gold  
வணிகம்

கோல்ட் பீஸ் என்றால் என்ன? அது ஒரு சிறந்த முதலீடாக இருக்குமா?

தங்கத்துக்கு நிகரான விலையை கொண்டிருப்பதால் இதை நீங்கள் BSE மற்றும் NSE ஆகிய இரு ஷேர் மார்கெட்டுகளிலும் வாங்க முடியும்.

Anbarasan

பிற நாடுகளை காட்டிலும் இந்தியர்களுக்கு தங்கத்தின் மீதான காதல் என்பது அலாதியானது. கடந்த பல நூற்றாண்டுகளாகவே இங்கு தங்கத்தின் புழக்கம் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது. பாரம்பரியமாக தங்கத்தை சேமிப்பதும், அதை பரிசு பொருளாக பிறருக்கு அளிப்பதும் வாடிக்கையான ஒன்று தான். கிட்டத்தட்ட இந்தியாவில் வாழும் அனைவரிடமும் காசு, கட்டி மற்றும் நகை என்று ஏதோ ஒரு வடிவில் குண்டுமணி தங்கமாவது கட்டாயம் இருக்கும். காரணம் அது ஒரு சிறந்த சேமிப்பாகவே பார்க்கப்படுகிறது.

இருப்பினும், தங்கம் போன்ற ஒரு விஷயத்தில் முதலீடு செய்வது சில வகை அச்சத்தையும் கொண்டிருக்கிறது. அதாவது திருட்டு, அதை சேமிக்க ஆகும் செலவுகள், அதிக உற்பத்தி கட்டணங்கள் போன்ற பல சிக்கல்களை இது கொண்டுள்ளது. இந்த ஒரு காரணத்தால் தான், கடந்த சில ஆண்டுகளாக முதலீட்டாளர்கள் தங்கத்தை "பீஸ்" வடிவில் சேமிக்க ஆர்வம் காட்டுவதாக சில ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

தங்க தேனீக்கள் அதாவது GOLD BeES என்றால் என்ன?

"கோல்ட் பீஸ் (GOLD BeES)" என்பது வேறொன்றுமல்ல கோல்ட் பெஞ்ச்மார்க் எக்ஸ்சேஞ்ச் டிரேடட் திட்டங்களைக் குறிக்கிறது (Gold Benchmark Exchange Traded Scheme). அவை Exchange Traded Funds எனப்படும் ETFகளாகும். இதன் நோக்கமே உருவம் கொண்ட தங்கத்தின் மார்க்கெட் நிலையை பிரதிபலிப்பது தான் என்கிறார்கள் நிபுணர்கள்.

மேலும் படிக்க: இன்றாவது கொஞ்சம் தெரிஞ்சிக்கலாமே - உயிரியல் சுழற்சியை பாதுகாப்பது எப்படி?

அசல் தங்கத்துக்கு நிகரான விலையை கொண்டிருப்பதால் இதை நீங்கள் BSE மற்றும் NSE ஆகிய இரு ஷேர் மார்கெட்டுகளிலும் வாங்க முடியும்.

சரி இந்த கோல்ட் பீஸை எப்படி வாங்குவது?

பங்குசந்தையில் நீங்கள் ஸ்டாக் எனப்படும் பங்குகளை வாங்கி விற்பது போல, இந்த கோல்ட் பீஸ்களை வாங்கி, விற்கவேண்டும். ஷேர் மார்க்கெட்டிங் என்பது ரிஸ்க் நிறைந்த ஒரு சேமிப்பு திட்டம் என்றாலும் 10 ஆண்டுகளில் 5 மடங்கு கூட லாபம் கிடைக்கும் ஒரு இடமாக அது உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. வங்கி அல்லது இணைய செயலிகள் மூலம் ஒரு டிமாண்ட் கணக்கை திறந்து, அதன் மூலம் உங்களால் இந்த கோல்ட் பீஸ்களை வாங்க முடியும்.

இன்றைய தேதியில் பல நிறுவனங்கள் இந்த கோல்ட் பீஸ் பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர். உருவம் கொண்ட தங்கத்தை போல இந்த கோல்ட் பீஸின் விலையும் ஏற்ற இறக்கம் கொண்டது தான்.

கோல்ட் பீஸ் வாங்குவதால் என்ன பயன்? அது ஒரு சிறந்த சேமிப்பா?

அதிக பண புழக்கம் இந்த கோல்ட் பீஸ் மீது உள்ளது, நல்ல விலை வரும்போது சுலபமாக கோல்ட் பீஸ் பங்குகளை விற்பது என்பது சாத்தியமாகிறது. இதனால் பெரிய லாபம் குறுகிய காலத்தில் கிடைக்கிறது. தங்கத்தை வீட்டில் வாங்கி வைக்கும்போது ஏற்படும் பயம் இதில் இல்லை. நீங்கள் வாங்கும் தங்கத்தின் அளவு உங்கள் டிமாண்ட் கணக்கில் தான் வரவு வைக்கப்படும்.

ஒரு நகைக்கடைக்கும் சென்றால், அங்கு உங்களால் 1 கிராம் என்ற அளவில் இருந்து தான் தங்கத்தை வாங்க முடியும். ஆனால் கோல்ட் பீஸ் அப்படியல்ல, 0.01 கிராம் தங்கத்தை கூட உங்களால் வாங்கி சேமிக்க முடியும். அதாவது இன்றைய தேதியில் உங்களிடம் 90 ரூபாய் இருந்தால் போதும், அதை நீங்கள் தங்கத்தில் கோல்ட் பீஸ் மூலம் முதலீடு செய்யமுடியும்.

சிறுக சிறுக உங்களால் தங்கத்தை சேமித்து, குறிப்பிட்ட காலத்தில் அதை பெரிய தொகைக்கு விற்க உங்களுக்கு வழிவகை செய்கிறது இந்த கோல்ட் பீஸ்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்