thermal paper disadvantages 
லைஃப்ஸ்டைல்

பில் போடும் பேப்பரில் இப்படி ஒரு பிரச்சனையா!?? ஆண்களே உஷார்!!

Bisphenol S என்ற ரசாயனம் கொண்ட இந்த தெர்மல் பேப்பர்கள் உடனடியாக நமது சருமத்திற்குள் உட்புகும் திறன் கொண்டது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Saleth stephi graph

இப்போதெல்லாம் எதனால் எந்த மாதிரியான உடல் நலக் கோளாறுகள் வரும் என்றெல்லாம் சொல்ல முடியாது. எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அப்படி ஒரு அதிர்ச்சியூட்டும் தரவுகள்தான் தற்போது வெளியாகியுள்ளது.

அதாவது நாம் ஏடிஎம் செல்லும்போதோ, சூப்பர் மார்க்கெட் செல்லும்போது ஷைனிங்கான வெள்ளை நிற பில் பேப்பரை நாம் பார்த்திருப்போம், ஆனால் அந்த தாளால் உங்கள் விந்தணு பாதிக்கப்படும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஆம் Bisphenol S என்ற ரசாயனம் கொண்ட இந்த தெர்மல் பேப்பர்கள் உடனடியாக நமது சருமத்திற்குள் உட்புகும் திறன் கொண்டது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த Bisphenol S மிமிக் ஈஸ்ட்ரோஜன் போல செயல்பட்டு ஹார்மோன் சமநிலையை பாதிக்கும் தன்மை கொண்டது. பல துறைகளில் இந்த ரசாயனம் பயன்படுத்தப்படுவதால் பாதுகாப்பான ஒரு மாற்றாக விளம்பரப்படுத்தப்பட்டாலும், BPS பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளுடன் தொடர்புடையதாகும், அதிலும் குறிப்பாக விந்தணு எண்ணிக்கை குறைவு, நினைவாற்றல் பாதிப்பு மற்றும் மார்பக புற்றுநோய் வரை ஏற்பட வாய்ப்புண்டு”

அமெரிக்காவை சேர்ந்த தொண்டு நிறுவனமான Center Of Environmental Health நடத்திய ஆய்வில் தான் இதுகுறித்து கண்டறியப்பட்டுள்ளது.நாம் அன்றாடம் தொட்டு பயன்படுத்தும் தெர்மல் பேப்பர்களில் BPS அதிக அளவில் காணப்படுகிறது, BPS‑நிறைந்துள்ள பேப்பர்களை சில விநாடிகளுக்கு தொடுவதால் கூட 'safe harbor' வரம்பை மீறும் அளவுக்கு ஆபத்தானது ஆகும். இது குறித்து வணிக நிறுவனங்கள் உடனடியாக நுகர்வோருக்கு தெளிவான, எச்சரிக்கை வழங்க வேண்டியது அவசியம் ஆகும்.. கடை ஊழியர்கள் மற்றும் இந்த பேப்பர்களை அடிக்கடி கையாளும் தொழிலாளர்கள் அதிகமான ஆபத்துக்குள்ளாகலாம்”

மேலும் இந்த ஆய்வை மேற்கொண்ட Center Of Environmental Health நிறுவனம் இந்த BPS அதிகமாக இருக்கும் பேப்பரை நுகர்வோருக்கு விற்கு 90 நிறுவனங்கள் மீது வழக்கு போட்டுள்ளது, இதில் ‘டாமினோஸ், பர்கர் கிங், டேகோ பெல், விக்டோரியா சீக்ரட் ‘ உள்ளிட்ட மிக பிரபலமாகி நிறுவனங்கள் சிக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.