இயக்குனர் நெல்சன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான ஜெயிலர் முதல் பாகம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றதை தொடர்ந்து அதே கூட்டணியில் அதன் இரண்டாம் பாகம் “ஜெயிலர் 2” உருவாகியுள்ளது. நாளை (அக்டோபர் 15) வெளியாக உள்ள “ஜெயிலர் 2” திரைப்படம் தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ள ஜெயிலர் 2 படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்ததோடு பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல்வேறு பிரபலங்கள் இடம் பெற்றிருப்பதால் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தனக்கே உரித்தான தனது ஸ்டைலுக்கு சற்றும் பஞ்சமில்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலக்குவார் என கணிக்கப்பட்டது.
ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' படத்திற்கான முன்பதிவுகள் அக்டோபர் 10 தொடங்கி அதிவேகமாக மைல்கற்களை கடந்து வருகிறது. இந்த மாஸ் ஆக்ஷன் த்ரில்லர் படம் முதல் முன்பதிவிலையே ₹ 20 கோடியை தாண்டிவிட்டது, இந்த ஒரு பிரம்மாண்டமான தொடக்கம் பெரிய வசூல் அடிக்கும் என்பதற்கான அறிகுறியாக தெரிகிறது.
படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் காட்சிகள் படத்தின் மீதான ஆர்வத்தை கூட்டினாலும், ஆடியோ லான்ச் எதுவும் நடத்தப்படவில்லை. அதற்குப் பதிலாக, 'Jailer 2 - Rave' என்ற பெயரில் பிரத்யேக இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. வழக்கமாக பெரிய ஹீரோக்களின் படத்தின் ஆடியோ லான்ச் பெருமளவில் எதிர்பார்க்கப்படும் ஒன்று. அதிலும் குறிப்பாக ரஜினிகாந்தின் உரைக்கு ரசிகர் பட்டாளம் பெரியது. அவர் சொல்லும் ஒரு Punch dialogue, ஒரு சைகை அல்லது ஸ்டைல் போன்றவை பலராலும் ரசித்து கொண்டாடப்படும். இது போன்ற அம்சங்கள் வைரல் ஆகி அதுவே படத்தின் வெற்றிக்கும் சில நேரங்களில் உதவியுள்ளது.
ஆனால் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் அந்த தருணத்தை பலரும் மிஸ் செய்துள்ளனர். ஆடியோ லான்ச் நடத்தப்படாததிற்கு காரணம் தற்போதைய அரசியல் சூழல் என்றும் கூறப்படுகிறது. இப்போது உள்ள இந்திய மற்றும் தமிழக அரசியல் சூழலுக்கு எது பேசினாலும் அது வேறு மாதிரி திரித்து பரப்பப்படுகிறது என்பதால் கூட இதை தவிர்த்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.
காரணம் அரசியலுக்கும் ரஜினிக்கும் ரொம்ப தூரம் இல்லை என்பதே. தான் அரசியலுக்கு வருவதாக அறிவிப்பதற்கு முன்னே தொடந்த அரசியல் கணிப்புகள் முதல 2026 சட்டமன்ற தேர்தல் வரை இது தொடர்ந்தது. கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் அன்றைய முதல்வர் ஜெ ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். தமிழ் நாட்டு மக்களை வேறு யாராலும் காப்பாற்ற முடியாது என்று அவர் கூறியது அப்போது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு 2021 தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவித்த அவர்மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. தொடர் விமர்சனங்களுக்குப் பிறகு அரசியலுக்கு வரும் முடிவை இன்னும் சில காலத்துக்கு தள்ளி வைத்தார் ரஜினிகாந்த். சமீபத்தில் அந்த எண்ணம் இல்லை என்று முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது தமிழ்நாட்டில் வீரப்பன் காலத்தில் இருந்தே தொடர்ந்த விவாதமாகும். ஒரு ஆவணப்படத்தில் வீரப்பன் இப்படி ரஜினிகாந்த கூறியது இப்போது கவனம் பெற்று வருகிறது. அதில் அவர் பேசியதாவது ‘MGR பல கஷ்டங்களை வாழ்க்கையில் சந்தித்து இந்த நிலைக்கு வந்தார். அவரால் மக்களின் கஷ்டங்களை புரிந்து கொள்ள முடிந்தது. MGR போல் இன்னொருவர் வருவது கஷ்டம்தான். ஆனால் ரஜினிகாந்தை பார்க்கும் போது அவர் எம்ஜிஆர் போல வருவார் என்று எனக்கு தோன்றுகிறது. ரஜினி மிக எளிமையானவர். யாரையும் குறை சொல்லாதவர். தீவிர கடவுள் பக்தி கொண்டவர் என்றெல்லாம் புகழ்ந்த வீரப்பன், “ரஜினிகாந்தை பயன்படுத்திக் கொள்ள இங்கு நிறைய முதலைகள் காத்திருக்கிறது. அதனால் கவனமாக இருங்கள்” என்று வீரப்பன் எச்சரித்திருந்தார். இது அப்போது ஏறும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. யாரை அவர் குறிப்பிடுகிறார்? ரஜினிகாந்த் அரசியல் வருகையை வீரப்பன் ஏற்கிறாரா? என்ற விவாதங்கள் எல்லாம் எழுந்தன.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் MGR போல வந்திருப்பார் என்று வீரப்பன் அப்போது நம்பிக்கை தெரிவித்திருந்தார். ஆனால் இப்போது வரை அந்த முடிவை ரஜினி எடுக்கவில்லை, குறிப்பாக சமீபத்தில் எந்த அரசியல் தலையிடும் இல்லாமல் இருந்து வருகிறார் ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்