The waiting is over! முதல்வர் பிறந்த நாளுக்கு போஸ்ட் போட்டு வாழ்த்து தெரிவித்த திரிஷா! கேப்ஷனில் சொன்ன அந்த ஒரு Hint?

நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்து
trisha
Published on
Updated on
1 min read

தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்த நாளான நேற்று ஜூன் 22 தமிழகம் முழுவதும் அமைதியான முறையில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடக்க வேண்டும் என்று தமிழக  வெற்றி கழகம் சார்பாக அறிவுறுத்தப்பட்டது. மேலும் நேற்று சட்டமன்றத்தில் அரசியல் தலைவர்கள் அனைவரும் முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து தங்களது உரையை தொடங்கியிருந்தனர்.

மேலும் தமிழக திரை பிரபலங்களும் முதல்வர் விஜய் உடனான புகைபடங்களை பகிர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். தற்போது முதல்வர் விஜய்க்கு முதல் வாழ்த்து சொல்லி நடிகை த்ரிஷா நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். "எல்லாவற்றையும் அர்த்தமுள்ளதாக மாற்றுபவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்" எனும் கேப்சன் உடன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நேற்று நெட்டிசன்கள் அனைவரும் காத்திருந்த நடிகை திரிஷாவின் வாழ்த்து பதிவு மற்றும் புகைப்படம் தற்போது வெளியாகி வைரல் ஆகி வருகிறது. முதல்வர் விஜய்யின் INSTA பக்கத்தை த்ரிஷா UNFOLLOW செய்தாக செய்திகள் பரவி வந்தது. விஜயின் பிறந்த நாளிற்கு திரிஷா வாழ்த்து தெரிவிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அவர் விஜயை பின்தொடர்வதை நிறுத்தியிருப்பதாக வந்த செய்திகள், ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யத்தையும், விவாதத்தையும் ஏற்படுத்தியது.  ஆனால் இதெற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த வாழ்த்து பதிவு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது நெட்டிசன்கள் அந்த புகை படத்தை பகிர்ந்து தங்களுது வாழ்த்துக்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com