இந்தியா

சென்னையில் வணிக சிலிண்டர் நிறுத்தம்! இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிக்குமா?

மும்பையில் ஹோட்டலுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்படத்தாக உரிமையளர்கள் தெரிவித்தனர்...

மாலை முரசு செய்தி குழு

மத்திய கிழக்கில் போர் சூழல் வரும் நிலையில், கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 110 டாலர் முதல் 120 டாலர் வரை உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டருக்குத் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. இதனை தொடர்ந்து சென்னையில் வணிக ரீதியான சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் அறிவிப்பு. மாற்று எரிசக்திகளை உபயோகப்படுத்துக்கொள்ளுமாறு இந்தியன் ஆயில் கார்பரேஷன் அறிவிப்பு. சிலிண்டர் தட்டுப்பாட்டால் பெங்களூருவில் இன்று முதல் (மார்ச் 10) உணவகங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மும்பையில் ஹோட்டலுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்படத்தாக உரிமையளர்கள் தெரிவித்தனர்.

ஈரான் - மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் கூட்டுதாக்குலின் பின் உச்சம் பெற்றது போர். தற்போது அதன் எதிரொலியாக சர்வதேச அளவில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. போதிய அளவில் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், தற்போது பல்வேறு நகரங்களில் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் சுத்திகரிப்பின்போது, சமையலுக்கு பயன்படும் எல்பிஜி என்னும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு பிரித்தெடுக்கப்படுகிறது. தற்போது வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுத்தப்பட்டுள்ளதா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏற்கெனவே, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 60 உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது அதன் முன்பதிவுக்கு உயர்நிலை குழு கூட்டத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

முன்னர், சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு 21 நாள்கள் இடைவெளியில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது 25 நாள்களாக உயா்த்தப்பட்டுள்ளது. அதன்படி, சிலிண்டர் விநியோகிக்கப்பட்ட 25 நாள்களுக்குப் பிறகே அடுத்த முன்பதிவை இனி செய்ய முடியும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்