கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 -பேர் கொல்லப்பட்டனர். இதற்கு எதிர்வினையாற்றும் விதமாக ‘ஆபரேஷன் சிந்தூர் ’ என்ற நடவடிக்கையை கையில் எடுத்து.
இந்த எதிர்தாக்குதலில் 9 பாகிஸ்தானிய தீவிரவாத முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டன. இதற்கிடையில் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்து இரு நாடுகளுக்கும் இடையே அமைதி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.
இந்நிலையில் இரு நாடுகளுக்கு இடையே நடந்த தாக்குதலில் திடுக்கிடும் சம்பவங்கள் வெளிவந்துள்ளன..
ஆபரேஷன் சிந்தூர் -ன்போது பாகிஸ்தான் சீனாவின் PL-15E ஏர்டு-ஏர் துப்பாக்கிகளை பாகிஸதான் பயன்படுதியாக இந்திய விமான படை தெரிவித்துள்ளது.
இந்த PL-15E என்பது சீனாவின் Chengdu J-20 போன்ற விமானங்களில் பயன்படுத்தப்படும், 200 கிலோமீட்டர் தூரம் வரை பறக்கக்கூடிய, ரேடார் வழிகாட்டுதலுடன் கூடிய நீண்ட தூர ஏர் டு ஏர் துப்பாக்கி ஆகும்.
இந்திய விமானப்படை 'சுதர்ஷன் சக்ரா' எனப்படும் S-400 ஏர் பாதுகாப்பு அமைப்பை பயன்படுத்தி, பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த துப்பாக்கி மற்றும் ட்ரோன் தாக்குதல்களை முறியடித்துள்ளதாகவும. இந்த அமைப்பு 80% க்கும் மேற்பட்ட தாக்குதல்களை தகர்த்துஉள்ளதாகவும் இந்திய விமானப்படை சார்பில் கூறியிருக்கிறது.
இந்நிலையில் இந்திய விமானப்படை இயக்கத் துறை இயக்குனர் ஏர் மார்ஷல் ஏ. கே. பார்த்தி திங்கள்கிழமை (மே 12) செய்தியாளர்கள் சந்திப்பின் போது
“எங்கள் போராட்டம் பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவு அமைப்புகளுடன் மட்டுமே. பாகிஸ்தான் படைவீரர்களுடன் எங்கள் போராட்டம் இல்லை. நாம் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை மட்டுமே தாக்கியுள்ளோம். ஆனால், பாகிஸ்தான் படை பயங்கரவாதிகளின் சார்பில் போராடுவது வருத்தமளிக்கிறது” எனக்கூறிஇருக்கிறார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்