்கில் 'ஏ மாய சேசாவே' படத்திலும் தமிழில் 'பாணா காத்தாடி' படத்திலும் பணியாற்றியவர். சூர்யா, விஜய், விக்ரம் உள்ளிட்ட தமிழ் சூப்பர் ஸ்டார்களுடனும் மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், ஜூனியர் என்டிஆர், ராம் சரண் ஆகிய தெலுங்கு நட்சத்திரங்களுடனும் இணைந்து நடித்திருக்கிறார்.
பாலிவுட்டிலும் தடம் பாதித்த சமந்தா சிடாடெல், தி ஃபேமிலி மேன் போன்ற இணையத் தொடர்களில் நடித்து நாடு முழுவதும் அறியப்படும் நடிகையாக வளர்ந்தார்.
கடைசியாக அவரே முதன்மை பாத்திரத்தில் நடித்த மா இன்டி பங்காரம் திரைப்படம் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
தனிப்பட்ட வாழ்க்கையில், சமந்தாவுக்கு நடிகர் நாக சைதன்யாவுடன் நடந்த திருமணம் விவாகரத்தில் முடிந்தது.
கடந்த டிசம்பர் 2025ல் இயக்குநர் ராஜ் நிடிமொருவுடன் தனது புதிய வாழ்க்கையைத் தொடங்கினார் சமந்தா. இந்த தம்பதிக்கு இப்போது தேவ் என்ற மகன் பிறந்துள்ளார்.
தாயான சமந்தாவை ரசிகர்களும் திரைத்துறையினரும் வாழ்த்தி வருகின்றனர்.
நடிகை நயன்தாரா "So so happy for uuuuu" என கமன்ட் செய்துள்ளார். அமலா பால் "So special" என வாழ்த்தியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.