காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதை நூலான பிளாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ் புத்தகத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு விழா நேற்று டெல்லியில் நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, கேரளா முதலமைச்சர் வி.டி. சதீசன், கர்நாடகா முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் மற்றும் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரேன், ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த அபிஷேக் பானர்ஜி, மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முஃப்தி மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சுப்ரியா சுலே ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவர்களுடன் காங்கிரஸ் தலைவர்கள், சோனியா காந்தியின் நண்பர்கள், காந்தி குடும்பத்தின் உறவினர்கள் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் பேசிய ராகுல் காந்தி தனது இளமைக்கால நினைவு ஒன்றை பகிர்ந்துகொண்டார். "என் அம்மாவும் அப்பாவும் கேம்பிரிட்ஜ் பல்கலைகழக்கத்தில் உள்ள வர்சிடி உணவகத்தில் சந்தித்துக்கொண்டனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு நான் கேம்பிரிட்ஜில் இருந்தேன்.
அப்போது என் காதலியிடம், " 'வா வர்சிடி உணவகத்துக்கு செல்லலாம்' என அழைத்து சென்றேன். அவளுக்கு அது என்னவென்றே தெரியவில்லை. ஆனால் நான் என அம்மாவும் அப்பாவும் சந்தித்துக்கொண்ட இடத்தைப் பார்க்க விரும்பினேன். நாங்கள் அங்கே மஞ்சள் கதவுகளைத் தாண்டி சென்றோம்.
நான் அங்கிருந்த பணியாளரிடம், 'என் பெற்றோர் இந்த உணவகத்தில்தான் சந்தித்துக்கொண்டனர்.' என்றேன். அவர், 'அவர்கள் இருவருமா.. எனக்கு அவர்களைத் தெரியும்' என்றார்.
அங்கே நாங்கள் சிக்கன் சாப்பிட்டோம். நான் உங்களுக்கு சொல்லுகிறேன்.. நீங்கள் காதலில் விழ வேண்டும் என்றால் வர்சிடி உணவகத்துக்கு செல்லுங்கள், நீங்கள் சிக்கன் சாப்பிட வேண்டும் என்றாள் அங்கே செல்லாதீர்கள். உணவு மிக மோசமாக இருந்தது.
ஆனால் என் அம்மாவும் அப்பாவும் அங்கே உணவு அருமையாக இருந்ததாக நினைவு வைத்திருக்கின்றனர்." என நையாண்டியாக பேசினார்.
பின்னர் அந்த காதலி குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, "இப்போது அவர் எனக்கு நண்பர்" என சிரித்தபடி பதிலளித்துச் சென்றார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.