கடலிலேயே வாழும் பழங்குடி மக்கள்  கடலிலேயே வாழும் பழங்குடி மக்கள்
லைஃப்ஸ்டைல்

நிஜத்தில் வாழும் அவதார் மனிதர்கள்! கடல்தான் இவங்க கோட்டையே.. அசாதாரண திறமையோடு இருக்கும் பழங்குடிகள்

கடலுக்கு அடிலேயும்.. கடலுக்கு மேலேயும் மட்டும் வாழும் பழங்குடிகள். நிலத்தின் பக்கமே பல ஆண்டுகளாக வராமல் இருப்பதன் பின்னணி.

Vinvizhi Leninton

பழங்குடி மக்களில் நாம் பலரை பார்த்திருப்போம். ஆடை அணியாதவர்கள், இன்னும் கற்காலத்திலேயே இருக்கும் பல பழங்குடிகளை நாம் பார்த்திருப்போம். ஆனால் இவர்கள் வித்தியாசமானவர்கள் . 'கடல் நாடோடிகள்' அல்லது 'கடல் ஜிப்சிகள்' என்றும் அழைக்கப்படும் பஜாவ் மக்கள், தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள சுலு தீவுகள் பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் நிலப்பரப்பு என்ற ஒன்றையே காணாத ஒரு பழங்குடி மக்கள். மேலும், அவர்களின் நாடோடி கடல் வாழ்க்கை முறையின் காரணமாக, இந்தப் பழங்குடியினர் காலப்போக்கில் மலேசியா, புருணை மற்றும் இந்தோனேசியாவின் கடற்பரப்புகள் வரை பரவி காணப்படுகிறார்கள். பஜாவ் மக்கள் தங்களின் அசாதாரணமான ஆழ்கடல் மூழ்கும் திறன்களுக்காகப்  புகழ்பெற்றவர்கள்.

சாதாரணமாக நாம் பயன்படுத்தும் எந்த ஒரு நவீன நீர்மூழ்கி உபகரணங்களைப் பயன்படுத்தாமலேயே , அவர்களால் 20 முதல் 30 மீட்டர் ஆழம் வரை கடலில் மூழ்கி , ஐந்து முதல் 13 நிமிடங்கள் வரை மூச்சை அடக்கி வைத்திருக்கக்கூடிய சாதாரண திறமை உடையபவர்கள். பஜாவ் பழங்குடி மக்களின் மண்ணீரல் , சராசரியாக, சாதாரண மனிதர்களின் மண்ணீரலை விட 50% பெரியது. இது, அவர்கள் ஆழமாகவும் நீண்ட நேரமும் நீரில் மூழ்கி நீந்துவதற்கு உதவும் ஒரு இயற்கையான தகவமைப்பு ஆகும். விஞ்ஞானிகள் இந்தத் தகவமைப்பிற்கு PDE10A மரபணுவில் உள்ள ஒரு மாறுபாட்டைக் காரணமாகக் கூறுகின்றனர். இந்த பஜாவ் பழங்குடியின மக்கள், லெபா-லெபா எனப்படும் மரக் கம்ப வீடுகளிலும், படகு வீடுகளிலும்தான் வசிக்கின்றனர். அவர்களின் வாழ்க்கை பெரும்பாலும் படகிலேயேதான் இருக்கிறது. இந்த மக்கள் பருவ மாற்றங்களைப் பின்பற்றி, அவர்கள் தீவுகளுக்கு இடையே இடம்பெயர்கின்றனர். உணவு, வருமானம் மற்றும் அன்றாடத் தேவைகளுக்காக முற்றிலும் இந்த கடலை மட்டுமே சார்ந்திருக்கின்றனர். மீன்பிடித்தல் என்பது அவர்களின் வாழ்க்கைமுறையில் முக்கியமான ஒன்றாக திகழ்வதோடு, அவர்களின் பண்பாட்டுப் பாரம்பரியத்தினைப் பிரதிபலிப்பாகவும் விளங்குகிறது. இவர்கள் வாழ்வில் இரண்டாம் நிலைக்கான வருமானம் தேவைப்படும்போது மட்டுமே இவர்கள் நிலத்திற்கு சென்று தாங்கள் பிடித்த மீன்களை விற்பனை செய்கின்றனர்.

இவர்கள் சந்தித்து வரும் சவால்களை சமாளிப்பதற்காக, பஜாவ் தலைவர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் பரிந்துரைப்பதன் மூலமும், பாரம்பரிய அறிவுக்கும் நவீனத் திறன்களுக்கும் இடையே ஒரு சமநிலையை ஊக்குவிப்பதன் மூலமும் தங்கள் கலாச்சாரத்தைப் பாதுகாக்கப் பணியாற்றி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.