chicken tikka recipe in tamil chicken tikka recipe in tamil
லைஃப்ஸ்டைல்

சிக்கன் டிக்கா மசாலா.. ஹோட்டல்ல தான் சாப்பிடணும்-னு எதுவும் சட்டம் இருக்கா என்ன?

சிக்கன் டிக்கா மசாலா – இந்த உணவு இந்திய உணவகங்களில் மட்டுமல்ல, உலகின் பல நாடுகளில் உள்ள உணவகங்களிலும் மெனுவில் முதலிடம் பிடிக்கிறது. ஆனால், இதை வீட்டில் செய்ய முடியுமா? நிச்சயமாக!

மாலை முரசு செய்தி குழு

சிக்கன் டிக்கா மசாலா – இந்த உணவு இந்திய உணவகங்களில் மட்டுமல்ல, உலகின் பல நாடுகளில் உள்ள உணவகங்களிலும் மெனுவில் முதலிடம் பிடிக்கிறது. ஆனால், இதை வீட்டில் செய்ய முடியுமா? நிச்சயமாக!

வீட்டில் சிக்கன் டிக்கா மசாலா செய்யும் முறை

தேவையான பொருட்கள்:

  • கோழிக்கறி (மார்பு பகுதி) - 500 கிராம் (துண்டுகளாக நறுக்கியது)

  • தயிர் - 1 கப்

  • இஞ்சி-பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

  • மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி

  • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

  • கரம் மசாலா - 1 தேக்கரண்டி

  • எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி

  • உப்பு - தேவையான அளவு

  • தக்காளி - 2

  • வெங்காயம் - 1 (நறுக்கியது)

  • கிரீம் அல்லது முந்திரி விழுது - 1/4 கப்

  • கசூரி மேத்தி - 1 தேக்கரண்டி

  • கொத்தமல்லி இலைகள் - அலங்காரத்துக்கு

  • எண்ணெய் - 2 டீ ஸ்பூன்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தயிர், இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த் தூள், மஞ்சள், கரம் மசாலா, எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். இதில் கோழிக்கறி துண்டுகளைச் சேர்த்து, குறைந்தது 2 மணி நேரம் ஊறவைக்கவும் (பிரிட்ஜில் வைப்பது நல்லது).

ஊறவைத்த கறியை ஓவனில் (200°C-ல் 15-20 நிமிடங்கள்) அல்லது கிரில்லில் சுடவும். இது புகை சுவையைத் தரும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும். பின்னர் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்.

தக்காளி, மிளகாய்த் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை வேகவிடவும்.

கிரீம் அல்லது முந்திரி விழுது சேர்த்து, கிரேவி கெட்டியாகும் வரை குறைந்த தீயில் வேகவிடவும். கசூரி மேத்தி சேர்த்து கிளறவும்.

பிறகு, சுட்ட கோழிக்கறி துண்டுகளை கிரேவியில் சேர்த்து, 5-7 நிமிடங்கள் மிதமான தீயில் வேகவிடவும். அவ்வளவு தான்.. நம்ம டிஷ் ரெடி!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.