இன்று விஜய் முதலமைச்சராக பதவியேற்க இருந்த நிலையில், நேற்று இரவு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழக வெற்றி கழகத்தின் மீது பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை வைத்திருந்தார். தனது சட்டமன்ற உறுப்பினரான மன்னார்குடி தொகுத்து எம்.எல். ஏ மாலை முதல் காணவில்லை எனவும், அவரிடம் குதிரை பேரம் பேசப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் காமராஜ் தமிழக வெற்றி கழகத்திற்கு எந்த ஆதரவும் தெரிவிக்கவில்லை. ஆனால் ஒரு போலியான கடிதத்தை தவெக தரப்பினர் வழங்கியுள்ளதாகவும் குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தார். அதனை தொடர்ந்து ஆளுநர் மாளிகைக்கு சென்ற மன்னார்குடி எம்.எல்.ஏ தனது போன் தொலைந்து போனதால் தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரிவித்திருந்தார்.
மேலும் தனது தரப்பில் இருந்து தமிழக வெற்றி கழகத்தை தொடர்பு கொள்ளவில்லை எனவும், அக்கட்சியினரும் தற்போது வரை என்னிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனவும், ஆனால் போலியான ஆதரவு கடிதம் வழங்கப்பட்டுள்ளதாகவும் காமராஜ் தெரிவித்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் “ தூய்மையான ஆட்சியை கொடுக்க போகிறீர்கள்.. ஆனால் இராவணன் சீதையை தூக்கியது போல ஒரே ஒரு கடித நகலை கொடுத்து எங்கள் எம்.எல் ஏவை துக்க பார்த்துள்ளனர். உலகத்திலேயே கேள்விப்படாத வகையில் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
மோசடி செய்வதுதான் தூய சக்தியின் வேலையா? திமுகவின் கோட்டையாக இருந்த மன்னார்குடியில் உழைத்து, போராடி நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். அதனை மோசடி செய்து பறிக்க பார்க்கிறார்கள். தவெக தயாரிப்பில் போலி கடிதம் கொடுக்கப்பட்டது பற்றி காவல் நிலையத்தில் புகாரளிக்க இருப்பதாகவும். தமிழ்நாட்டில் குதிரை பேரம் நடக்கிறதா என கவர்னர் சந்தேகிக்கிறார்” என தெரிவித்திருந்தார். இந்நிலையில் விசிக ஆதரவு அளித்தால் கூட விஜய்யை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் காமராஜ் போலியாக தவெக ஆதரவு கடிதம் கொடுத்ததாக ஆளுநரிடம் புகாரளித்த உள்ள நிலையில், இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து குதிரை பேரம் குறித்தும், தவெக போலி கடிதம் வழங்கியுள்ளது எழுந்த குற்றச்சாட்டு குறித்தும் திமுக எம்பி வில்சன் தனது சமூக வலைதள பக்கத்தில் “தமிழக அரசியலில் 'மாற்றத்தைக்' கொண்டுவரப்போவதாக அவர்கள் கூறியதன், உண்மையான அர்த்தம் என்ன என்பதை இப்போது நான் புரிந்துகொண்டேன். கடந்த பல ஆண்டுகளாகத் தமிழகம் இத்தகைய 'குதிரை பேரம்' முயற்சிகளைப் பார்த்ததே இல்லை! இவையெல்லாம், அவர்கள் இன்னும் பொறுப்பேற்பதற்கு முன்பே நடந்துவிட்டன!” என பதிவிட்டு தவெக குதிரை பேரம் பேசுவதாக சாடியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.