திரைப்பட இயக்குனரும் பாடலாசிரியருமான கங்கை அமரன், சமீபத்தில் தனியார் யூ டியூ சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் நடிகர் குறித்து பேசிய கருத்து திரைத்துறையில் பேசுபொருளாகி உள்ளது. கங்கை அமரனின் மகன் பிரபல இயக்குனர் வெட்கட் பிரபு ஆவர். திரைத்துறையில் இப்போது பேசுபொருளாகி இருக்கும் கங்கை அமரனின் அந்த பேட்டி... நடிகர் குறித்து அவர் பேசிய கருத்து என்ன? இந்த பேட்டி வெளியான பிறகு ஏன் இத்தனை கவனம் பெற்றுள்ளது? இதன் பின்னணி என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.
“வெங்கட் பிரபுவோட வளர்ச்சி எல்லாம் பார்த்தா எப்படி இருக்கு” என்று நெறியாளரின் கேள்விக்கு, “நல்லா இருக்கு.. நல்லா திங்க் பண்றான்.. நல்ல ஐடியாஸ் இருக்கு” என்றார். தொடர்ந்து பேசிய அவர் “அவன் வேறு ஒரு படத்திற்கு நம்பி இருந்தான். அந்த படம் லேட் ஆனதால் அவருக்கு ஒரு படம் தாமதமாகிவிட்டது. அந்த நடிகர் யாரென்று குற்றம் சொல்ல வேண்டாம். அவர்கள் வாழட்டும். முதலில் கால்ஷீட் கொடுத்தார். இவர்கள் கதை எல்லாம் தயார் பண்ணி, அமெரிக்கா சென்று அதற்கு பண்ண வேண்டிய வேலை எல்லாம் செய்துவிட்டு வந்துவிட்டார்கள். அப்போது அந்த நடிகர் ஒரு படம் பண்ணார். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுவிட்டது. அந்த நடிகர் இந்த இயக்குனரோட இரண்டு படங்கள் முடித்துவிட்டு தான், அடுத்த படம் பண்ணுவேன் என்று சொல்லிவிட்டார்.
அதற்கு முன் வெங்கட் பிரபு படத்துக்கு கால்ஷீட் கொடுத்து விட்டார். நான் கேட்டேன், “இது உனக்கு தேவையா..? இதுக்கு மேல போய் அவன் கால்ல விழுந்து நீ நடிக்க வைக்கணுமா? எவ்வளவு பெரிய நடிகரா வேணா இருக்கட்டும்.. இருந்தாலும் நம்ம குடும்பத்துக்கு அவமானம் இல்லையா? உன் கதை அவனுக்கு சரியா வரும். உன்ன அவன் அவாய்ட் பண்ற.. நீயும் அவன அவாய்ட் பண்ணு. அவன் படம் நீ பண்ணக்கூடாதுன்னு சொன்னேன். அது எந்த நடிகர் என்று நீங்க யூகிச்சிக்கோங்க என்று குறிபிட்டார்.
அந்த நடிகர் சிவகார்த்திகேயனா..?
கங்கை அமரனின் இந்த நேர்காணலை வீடியோ வைரல் ஆனதை அடுத்து, அந்த நடிகர் சிவகார்த்திகேயன் என்று பலரும் குறிப்பிட்டு வருகின்றனர். ஆக்ஷன் பாணியில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி விஜய் நடிப்பில் 2024-ல் வெளியான படம் கோட். இந்த திரைப்படத்தில் விஜய் சிவர்த்திகேயனிடம் “துப்பாக்கியை புடிங்க சிவா” என சொல்லும் வசனம் இடம்பெற்றது, அது பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் அதற்கு சிவா, “நீங்க இதைவிட முக்கியமான வேலைக்கு போறீங்க.. அத நீங்க பாருங்க, இத நான் பாத்துக்குற" போன்ற வசனமும் வரும். இந்த வசனம் விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்கு வருவதை குறிப்பிட்டு வைக்கபட்டது. மேலும் “துப்பாக்கியை புடிங்க சிவா” என்பது, சினிமாவை SK பார்த்து கொள்வார் என்பதை குறிப்பிட்டு வைக்கபட்டது. இது விஜய் மற்றும் SK ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
அதைத்தொடர்ந்து இப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு சிவகார்த்திகேயனை வைத்து அறிவியல் சார்ந்த படம் இயக்கவுள்ளதாக அப்போது தகவல்கள் வெளியானது. அதன்பின்னர்தான் சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் என்ற மாபெரும் வெற்றி திரைப்படத்தை கொடுத்தார். அதைத்தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராசி, சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்தார். அமரன் வெற்றிக்கு பிறகு வெங்கட் பிரபு- சிவா கூட்டணி குறித்து எந்த அப்டேட்டும் வரவில்லை. அதனால் அந்த நடிகர் சிவகார்த்திகேயன் என்று பலரும் யூகத்தில் கருத்து தெரிவித்து வந்தனர்.
தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இயக்குனர் வெங்கட் பிரபு தனது X தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.அந்த பதிவின் மூலம் அது SK தான் என்பதை உறுதி செய்துள்ளார். அதில் “SK எனக்கு எப்போதுமே ஒரு அருமையான நண்பர்/சகோதரர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதில், நிறைய யூகங்களும் சர்ச்சைகளும் பரவி வருகின்றன. ஒரு தந்தையாக, சொந்த மகன் சம்பந்தப்பட்ட ஒரு படம் தாமதமாகும் போது, ஏமாற்றம் ஏற்படுவது இயல்புதான். அவருக்கு முழு விவரமும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, அதற்காக நான் அவரைக் குறை சொல்ல முடியாது. என் வேலை என்று வரும்போது நான் மிகவும் அமைதியானவன், என் தொழில்ரீதியான விஷயங்களை யாரிடமும் விரிவாகப் பேசுவதில்லை. பல்வேறு காரணங்களால் அந்தத் திட்டம் தொடங்க முடியவில்லை. அவ்வளவுதான். எந்த மனக்கசப்பும் இல்லை.
ஒரு நல்ல கதை கிடைத்தால், நான் மீண்டும் SK உடன் பணியாற்ற விரும்புகிறேன். தயவுசெய்து இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைப்போம் என்றும் நான் எனது அடுத்த வேலையில் மும்முரமாக இருக்கிறேனன் என்றும் குறிப்பிட்டார். மேலும் என் சகோதரன் சியோனுக்கு வாழ்த்துக்கள் என்றும் சிவாவின் அடுத்த படத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்