திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவரின் 17 வயது மகள் அதே பகுதியில் உள்ள ஜோலார்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வீட்டிலிருந்து தினமும் பள்ளிக்கு ஏரிக்கரை வழியாக நடந்து சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.
இதனை கவனித்த ஒட்டப்பட்டி கோனேரி குப்பம் பகுதியை சேர்ந்த பிரசாந்த் என்பவர் மாணவியை காதலிப்பதாக அவரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்த நிலையில் மாணவியை தினமும் பின் தொடர்ந்து தன்னை காதலிக்க சொல்லி வற்புறுத்தியுள்ளார். முரளியின் நண்பர்கள் மூன்று பேர் பிரசாந்த்யை காதலிக்க சொல்லி மாணவியை வற்புறுத்தி தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் மாணவியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பிரசாந்த்தையும் அவரது நண்பர்களையும் கண்டித்துள்ளனர். பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் மிரட்டல் விடுத்தும் பிரசாந்த் மற்றும் அவரது நண்பர்கள் மீண்டும் மீண்டும் மாணவியை காதலிக்க சொல்லி தொந்தரவு செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் மாணவி நேற்று மாலை பள்ளி வகுப்பை முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டு இருந்தார். அப்போது ஒட்டப்பட்டி கோனேரி குப்பம் பகுதியை சேர்ந்த பிரசாந்த் மாணவியிடம் “காதலிக்க சொன்ன ஓவரா பண்ற நீ எப்படி வீட்டுக்கு போறேன் நான் பாக்குற” என காதலிக்க வற்புறுத்தி பிரச்சனை செய்துள்ளார்.
மேலும் இதற்கு உடந்தையாக அவரது நண்பர்கள் அச்சமங்கலம் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் மகன் முகேஷ், புள்ளனேரி பகுதியைச் சேர்ந்த பழனி மகன் மேகநாதன் (25),அச்சமங்கலம் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் பரத்(25), ஆகியோர் பிரசாந்தை காதலிக்க மாணவியை வற்புறுத்தி தொந்தரவு செய்துள்ளனர்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியிடம் தகராறு செய்த பிரசாந்த் மற்றும் அவரது நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில் தொடர்ந்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் 4 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.