இந்தியா

'மீண்டும் மணிப்பூரில் வெடித்த கலவரம்!' சிஆர்பிஎஃப் வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழப்பு - கை மீறி செல்கிறதா நிலைமை?

மணிப்பூரில் தீவிரமடையும் நிலைமை, குண்டு வீச்சில் நிகழ்த்த உயிரிழப்புகளை தொடர்ந்து, அம்மாநிலத்தின் இணையதள சேவை முடக்கம்.

Vinvizhi Leninton

பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள மொய்ராங் திரொங்லாபி கிராமத்தில், குக்கி குழுக்களின் ஆதிக்கத்தில் இருக்கும் மலைப் பகுதிகளில் சந்தேகப்படும்படியான தீவிரவாதிகள் பொதுமக்களின் வீட்டின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தியதை அடுத்து, மணிப்பூரில் மீண்டும் ஒரு வன்முறை வெடித்துள்ளது. இந்தத் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் பலியாகியுள்ளனர்.

செவ்வாயன்று நடத்திய இந்த வெடி குண்டுத் தாக்குதலில் இரண்டு கைக்குழந்தைகள் உயிரிழந்ததாகவும், அவர்களின் தாய் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மொய்ராங் திரோங்லாபி, சுராசந்த்பூரின் மலைப் பகுதிகளுக்கு அருகில் அமைந்துள்ளது. இங்கு 2023 மற்றும் 2024ம் ஆண்டுகளில் இரண்டு இன குழுக்களுக்கு இடையே மோதல்கள் ஏற்பட்டது. மேலும், அந்த மோதல் உச்சத்தில் இருந்தபோது தொடர்ச்சியான துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டன.

மணிப்பூர் கலவரம்:

2023 ஆம் ஆண்டு மே 3 ஆம் தேதி, மணிப்பூரின் மலைப்பகுதிகளில் வசிக்கும், பட்டியல் பழங்குடியினர் அல்லது இந்தியாவின் மிகவும் நலிவடைந்த குழுக்களாகக் கருதப்படும் குக்கி மற்றும் நாகா பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள், தங்களது நலத்திட்ட உதவிகளில் ஆதிக்கம் செலுத்தும் மெய்திகளுக்கு, நலத்திட்டங்கள் நீட்டிக்கப்படலாம் என்பதற்கு எதிராக ஒரு போராட்டத்தைத் தொடங்கினர். மெய்தி மக்கள் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக சிறப்புச் சலுகைகளைக் கோரி வருகின்றனர். மணிப்பூரின் மக்கள்தொகையில் பாதி பேர் மெய்தி சமூகத்தினர் ஆவர். அவர்களுக்கு வரையறுக்கப்பட்ட இட ஒதுக்கீட்டு விதிகளை நீட்டிப்பதன் மூலம், குக்கி மற்றும் நாகா சமூகத்தினருக்காக ஒதுக்கப்பட்ட கல்வி மற்றும் அரசு வேலைகளில் ஒரு பங்கை அவர்கள் பெறுவார்கள் என்றும் மணிப்பூரின் மொத்தப் பரப்பளவில் 10% ஆக உள்ள, அந்நாட்டின் மிகவும் செழிப்பான பள்ளத்தாக்குப் பகுதியில் மெய்திகள் பாரம்பரியமாக வசித்து வருவதால் அவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வாய்ப்புகளை பெறுவதற்கான முறையும் எளிமையாக கிடைக்கிறது என்று கூறுகின்றனர். நாகாக்களும் குக்கிகளும் வளர்ச்சி குன்றிய மலைப் பகுதிகளில் வாழ்கின்றனர். மலைப்பகுதிகளைக் காட்டிலும் பள்ளத்தாக்குப் பகுதிக்குச் சாதகமாக அமைந்துள்ள வளர்ச்சியால் ஏற்படும் ஏற்றத்தாழ்வு, இனக்குழுக்களிடையே கருத்து வேறுபாடு மற்றும் போட்டிக்கு ஒரு காரணமாக அமைந்து, மிகப்பெரிய வன்முறை வெடிக்க காரணமானது. மேலும், ஜிரிபாம் மாவட்டத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தைத் தாக்க முயன்ற ஆயுதம் ஏந்திய 10 கூகி இனத்தவர்கள், பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டனர் . பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தனர். இந்தத் துப்பாக்கிச் சண்டையின் போது, ​​ஆறு பேர் கொண்ட மெய்தி குடும்பம் ஒன்று காணாமல் போனது. காணாமல் போன ஆறு பேரில், மூன்று பேரின் உடல்கள் ஆற்றில் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, மாநிலத் தலைநகரான இம்பாலில் கடும் போராட்டங்கள் வெடித்தன. அப்பகுதியில் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக நீடித்த அமைதியின்மையின் ஒரு பகுதியாக, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் வீடுகளைச் சூறையாடித் தீ வைத்ததற்காக 23 பேரைக் காவல்துறை கைது செய்தது.

