Early morning sex  
லைஃப்ஸ்டைல்

அதிகாலையில் உடலுறவு வைத்துக் கொள்வது சிறந்ததா? அறிவியல் சொல்வது என்ன?

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான பாலியல் இச்சைகள் இருக்கலாம், ஆனால் அவற்றை...

மாலை முரசு செய்தி குழு

காதல் கொண்ட இணையரின் வாழ்க்கையில் ஆரோக்கியமாக பின்பற்றப்படவேண்டிய ஒரு நடைமுறை என்றால் அது உடலுறவுதான். உடலியல் தேவை என்பது மிக இயற்கையானது மேலும் ஆண் பெண் இருபாலருக்கும் சம அளவில் தேவையான ஒன்று. ஒரு நல்ல காதலுக்கு, புரிதல், நேரம், அன்பு, ஈர்ப்பு இவையெல்லாம் எவ்வளவு அவசியமோ அந்த அளவுக்கு காமமும் அவசியம். அது பார்ட்னர்கள் இருவரின் விருப்பு வெறுப்புகள் சங்கமிக்கும் ஒரு இடம், கவனமாக கையாள வேண்டிய ஒரு இடமும் ஆகும்.

நீங்கள் உடலுறவை முறையாகக் கையாண்டால் நிறைய ஆரோக்கிய பலன்களை பெறலாம் என்பது உங்களுக்கு தெரியுமா!? ஆம்… முறையான பாதுகாப்பான உடலுறவின் மூலம் நிறைய ஆரோக்கிய பலன்கள் உண்டு என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், தொடர்ந்து உடலுறவில் ஈடுபடுவது ஆரோக்கியத்தை பாதிக்காதா? என்ற கேள்வி எழுதுவது பொதுவான ஒன்றுதான். 

ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான பாலியல் இச்சைகள் இருக்கலாம், ஆனால் அவற்றை முறையாக உங்கள் துணையுடன் பேசி புரிந்துகொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.  அதுமட்டுமின்றி அன்புகொண்ட மனிதர்களிடம் உடல் ரீதியாக தொடர்பு கொள்ளுதல்,  காதலில் மிகவும் சிறப்பான அம்சமாகும். 

எந்த நேரம் உகந்தது!?

உங்களுக்கு வசதியான எல்லா தருணங்களும் உகந்த தருணம் தான்.  ஆனால் சிலருக்கு அதிகாலையில் உடலுறவு கொள்வது பிடிக்கும், சிலர் இரவு நேரத்தை மிகவும் விரும்புவார்கள். இன்னும் சிலர், வேலைக்கோ அல்லது வெளியிலோ செல்வதற்கு முன்பு உடலுறவுகொள்வதை விரும்புவார்கள். இவ்வாறாக ஒவ்வொருவருக்கு ஒரு மாதிரியான விருப்பங்கள் தோன்றலாம்.

காலையில் உடலுறவு கொள்வதன் பலன்கள்!!

ஹார்மோன் சமநிலை - காலையில் நீங்கள் உடலுறுவு கொள்ளும்போது, நீங்கள் மிகவும் சுறுசுறுப்புடன் செயல்படக்கூடிய  வாய்ப்புகள் அதிகம் உண்டு. காலை நேரத்தில் உடலுறவு கொள்ளுவதால் ஏற்படும் முக்கிய நன்மைகளில் ஒன்று ஹார்மோன்களின் அளவில் ஏற்படும் உயர்வுதான். குறிப்பாக ஆண்களுக்கு, காலை நேரத்தில் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகமாக இருக்கும் இதனால் உங்கள் உடலுறவு சிறப்பானதாக அமைய வாய்ப்பிருக்கிறது. 

காலை நேர உடலுறவு ஒரு ஆற்றல் மிக்க மனநிலையை உங்களுக்கு வழங்குகிறது. காலியில் நீங்கள் உடலுறவில் ஈடுபடும்போது உங்கள் உடலில் உள்ள எண்டார்ஃபின்கள், ஆக்சிடோசின் மற்றும் டோபமின் போன்ற ‘மகிழ்ச்சி ஹார்மோன்கள்’ வெளியாவதால் உங்களுக்கு நாள் முழுவதும் நேர்மறையான மனநிலையை அளிக்கக்கூடும்.

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வில், காலை நேரத்தில் உடலுறவு கொள்ளும் நபர்கள் நாள் முழுவதும் அதிகமான மகிழ்ச்சி நிலையை அனுபவிக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது.

காலை நேர நெருக்கம் மிகவும் அலாதியான மனநிலையை உங்களுக்குள் உருவாக்கும். அமைதியான மற்றும் தொந்தரவுகளற்ற சூழலை உணர்வீர்கள். அன்றை நாளின் பரபரப்புகள் இல்லாததால், தம்பதிகள் ஒருவர் மீது ஒருவர் முழுமையாக கவனம் செலுத்த முடிகிறது, இதனால் உணர்ச்சி ரீதியான பிணைப்பு வலுவடைகிறது.இன்னும் சொல்லப்போனால்  உங்களுக்கு பிடித்த ஒருவரை அருகில் வைத்துக்கொண்டு  எழுந்து, நாளை இன்பமான தருணத்துடன் தொடங்குவது மிகவும் இனிமையான அனுபவம் அல்லவா!??

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.