pudukkottai tourist places pudukkottai tourist places
லைஃப்ஸ்டைல்

புதுக்கோட்டையில் சுற்றிப்பார்க்க இவ்ளோ விஷயங்கள் இருக்கா?

புதுக்கோட்டை மாவட்டம் தமிழ்நாட்டின் பழமையான மாவட்டங்களில் ஒன்று, வரலாறு, கலாச்சாரம், ஆன்மீகம், இயற்கை அழகு எல்லாம் கலந்து ஒரு அட்டகாசமான சுற்றுலா இடமா இருக்கு

மாலை முரசு செய்தி குழு

புதுக்கோட்டை மாவட்டம் தமிழ்நாட்டின் பழமையான மாவட்டங்களில் ஒன்று, வரலாறு, கலாச்சாரம், ஆன்மீகம், இயற்கை அழகு எல்லாம் கலந்து ஒரு அட்டகாசமான சுற்றுலா இடமா இருக்கு. இந்த மாவட்டம் சோழர்கள், பல்லவர்கள், பாண்டியர்கள், முத்தரையர்கள், தொண்டைமான்கள், விஜயநகர மன்னர்கள் ஆகியோரோட ஆட்சி காலத்து பெருமைகளை இன்னும் பறைசாற்றுது. கோயில்கள், குடைவரைக் கோவில்கள், கோட்டைகள், ஓவியங்கள், இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள், மற்றும் தொல்லியல் சிறப்பு மிக்க இடங்கள் எல்லாம் இங்க ஒரு முழு பேக்கேஜா இருக்கு.

1. சித்தன்னவாசல் குடைவரைக் கோவில்

சித்தன்னவாசல் புதுக்கோட்டையோட முத்து மாதிரி ஒரு இடம். புதுக்கோட்டையிலிருந்து 17 கி.மீ. தொலைவில், அன்னவாசல் செல்லும் பாதையில் இந்த இடம் அமைந்திருக்கு. 2-ஆம் நூற்றாண்டு முதல் 9-ஆம் நூற்றாண்டு வரை ஜைன மதத்தோட தொடர்பு உள்ள இந்த குடைவரைக் கோவில், அற்புதமான ஓவியங்களுக்கும், பாறைகளில் செதுக்கப்பட்ட சமண படுக்கைகளுக்கும் பிரபலம்.

இங்க இருக்குற ஓவியங்கள் பல்லவர் காலத்து கலைப்படைப்புகளோட சிறந்த எடுத்துக்காட்டு. தாமரை மலர்கள், விலங்குகள், மனித உருவங்கள் எல்லாம் இயற்கையான நிறங்களில் வரையப்பட்டு, இன்னும் பார்ப்பவர்களை பிரமிக்க வைக்குது. தொல்லியல் துறையோட பராமரிப்பில் இருக்குற இந்த இடத்துக்கு, இந்தியர்களுக்கு 5 ரூபாயும், வெளிநாட்டவர்களுக்கு 100 ரூபாயும் நுழைவு கட்டணம்.

2. திருமயம் கோட்டை

விஜய ரகுநாத சேதுபதி 1687-ல் கட்டிய திருமயம் கோட்டை, புதுக்கோட்டையிலிருந்து 30 கி.மீ. தொலைவில், மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருக்கு. இந்த கோட்டை தொல்லியல் துறையோட பராமரிப்பில் இருக்கு. பழைய காலத்து மன்னர்கள் எதிரி நாட்டு படையெடுப்புகளை தடுக்கவும், குடும்பத்தை பாதுகாக்கவும் கட்டிய இந்த கோட்டை, இப்போ சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு முக்கிய இடமா இருக்கு. கோட்டையோட கம்பீரமான கட்டிடக்கலை, வரலாற்று ஆர்வலர்களை கவருது.

3. ஆவுடையார் கோவில்

புதுக்கோட்டையிலிருந்து 60 கி.மீ. தொலைவில் இருக்குற ஆவுடையார் கோவில், ஆத்மநாத சுவாமிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இங்க இருக்குற முழு உருவச் சிலைகளும், கருங்கற்கால் வேலைப்பாடுகளும் பார்ப்பவர்களை பரவசப்படுத்தும். இந்த கோவிலோட கூறை செம்பினால் ஆனது, இது சிதம்பரம் நடராஜர் கோவிலோட பொன் கூறையோட ஒப்பிடப்படுது. கலை மற்றும் ஆன்மீக ஆர்வலர்களுக்கு இது ஒரு முக்கிய இடம்.

4. குன்றாண்டார் கோவில்

திருக்குன்றக்குடி என கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுற இந்த இடம், புதுக்கோட்டையிலிருந்து 40 கி.மீ. தொலைவில் இருக்கு. 775-ல் பல்லவ மன்னன் நந்திவர்மன் காலத்தில் கட்டப்பட்ட குடைவரைக் கோவில் இங்க இருக்கு. மலையின் மேல் ஒரு சிறிய முருகன் கோவிலும், கல்யாண மண்டபமும் இருக்கு. இந்த மண்டபத்துல குதிரைகள் பூட்டிய வடிவில் அமைந்த சிற்பங்கள் செம அழகு. இயற்கை எழில், வரலாறு, ஆன்மீகம் எல்லாம் ஒருங்கே அனுபவிக்கலாம்.

5. முத்துக்குடா அலையாத்தி காடுகள்

புதுக்கோட்டையோட இயற்கை அழகை ரசிக்கணும்னா, முத்துக்குடா அலையாத்தி காடுகள் ஒரு செம இடம். கடலுக்குள் அமைந்த இந்த காடுகள், பசுமையும், இயற்கையான கால்வாய்களும் கொண்டு சுற்றுலாப் பயணிகளை கவருது. படகில் சென்று இந்த காடுகளை சுற்றி பார்க்கலாம், மணல் திட்டுகளில் ஓய்வெடுக்கலாம். புயல் நேரங்களில் கூட அலைகளின் வேகத்தை குறைக்குற இந்த காடு, இயற்கையோட முக்கியத்துவத்தை காட்டுகிறது.

நாம சாதாரணமா நினைக்கும் இடமெல்லாம் நம் நினைவுகளில் நீங்கா இடம் பிடிக்கும் அளவுக்கு நினைவுகளை விதைத்துச் சென்றுவிடும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.