இன்றைய கலவரம்:

தற்போது, திரோங்லாபி கிராமம், பிஷ்ணுபூர் மாவட்டத்தின் புறநகர்ப் பகுதியில், சுராசந்த்பூர் மாவட்டத்தின் உயரமான மலைப் பகுதிகளுக்கு அருகில் அமைந்துள்ளது. ஆயுதம் ஏந்திய கூகி குழுக்கள் இருப்பதாகக் கூறப்படும் மலைகளுக்கு அருகில் இருப்பதால், இப்பகுதி நீண்ட காலமாகப் பாதுகாப்பற்றதாகக் கருதப்படுகிறது. சுற்றியுள்ள மலைச் சரிவுகளில் இருந்து வீசப்பட்ட குண்டுகள் கிராமத்திற்குள் விழுந்துள்ளதாகக் குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர். தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்புப் படைகள் அப்பகுதியை உயர் எச்சரிக்கை நிலையில் வைத்துள்ளன. மேலும் பதற்றம் அதிகரிப்பதைத் தடுப்பதற்காக, அந்தப் பகுதிக்குக் கூடுதல் படைகள் விரைந்து அனுப்பப்பட்டுள்ளன. அதிகாரிகள் அருகிலுள்ள மலைப் பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, மலை, பள்ளத்தாக்கு எல்லையில் அமைந்துள்ள மற்ற பாதிப்புக்குள்ளாகக்கூடிய கிராமங்களையும் கண்காணித்து வருகின்றனர்.

மேலும், மணிப்பூரில் மோதல்கள் தீவிரமடைந்ததால், கூட்டத்தைக் கலைப்பதற்காகத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், இதில் பல போராட்டக்காரர்களில் 4 பேர் இறந்ததாவும், 5 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அப்பகுதி முழுவதும் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியில் நிலைமை தொடர்ந்து பதட்டமாகவே காணப்படுவருகிறது. இந்தத் தாக்குதலுக்கு முதலமைச்சர் ஒய். கேம்சந்த் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் இதை ஒரு “மிருகத்தனமான செயல்” என்றும் “மனிதகுலத்தின் மீதான அப்பட்டமான தாக்குதல்” என்றும் குறிப்பிட்டார். இதற்குப் பொறுப்பானவர்கள் அடையாளம் காணப்பட்டு, சட்டத்தின் கீழ் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். அருகிலுள்ள இடத்திலிருந்து வெடிகுண்டு ஒன்றும் மீட்கப்பட்டதாக காவல்துறை தரப்பிலிருந்து தெரிவித்த நிலையில், அப்பகுதியில் மேலும் அச்சுறுத்தல்கள் ஏற்படக்கூடும் என்ற கவலை எழுந்துள்ளது.

மேலும், இந்த பதற்றசூழல் காரணமாக, மணிப்பூர் அரசு இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, தௌபால், காக்சிங் மற்றும் பிஷ்ணுபூர் ஆகிய பகுதிகளில் மூன்று நாட்களுக்கு மொபைல் இணைய சேவைகளை இடைநிறுத்தியுள்ளது. வதந்திகள் பரவுவதைக் கட்டுப்படுத்தவும், வன்முறை மேலும் அதிகரிப்பதைத் தடுக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த இணைய முடக்கமானது வதந்திகள் பரவுவதை தடுப்பதற்கு என்று கூறினாலும், தாக்குதல் நடத்தப்பட்டுள்ள பகுதிகளில் என்ன நடக்கிறது?, அங்குள்ள மக்களின் நிலை என்ன?, என்பதை கண்டறிவதில் சிக்கல் ஏற்படும் என்று பலரும் விமர்சனங்களை வைத்த வண்ணம் உள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.