"விஜய்க்கு ஏமாற்றத்தான் தெரியும்; அரசியல் தெரியாது" - விட்டு விளாசிய தமிழிசை

ஏற்றியதை நியாயம் எனக் கூறவில்லை 62% தேசிய சந்தையில் விலை உயர்ந்துள்ளதால், மிகக் குறைந்த அளவில் ஏற்றப்பட்டுள்ளது.
tamilisai press meet
tamilisai press meetAdmin
Published on
Updated on
2 min read

சென்னை நங்கநல்லூரில், பாஜக சார்பாக தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து தர்பூசணி இளநீர் வெள்ளரிக்காய் போன்றவை பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்டது

அப்போது செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தர்ராஜன்:-

தமிழக அரசியலில் எதிர்மறை அரசியலை, ஸ்டாலின் முன்னெடுத்துச் செல்கிறார் பிரதமர் கலந்து கொண்ட பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்க வேண்டும். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தருவதாக கூறிய கேஸ் தள்ளுபடி தராததால் 3200 பொதுமக்களுக்கு கடன் வைத்திருக்கிறீர்கள், அதை என்று கொடுக்கப் போகிறீர்கள் எனவும்.

பால் விலை, மின்சார கட்டணம், வீட்டு வரி, தண்ணீர் கட்டணம் உயர்ந்து விட்டது மேலும் கேஸ் விலை அப்போது ஏன் ஏறியது என்ற கேள்விக்கு? ஏற்றியதை நியாயம் எனக் கூறவில்லை 62% தேசிய சந்தையில் விலை உயர்ந்துள்ளதால், மிகக் குறைந்த அளவில் ஏற்றப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழக மகளிர் அணி பாஜகவை சார்ந்த நாங்கள் ஐம்பது ரூபாய் உயர்வு வேண்டாம், பெட்ரோலிய அமைச்சருக்கு கடிதம் எழுத இருக்கிறோம்..

தேர்தல் வரும் பொழுது கூட்டணி பற்றி பேசுவோம் தமிழக அரசு தான் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை கூறிக் கொண்டிருக்கிறார்கள், அதை மக்கள் புரிந்து கொள்வார்கள் வக்பு வாரிய திருத்த மசோதாவிற்கு முஸ்லிம் பெண்கள் அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது, இப்பொழுது இவர் என்ன சொல்லப் போகிறார்.

ஒரு புள்ளி விபரங்கள் இல்லாமல்,பொத்தாம் பொதுவாக விஜயின் அறிக்கைகள் உள்ளது, திரையரங்குகளில் விஜய் திரைப்படத்திற்கு டிக்கெட் எவ்வளவு அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது, ஆயிரக்கணக்கில் விற்கப்படும் டிக்கெட் விலையை கட்டுப்படுத்த முடிந்ததா? பாமர மக்கள் சினிமா பார்க்க வருகிறார்கள். குறைந்த விலையில் டிக்கெட் கொடுங்கள் அல்லது இலவசமாக கொடுங்கள்.

விஜய்க்கு சினிமாவில் நடிக்க தெரியும், வசனம் பேச தெரியும், டான்ஸ் ஆட தெரியும், ஏமாற்றவும் தெரியும் ஆனால் அரசியலில் ஒன்றும் தெரியாது. ஆளுநர் மசோதா நிராகரித்தது குறித்து நீதிமன்றம் தெரிவித்துள்ள தீர்ப்பு குறித்து கேட்டபோது, நீதிமன்றத்தில் தீர்ப்பு குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை, என தெரிவித்தார்.

நயினார் நாகேந்திரன் டெல்லி பயணம் குறித்து கேட்டபோது, டெல்லிக்கு எத்தனையோ நபர்கள் பயணம் செய்கிறார்கள், அளவுக்கு அதிகமாக செட் செய்தால் IT ரைடு வரத்தான் செய்யும் தமிழக அமைச்சர்களின் ஜிடிபி போய் பார்த்தால் தெரியும், எவ்வளவு உயரத்திற்கு சென்றுள்ளது என்று தப்பு செய்தால் கணக்கில் காட்டவில்லை, என்றால் சோதனை நடக்கத்தான் செய்யும், பாஜகவின் மாநில தலைவர் உறவினர் வீட்டிலும் IT ரைட் நடந்தது அதன் பிறகு எப்படி, பாஜகவின் கைக்கூலியாக ஒரு துறை செயல்படுகிறது, என கூற முடியும்.

இது அப்பட்டமான பொய் குற்றச்சாட்டு எங்கெல்லாம் விதிமுறைகள் நிரப்பப்பட்டுள்ளதோ, அங்கெல்லாம் கண்டிப்பாக வருமான வரித்துறை சோதனை நடக்கும், செந்தில் பாலாஜி போன்ற ஒரு அமைச்சரை வைத்துக்கொண்டு சட்டத்துறை அமைச்சர் ஒரு புது துறையின் மீது இப்படி குற்றம் சாட்டலாமா?

ஒவ்வொரு அமைச்சரின் வீடு மற்றும் கல்லூரியை போய் பாருங்கள், அமைச்சரின் சம்பளத்தை வாங்கிக் கொண்டுதான் அவர்கள் இவ்வளவு வசதியாக இருக்கிறார்களா, என்று கேளுங்கள்

விஜய் களத்தில் இல்லை என கூறுகிறீர்கள் அவருக்கு, உயர்த்திருவு பாதுகாப்பு ஏன் கொடுக்கப்பட்டது, என கேட்டபோது களத்தில் இல்லை என்றாலும் யாரெல்லாம் கோரிக்கை வைக்கிறார்களோ, அவர்களுக்கு பாதுகாப்பு தேவைப்பட்டால் உயர் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படும், அதுமட்டுமின்றி அவர் வெளியே வரும்போது நடிகர் என்பதால் கூட்டம் அதிகமாக கூடுவதால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு பாஜகவில் அங்கீகாரம் வழங்கவில்லை, என்பதை புரிந்து கேட்ட போது, அதிகப்படியான சிறுபான்மையினர் எங்களை நம்பி கட்சியில் சேரட்டும், கண்டிப்பாக கொடுப்போம் இப்பொழுது இருக்கும் சிறுபான்மையினர்களுக்கும் நாங்கள் பதவி கொடுத்துள்ளோம்.

ஆ.ராசாவின் 2ஜி வழக்கு இன்னும் முடியவில்லை இவர்கள் எல்லாம், தீ பறக்க பேசி பேசி முதலமைச்சரை ஒழிக்க போகிறார்கள், பேச மட்டும் தான் செய்ய முடியும் வேறு எதுவும் இவர்களால் செய்ய முடியாது, முதலில் ஒரு சட்ட திருத்தத்தைப் பற்றி நன்றாக படித்துவிட்டு அதன் பிறகு கூற வேண்டும்.

திருமாவளவனிடம் நான் ஒரு கேள்வி கேட்கிறேன், இஸ்லாமிய பெண்கள் கூட்டமைப்பு இதை வரவேற்று இருக்கிறது. இன்று முஸ்லிம் அல்லாதவர்கள் இதில் உறுப்பினர்களாக இருக்கலாமா என கேள்வி கேட்கிறார்கள், இது ஆலய வழிபாட்டு முறை போன்று அல்ல, சட்ட நடைமுறை இதில் இருப்பதில் தவறில்லை, எல்லா ஏற்பட்டிருக்கும் குற்றம் காணக் கூடாது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com