இன்றைய டிஜிட்டல் காலத்தில் உறவுகளின் வடிவம் மிக வேகமாக மாறிவருகிறது. ஒரு காலத்தில் நேரில் சந்திப்பு, உரையாடல், பகிர்வு ஆகியவற்றின் மூலம் வளர்ந்த உறவுகள் இன்று மெசேஜ், வீடியோ கால்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் தொடங்குகின்றன. ஒரு சாதாரண “Hiii” என்ற வார்த்தை கூட ஒரு ஆழமான தொடர்பின் தொடக்கமாக மாறி, அவர்கள் நம் வாழ்வின் முக்கிய நபராக மாறும் நிலைக்கு கூட செல்கிறது.
ஆனால் இங்கே ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது — இவ்வாறான Virtual relationship-கள் உண்மையான இணைப்பா? அல்லது ஒரு திரையின் பின்னால் உருவாகும் தற்காலிக நெருக்கமா?
இந்த தொழிலநுட்பத்தின் மிகப்பெரிய பலம் தூரத்தை நீக்குவதில் உள்ளது. வேறு நாடுகளில் இருந்தாலும், வேறு நகரங்களில் இருந்தாலும், சில நொடிகளில் நாம் ஒருவருடன் இணைந்து பேச முடிகிறது. நாம் வாழ்வில் முக்கியான உறவுகளை தேடுவதிலோ அல்லது அதை வலுப்படுத்துவதிலோ சில விஷயங்களை தெரிந்துகொளவதில் அவசியம் இருக்கிறது.
ஆனால் இந்த உறவுகளுக்கு வரம்புகளும் தேவையானதாக உள்ளது . Text-ல் உணர்ச்சிகள் முழுமையாக பிரதிபலிக்காது. ஒரு எமோஜி அல்லது ஒரு குறுகிய பதில் கூட தவறான புரிதல்களுக்கு வழிவகுக்கலாம். சந்திப்பு ,கண் தொடர்பு, குரல் சாயல் போன்றவை இல்லாததால் உணர்ச்சி ஆழம் குறையக்கூடும். மேலும், சமூக வலைதளங்களில் காணப்படும் profile-கள் எப்போதும் நிஜத்தை பிரதிபலிக்காது. சில நேரங்களில் நாம் ஒருவரின் online முகத்தை விரும்புகிறோம்; அவரின் உண்மையான குணாதிசியங்களை புரிந்துகொள்ள முற்படுவது குறைவே. Online-ல் ஒருவர் எப்போதும் எளிதில் தொடர்புகொள்ள முடியும் இடத்தில் இருப்பார், ஆனால் உணர்வுகள் ரீதியாக நெருக்கம் இருக்கிறதா என்றால் பெரும்பாலும் பதில் இல்லை.
மாறாக, Real connection என்பது நேரடி அனுபவம் மூலம் உருவாகும் ஒன்று. ஒரு சிரிப்பு, ஒரு பார்வை, ஒரு நேர்மையான உரையாடல். இவை எந்த video call-க்கும் மாற்றாக இருக்க முடியாது. ஒருவரின் அருகில் இருப்பது, அவரின் உணர்வுகளை நேரில் உணருவது, நம்பிக்கையை இயல்பாக கட்டியெழுப்ப உதவுகிறது. உண்மையான நெருக்கம் என்பது எமோஜி பகிர்வதில் இல்லை; நேரத்தை பகிர்வதில் மட்டுமே உள்ளது.
Virtual relationship-கள் முற்றிலும் தவறானவை அல்ல; அவை ஒரு தொடக்கம் மட்டுமே. ஆனால் ஒரு உறவின் ஆழமும் நிலைத்தன்மையும் ஒரு எமோஜி-ஆல் தீர்மானிக்கப்படாது. தொழில்நுட்பம் மனிதர்களை இணைக்கலாம்; ஆனால் உண்மையான இணைப்பு மனதில் உருவாகும் புரிதல், நம்பிக்கை, மற்றும் நேர்மையான பங்கேற்பில்தான் உள்ளது. சமூகவலைதள நட்புகள் ஒரு பக்கம் இருந்தாலும், டேட்டிங் APP எனும் கலாசாரம் மேலோங்கியள்ளது. அவை ஒரு படி மேலே சென்று பல டேட்டிங் செயலிகள் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் அபாயத்தைக் கொண்டுள்ளன. போலி கணக்குகளைப் பயன்படுத்தி டேட்டிங் ஆப் மூலம் பழகி ஏமாற்றும் சம்பவங்களும் பணம் பறிக்கும் மோசடிகளும் அதிகரித்துள்ளன. இதனால் ஏற்படும் பல குற்ற சம்பவங்கள் அன்றாட செய்திகளில் பார்க்கிறோம்.
உதாரணமாக இப்போது உள்ள பெரும்பாலான நட்புகள், காதல் கதைகள் ஆன்லைனில் தொடங்கி அங்கேயே சில மாதங்களில் முடிகிறது. அதற்கு காரணம் அவர்களின் புரிதலும் ஆன்லைன் வருகை, அவரின் நட்பு வட்டம், லேட் ரிப்ளை இதை பொறுத்தே ஏற்படுகிறது. இவையே நமக்கு தெரியும், ஆனால் அவர்களின் உண்மை சூழல் என்ன? குடும்ப சூழல், வேலை அழுத்தம், மனநிலை, அன்றாட வாழ்க்கை சிக்கல்கள் இவை அனைத்தும் முழுமையாக வெளிப்படுவதில்லை. ஒருவரின் reply தாமதமாக வந்தால், அதை நாம் அக்கறையின்மை என்று கருதலாம். ஆனால் அவர் வேலை அழுத்தத்தில் இருக்கலாம், குடும்பப் பிரச்சினையில் இருக்கலாம், அல்லது மன அழுத்தத்தில் இருக்கலாம். இதனால் நம்முடைய புரிதல் பல நேரங்களில் ஊகத்திலேயே அமைகிறது. ஊகத்திலேயே தொடரும்
ஒருவரின் முகபாவனை, குரல் சாயல், உடல் மொழி போன்றவை அவர்களின் உண்மையான மனநிலையை வெளிப்படுத்தும். ஆனால் virtual உறவுகளில் இவை இல்லாததால், நிஜ சூழ்நிலையை கருத்தில் கொள்ளாமல் முடிவுகள் எடுப்பது எளிதாகி விடுகிறது. அதனால் online relationship-கள் சில நேரங்களில் புரிதலியின்மை மற்றும் தேவையில்லாத எமோஷனல் bond -க்கு வழிவகுக்கின்றன. ஒருவரின் வாழ்க்கை முழுவதையும் அறியாமல், அவர்களின் ஆன்லைன் பிஹேவியர் மட்டுமே வைத்து முடிவெடுப்பது, உறவின் ஆழத்தை பாதிக்கக்கூடும். ஆன்லைன் உறவுகள் நவீன வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்டன என்றாலும் நாம் அதை கையாளுவதில் தான் உள்ளது அந்த உறவு நிலைப்பதிலும் துண்டிக்கப்படுவதிலும். நாம் நம்முடன் பழகும் அல்லது பக்கத்தில் இருக்கும் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அதனை அலசியப்படுத்தும் நிலைக்கு கொண்டு செல்கிற பட்சத்தில் அது ஏற்புடையது அல்ல.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.