தற்போது லைகா நிறுவனத்துடன் ‘ஜெய்லர்’ என்ற படத்தில் வயதான வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கத் தயாராகி வரும் நிலையில், தற்போது தலைவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது இரண்டாவது படத்தையும் ஒப்பந்தப்படுத்தியுள்ளார். இது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது என்றே சொல்லலாம்.
மேலும் படிக்க | வேறொரு பெண்ணுடன் இருந்ததால் ஆத்திரம்...தடுத்த மனைவி மீது கார் ஏற்றிய பிரபல தயாரிப்பாளர் கைது!
தகவல்களில் படி, லைகா தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன் ரஜினிகாந்தை நேரில் சந்தித்திருக்கிறார். அப்போது இரண்டு படங்களுக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க | பொங்கலுக்கு ரிலீசாகும் அஜித்தின் துணிவு.. ரெட் ஜெயண்ட் மூவிஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
அதில் சிறப்பு என்னவென்றா, வருகிற நவம்பர் 5ம் தேது இரண்டு படங்கள் குறித்த் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு படங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் படு குஷியில் துள்ளி குதித்து வருகின்றனர்.