ஒரு பயணத்தின் போது, சமூக வலைதளங்களில் பகிரும் அழகான செல்ஃபி எடுக்க நினைத்தால், நீங்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டியிருக்கும். சமீபத்திய ஓர் ஆய்வு, செல்ஃபி எடுக்கும்போது நடக்கும் விபத்துகளில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாகத் தெரிவிக்கிறது. உலகளவில் பதிவான மொத்த செல்ஃபி விபத்துக்களில் சுமார் 42.1% இந்தியாவில் தான் நிகழ்ந்துள்ளன.
தி பார்பர் சட்ட நிறுவனம் (The Barber Law Firm) மார்ச் 2014 முதல் மே 2025 வரை செல்ஃபி தொடர்பான இறப்புகள் மற்றும் காயங்கள் குறித்த ஒரு ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வில், கூகுள் செய்திகளில் வெளியான கட்டுரைகள் பயன்படுத்தப்பட்டன. ஒரு செல்ஃபி எடுக்க முயன்றபோது நேரடியாக ஏற்பட்ட காயம் அல்லது மரணங்கள் இதில் கணக்கிடப்பட்டன. அதிக மக்கள் தொகை, ரயில் தண்டவாளங்கள், பாறைகள் போன்ற ஆபத்தான இடங்கள் எளிதாகக் கிடைப்பது, மற்றும் சமூக வலைதளங்களின் ஆதிக்கம் ஆகியவை இந்தியாவில் செல்ஃபி விபத்துக்கள் அதிகரிப்பதற்கான முக்கியக் காரணங்கள் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஆபத்தான நாடுகளின் பட்டியல்
செல்ஃபி தொடர்பான விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அடிப்படையில், உலகின் மிகவும் ஆபத்தான நாடுகளின் பட்டியல்:
இந்தியா: 271 பேர் உயிரிழந்துள்ளனர் (214 இறப்புகள், 57 காயங்கள்)
அமெரிக்கா: 45 பேர் உயிரிழந்துள்ளனர் (37 இறப்புகள், 8 காயங்கள்)
ரஷ்யா: 19 பேர் உயிரிழந்துள்ளனர் (18 இறப்புகள், ஒரு காயம்)
பாகிஸ்தான்: 16 பேர் உயிரிழந்துள்ளனர்
ஆஸ்திரேலியா: 13 பேர் உயிரிழந்துள்ளனர் (13 இறப்புகள், 2 காயங்கள்)
இந்தோனேசியா: 14 பேர் உயிரிழந்துள்ளனர்
கென்யா, இங்கிலாந்து, ஸ்பெயின் மற்றும் பிரேசில்: இந்த நாடுகளில் ஒவ்வொன்றிலும் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
காரணங்கள் மற்றும் எச்சரிக்கை
இந்த ஆய்வில், செல்ஃபி தொடர்பான அனைத்து மரணங்களிலும் கிட்டத்தட்ட 46% மரணங்கள், கூரைகள், பாறைகள் அல்லது உயரமான கட்டிடங்களில் இருந்து விழுந்ததால் ஏற்பட்டவை என்று தெரியவந்துள்ளது. ஒரு சரியான புகைப்படத்தை எடுக்க நினைத்து நடக்கும் ஒரு சிறிய தவறுகூட உயிருக்கே ஆபத்தாக முடிவதைச் இது சுட்டிக்காட்டுகிறது.
அதேபோல், சமூக வலைதளங்களில் "சரியான" புகைப்படங்களை உருவாக்குவதற்காக மக்கள் அதிக அழுத்தத்தைச் சந்திக்கிறார்கள். இந்த அழுத்தம், அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கூடப் புறக்கணிக்கச் செய்கிறது.
"ஒரு சரியான புகைப்படம் உயிருக்கு ஆபத்தானது என்றால், அது தேவையற்றது" என்று தி பார்பர் சட்ட நிறுவனத்தின் நிறுவனர் கிரிஸ்டோபர் பார்பர் கூறினார். இதுபோன்ற சோகமான சம்பவங்களை "சில அடிகள் பின்னால் சென்று அல்லது பாதுகாப்பான இடத்தைத் தேர்ந்தெடுத்து" தவிர்த்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
சமீபத்தில், கர்நாடகாவின் பந்திப்பூர் புலி காப்பகத்தில் ஒரு இந்திய சுற்றுலாப் பயணி யானையுடன் புகைப்படம் எடுக்க முயன்றபோது படுகாயமடைந்தார். யானை அவரைத் துரத்தியபோது, அவர் ஓடி சாலையில் விழுந்தார். அதிர்ஷ்டவசமாக, பார்வையாளர்களின் கூச்சலைக் கேட்டு யானை பின்வாங்கியதால், அந்த மனிதர் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.