postal life insurance Admin
லைஃப்ஸ்டைல்

குறைந்த ப்ரீமியம்.. இரட்டிப்பு லாபம் - அஞ்சலக PLI திட்டம் பற்றி தெரியுமா?

நீங்கள் சேமிக்கும் ஒவ்வொரு ஆயிரம் ரூபாய்க்கும் 52 ரூபாய் போனஸ் வழங்கப்படுகிறது.

Anbarasan

அஞ்சலக சேமிப்புகள் அனைத்துமே, குறைந்த சேமிப்பில் கணிசமான லாபத்தை தரும் திட்டங்கள் தான். அந்த வகையில் இன்று, அஞ்சலகத்தில் உள்ள ஒரு PLI திட்டம் குறித்து தான் பார்க்கப்போகிறோம். PLI என்பது வேறொன்றுமல்ல, அஞ்சலக ஆயுள் காப்பீட்டு திட்டங்கள் தான். பிற ஆயுள் காப்பீட்டு திட்டங்களை காட்டிலும், அஞ்சலகத்தில் உள்ள இவ்வகை திட்டங்கள், சிறந்த லாபத்தை தருகின்றது.

மேலும் படிக்க: இந்த லிங்கை கிளிக் பண்ணுங்க.. "மாலை முரசு" வழங்கும் IPL 2025-ன் "Special பரிசை வெல்லுங்க! இது நீங்க எதிர்பார்க்காத வேற லெவல் பரிசுங்க.. மிஸ் பண்ணிடாதீங்க!

லைப் இன்சூரன்ஸ என்று வந்தாலே, பலரும் தமது காலத்திற்கு பிறகு மற்றவருக்கு உதவும் ஒரு திட்டமாகத் தான் பார்க்கிறார்கள். இதில் அந்த வசதியும் உள்ளது என்றலும், ஆயுள் காப்பீட்டு திட்டங்கள், சேமிப்பை துவங்குபவர்களுக்கும் பெரிய அளவில் உதவும். அதிலும் குறிப்பாக, இன்று நாம் பார்க்கவுள்ள இந்த அஞ்சலக திட்டம் பல நன்மைகளை கொண்டுள்ளது.

அஞ்சலக ஆயுள் காப்பீட்டு திட்டம்

அஞ்சலகத்தை பொறுத்தவரை பல வகையான ஆயுள் காப்பீட்டு திட்டங்கள் உள்ளது, அதில் ஒன்று தான் எண்டோவ்மென்ட் அஷ்யூரன்ஸ் (சந்தோஷ்). அஞ்சல் துறை, மொத்தம் 6 வகையான ஆயுள் காப்பீட்டு திட்டங்களை வழங்குகிறது, அதில் இந்த சந்தோஷ் திட்டம் பல சிறப்புகளை கொண்டுள்ளது.

மேலும் படிக்க: இரண்டே வருட சேமிப்பு.. சிறப்பான லாபம் தரும் MSSC திட்டம் - யாரெல்லாம் இணையலாம்?

எப்படி இணைவது? யாரெல்லாம் இணையலாம்?

இந்த திட்டத்தை பொறுத்தவரை உங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகம் சென்று, வேண்டிய படிவங்களை பூர்த்தி செய்தாலே போதும். இந்த திட்டத்தில் உங்களது 19வது வயது முதல் 55வது வயது வரை இணைய முடியும். மேற்கூறிய வயதுள்ள இந்திய குடிமக்கள் யாராக இருந்தாலூம் இந்த திட்டத்தில் இணைய முடியும்.

சந்தோஷ் எப்படி செயல்படுகிறது?

உங்களது 19வது வயதில் இந்த திட்டத்தில் நீங்கள் இணைகிறீர்கள் என்றால், 35, 40, 45, 50, 55, 58 மற்றும் 60 என்ற வயது வரும்போது, இந்த திட்டம் முழுமையடைவது போல உங்களால் அதை வகுத்துக்கொள்ள முடியும். அதே போல நீங்கள் உங்கள் 50வது இந்த திட்டத்தில் இணைகிறீர்கள் என்றால், 55, 58 அல்லது 60வது வயதில் இந்த திட்டம் முழுமையடையும்.

சந்தோஷ் வட்டி கணக்கீடு

நீங்கள் உங்கள் 20வது வயதில் 2,00,000 லட்சம் முதலீட்டோடு இந்த திட்டத்தில் இணைகிறீகள் என்று வைத்துக்கொள்ளலாம். மேலும் உங்களது 55வயதில் இந்த திட்டம் முதிர்வு பெறுவது போல நீங்கள் இதில் இணைந்துள்ளீர்கள் என்றால், 35 ஆண்டுகளின் முடிவில், அதாவது உங்களது 55வது வயதில் டெர்மினல் போனஸ் மற்றும் வட்டியுடன் இணைந்து உங்களக்கு சுமார் 5,64,000 ரூபாய் கிடைக்கும்.

மேலும் படிக்க: சேமித்த பணத்திற்கு 3 மடங்கு லாபம் - இந்த அஞ்சலக திட்டத்தில் யாரெல்லாம் இணையலாம் தெரியுமா?

சந்தோஷ் திட்டத்தின் பலன்கள்

இந்த திட்டத்தை பொறுத்தவரை நீங்கள் சேமிக்கும் ஒவ்வொரு ஆயிரம் ரூபாய்க்கும் 52 ரூபாய் போனஸ் வழங்கப்படுகிறது. மேலும் அதிக ஆண்டுகள் இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்ய செய்ய அதற்கான வட்டி விகிதமும் கூடுகிறது.

மொத்தமாக உங்களால் இந்த திட்டத்தில் பணத்தை சேமிக்க முடியவில்லை என்றாலும், மாதந்தோறும் சிறு தொகையை உங்களால் சேமிக்க முடியும். இருப்பினும், திட்டம் தொடங்கும் பொழுதே நீங்கள் மாதந்தோறும் சேமிக்க வேண்டிய பணத்தின் அளவு நிர்ணயம் செய்யப்படுகிறது என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க: நீங்க 55 ரூபாய் சேமிக்க ரெடியா? மாதம் 3000 தரும் அருமையான திட்டம்!

இந்த திட்டத்தில் இணைந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த திட்டத்தை உங்களால் திரும்பப் பெறவும் முடியும். பின் அதில் உள்ள பணத்தை உங்களால் எடுத்துக்கொள்ள முடியும். இருப்பினும் இடையிலேயே நீங்கள் பணத்தை திரும்பப் பெறும்பொழுது அதற்கான வட்டி விகிதங்கள் குறையும்.

இந்த திட்டத்திற்கான முதிர்ச்சி வயது, முன்பு கூறியதைப் போலவே 35, 40, 45, 50, 55, 58 மற்றும் 60 என்பதாகும் (நீங்களே தேர்வு செய்யலாம்). மேலும் இந்த திட்டத்தை தொடங்குபவர் மரணிக்கும் பட்சத்தில் அவர் சேமித்த அனைத்து பணமும் வட்டியோடு அவர் நியமித்திருக்கும் நாமினிக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்