தங்கம் ஒரு சிறந்த சேமிப்பு முறை என்பது அனைவரும் அறிந்ததே, ஆனால் அதற்கு ஈடாக பலன் தரும் பல சேமிப்பு திட்டங்கள் உள்ளது. குறிப்பாக பெண்களின் எதிர்கால வாழ்க்கையை சிறப்பானதாக மாற்ற பல சேமிப்பு திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றது மத்திய அரசு. அந்த வகையில் கடந்த 2023-2024ம் ஆண்டு பட்ஜெட்டில், மத்திய அரசு அறிவித்த திட்டம் தான் MSSC எனப்படும் மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ். இது என்ன திட்டம், இதனால் என்ன நன்மை என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
மேலும் படிக்க: சேமித்த பணத்திற்கு 3 மடங்கு லாபம் - இந்த அஞ்சலக திட்டத்தில் யாரெல்லாம் இணையலாம் தெரியுமா?
மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ்
மத்திய அரசால் வழங்கப்படும் பல சேமிப்பு திட்டங்களில் ஒன்று தான் இது. கடந்த நிதியாண்டில், பெண்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் அவர்களின் அவசர தேவைகளை பூர்த்தி செய்ய இந்த திட்டம் துவங்கப்பட்டது. இந்த திட்டத்தில் இந்திய குடிமகள்கள் யாராக இருந்தாலும் எளிதாக இணைய முடியும். இரண்டு ஆண்டுகள் வரை பணத்தை சேமிப்பதோடு மட்டுமல்லாமல், இடையில் கணிசமான ஒரு தொகையை எடுக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
MSSCயில் எப்படி இணைவது?
இந்த திட்டம் மத்திய அரசின் திட்டம் என்றாலும், இந்திய அளவில் பல வங்கிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும் பெண்கள், தங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகத்தை அணுகியும் இந்த திட்டத்தில் இணைத்திட முடியும். பிறப்பு சான்றிதழ், ஆதார் அட்டை, பாண் கார்டு, பாஸ்போர்ட் அளவு போட்டோ போன்ற ஆவணங்களை நேரில் சமர்ப்பித்து இந்த திட்டத்தில் இணையலாம்.
மேலும் படிக்க: பத்து வருட சேமிப்பு.. வட்டியாக மட்டும் 1.5 லட்சம் அள்ளித் தரும் அஞ்சலக திட்டம்!
MSSCயின் நன்மைகள் என்னென்ன?
இந்த திட்டத்தை பொறுத்தவரை 1000 ரூபாயில் இருந்து துவங்கி 2,00,000 லட்சம் ரூபாய் வரை மாதந்தோறும் சேமிக்க முடியும். மாதந்தோறும் சேமிக்காமல் ஒரே ஒரு முறை பெரிய தொகையை (2,00,000 ரூபாய்க்கு மிகாமல்) முதலீடும் செய்ய முடியும்.
வட்டி கணக்கீடு
இந்த திட்டத்தில் 2,00,000 ரூபாயை ஒரு பெண் முதலீடு செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். முதலாம் ஆண்டு அவருடைய பணத்திற்கு சுமார் 16,000 ரூபாய் வட்டி கிடைக்கும். இரண்டாம் ஆண்டு மற்றொரு 16,000 ரூபாய் கிடைக்கும். மேலும் திட்டம் இரண்டு ஆண்டுகாலம் கழித்து முதிர்வடையும்போதும், அந்த பெண்ணுக்கு 2,32,000 ரூபாய் கிடைக்கும்.
இந்தத் திட்டத்தை பொறுத்தவரை மத்திய அரசு இதை செயல்படுத்துவதால், நிதி அபாயத்தை பற்றிய கவலை இருக்காது. மாதந்தோறும் எந்தவித பயமும் இன்றி இதில் முதலீடு செய்யலாம். இதில் முதலீடு செய்யும் பணத்திற்கு 7.5 என்கின்ற நிலையான வட்டி வழங்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல், வருடத்திற்கு நான்கு முறை சேமிக்கும் பணத்திற்கான வட்டி, கூட்டுத்தொகையாக கணக்கிடப்பட்டு வரவும் வைக்கப்படும்.
மேலும் படிக்க: நீங்க 55 ரூபாய் சேமிக்க ரெடியா? மாதம் 3000 தரும் அருமையான திட்டம்!
இந்த திட்டத்தின் கீழ் ஒரு பெண் இரண்டு லட்சத்திற்கு மிகாமல் பணத்தை சேமிக்கும் வண்ணம், ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளையும் தொடங்க முடியும். அதே சமயம் இந்த திட்டத்தில் இணைந்து ஓராண்டு ஆன பிறகு, அதில் சேமித்திருக்கும் தொகையிலிருந்து 40% எடுக்கவும் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் இணைத்திருப்பவர், இந்த இரண்டு வருட கால இடைவெயில் எதிர்பாராத விதமாக மரணிக்கும் நிலையில், அந்த அக்கவுண்டில் உள்ள பணம் அவரது பெற்றோருக்கு அல்லது சட்டப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ள பாதுகாவலருக்கும் செல்லும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்