aprilia bike review Admin
தொழில்நுட்பம்

Aprilia இத்தாலியன் அசுரன் KTM கொஞ்சம் ஓரம் போங்க

இத்தாலிய bike சொன்னா performance பக்காவா இருக்கும். ஆனா ஹாண்ட்லிங்?

Naveen

இத்தாலிய அழகி அப்ரில்லியா டூவோனோ 457 பாக்க அப்டியே ரசிக்க வைக்கும் லுக். ஷார்ப்பான டிசைன், மஸில் போல இருக்குற டாங்க், ரொம்பவே வைடு ஹேண்டில்பார் – ஸ்ட்ரீட் நேக்கட் பைக்குக்கு என்ன வேணும் ஒன்னும் குறையல.

எஞ்சின் பத்தி பாக்கலாம்:

இத்தாலிய எஞ்சின்-னா கொஞ்சம் வேற லெவல்தான்

457cc parallel-twin, liquid-cooled engine 47 bhp @ 9,400 rpm

43.5 Nm torque @ 6,700 rpm

EXPERTS சொல்றாங்க, இந்த பைக் RS457 மாதிரி தான் ஓடுதாம் Track la கூட same lap timing தான் வருதாம். ஆனா APRILIA reliability பத்தி இப்பவே சொல்ல முடியாது – 3YEARS Apram than தெரியும்!

ஹாண்ட்லிங் பத்தி சொல்லணும்னா:

இத்தாலிய bike சொன்னா performance பக்காவா இருக்கும். ஆனா ஹாண்ட்லிங்?

tuono 457 நம்பிக்கை குடுக்கும் ஷார்ப் ஆஹ திரும்பும். கார்னர்ல கம்பீரமா ஸ்டேபிளா இருக்குது. நீங்க எவ்ளோ உயரமா இருந்தாலும் குட்டையா இருந்தாலும் – எல்லாருக்கும் செட்டாகும் tuono 457

சஸ்பென்ஷன்:

41mm USD forks (முன்னாடி)

ரியர் preload மோனோ ஷாக்

ஸ்போர்ட்டி ரைடு + comfort இரண்டுக்கும் சமமா டியூன் பண்ணிருக்காங்க. சிட்டி ரைடிங்க்ல potholes, speed breaker எல்லாமே ஸ்மூத்தா-தாண்டிடும்., இந்திய சாலைகளுக்கு ஏத்த மாரி வச்சிருக்காங்க suspension

அட்டகாசமான அம்சங்கள்:

இவ்ளோ பணம் கொடுக்கறோம், Aprilia கண்டிப்பா justify பன்னிருக்காங்க

5-inch TFT display (Bluetooth support-உடன்)

Multiple riding modes: Eco, Sport, Rain

Adjustable traction control

Dual-channel ABS

பிரேக் சிஸ்டம்:

முன்னாடி – 320mm dual disc

பின்னாடி – 220mm single disc (single-piston floating caliper)

Experts சொல்றாங்க: பிரேக்கிங் நன்றாக தான் இருக்கு. ஆனா முன்னாடி பிரேக்குல கொஞ்சம் எக்ஸ்ட்ரா பிரஷர் கொடுக்கணுமாம். ஒட்டுமொத்தமாக decent தான் செக்மெண்ட்ல!

(PROS):

செக்மெண்ட்ல பவர் ஃபுல்லான எஞ்சின்

பாக்க செம்மையான லுக்

(CONS):

பிரேக்கிங் கொஞ்சம் இன்னும் நன்றாக இருக்கலாம்

DEALEARSHIP குறைவு

முடிவுரை (VERDICT):

“செக்மெண்ட்ல எல்லாத்தையும் ஓவர்டேக் பண்ணுற பைக் வேணுமாஅப்போ இந்த BIKE தான் உங்க சாய்ஸ்!”

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்