நடிகை மாளவிகா மோகனன் தற்போது வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடி வருகிறார். அவர் தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளன.
வெண்மணல் கடற்கரை, பனை மரங்கள் மற்றும் பொன்னிற சூரிய ஒளி பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில், அச்சிடப்பட்ட வடிவமைப்புடன் கூடிய ஸ்டைலான கடற்கரை உடையில் மாளவிகா மோகனன் தோன்றியுள்ளார். அவரது இயல்பான புன்னகை, தன்னம்பிக்கையான தோற்றம் மற்றும் விடுமுறை கொண்டாட்ட தருணங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
திரைப்படங்களைப் பொறுத்தவரை, தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்து வரும் மாளவிகா மோகனன் இந்த ஆண்டு வெளியான தி ராஜா சாப் திரைப்படத்தில் மாளவிகா நடித்திருந்தார். அந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாத நிலையில், தற்போது சர்தார் 2 மற்றும் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் பாக்கெட் நாவல் உள்ளிட்ட தமிழ்த் திரைப்படங்கள் அவரது கைவசம் உள்ளன. இந்தப் படங்கள் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இதற்கிடையில், தனது உடைத் தேர்வு குறித்து சமூக வலைதளங்களில் எழுந்த விமர்சனங்களுக்கு மாளவிகா மோகனன் பதிலளித்துள்ளார்.
அவர் கூறுகையில், "பிகினி அணிவதில் என்ன தவறு? வெளிநாடுகளில் நீச்சல் உடை அணிவது மிகவும் சாதாரணமான விஷயம். அதே நேரத்தில், நமது பண்பாடு மற்றும் கலாசாரத்தை மதிக்கவும் எங்களுக்கு தெரியும். எல்லை மீறாத கவர்ச்சி எது என்பது நடிகைகளுக்குத் தெரியும். எனவே எளிதாக யாரையும் விமர்சிக்காதீர்கள்" என்று தெரிவித்துள்ளார். மாளவிகா மோகனனின் இந்தப் பதில் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த கருத்து சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு பதிவுகள் பகிரப்பட்டு வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.