“காமராஜ் கையெழுத்திடும் வீடியோ வெளியீடு” - டிடிவி தினகரன் குற்றச்சாட்டுக்கு ஆதாரத்துடன் பதிலளித்த தவெக.. ஆளுநர் மாளிகையில் நடந்தது என்ன?

அவர் தன்னிச்சையாகவும், மகிச்சியுடனும் தவெக-விற்கு ஆதரவு அளிப்பதாக கடிதம் வழங்கினார்...
“காமராஜ் கையெழுத்திடும் வீடியோ வெளியீடு” - டிடிவி தினகரன் குற்றச்சாட்டுக்கு ஆதாரத்துடன் பதிலளித்த தவெக.. ஆளுநர் மாளிகையில் நடந்தது என்ன?
Published on
Updated on
1 min read

தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட காட்சிகள் ஆதரவளித்துள்ள நிலையில், இன்று விசிக தனது நிலைப்பாட்டை தெரிவிக்க உள்ளது. எனவே இன்று விஜய் முதலமைச்சராக பதவியேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், நேற்றிரவு புதிய குழப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மன்னார்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர் காமராஜ் காணவில்லை எனவும், அவர் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளிப்பதாக கவர்னரிடம், அக்கட்சியினர் போலியான கடிதத்தை கொடுத்திருப்பதாகவும் அமமுக பொதுச்செயலாளர் குற்றம் சாட்டியிருந்தார்.

பின்னர் சிறிது நேரத்திலேயே அமமுக வேட்பாளர் காமராஜ் மற்றும் டிடிவி தினகரன் தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து தங்களது ஆதரவு அதிமுகவிற்கு தான் என கடிதம் வழங்கினார். மேலும் தவெக தரப்பில் காமராஜ் அவர்களுக்கு ஆதரவு அளிப்பதாக வழங்கப்பட்ட கடிதம் போலியானது எனவும் குற்றச்சாட்டு வைத்திருக்கின்றனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் “உங்களுக்கு 108 எம்.எல் ஏக்கள் உள்ளனர். தூய சக்தி நீங்கள், தூய்மையான ஆட்சியை கொடுக்க போகிறீர்கள்.. ஆனால் இராவணன் சீதையை தூக்கியது போல ஒரே ஒரு கடித நகலை கொடுத்து எங்கள் எம்.எல் ஏவை துக்க பார்த்துள்ளனர். உலகத்திலேயே கேள்விப்படாத வகையில் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

மோசடி செய்வதுதான் தூய சக்தியின் வேலையா? திமுகவின் கோட்டையாக இருந்த மன்னார்குடியில் உழைத்து, போராடி நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். அதனை மோசடி செய்து பறிக்க பார்க்கிறார்கள். தவெக தயாரிப்பில் போலி கடிதம் கொடுக்கப்பட்டது பற்றி காவல் நிலையத்தில் புகாரளிக்க இருப்பதாகவும். தமிழ்நாட்டில் குதிரை பேரம் நடக்கிறதா என கவர்னர் சந்தேகிக்கிறார்” என தெரிவித்துள்ளார். மேலும் மன்னார்குடி எம்.எல். ஏ காமராஜும் தனக்கும் அந்த கடிதத்திற்கு எந்த சம்மந்தமும் இல்லை என தெரிவித்தார். தற்போது டிடிவி தினகரனுக்கு பதிலளிக்கும் வகையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அமமுக எம். எல். ஏ சுயநினைவுடன் தான் அந்த கடிதத்தை எழுதினார். மேலும் பொதுச்செயலாளரின் ஒப்புதலுடன் தான் ஆதரவு அளிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். அவர் தன்னிச்சையாகவும், மகிச்சியுடனும் தவெக-விற்கு ஆதரவு அளிப்பதாக கடிதம் வழங்கினார். ஆனால் இதையெல்லாம் மறைத்து டிடிவி தினகரன் உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார் என கூறியுள்ளனர். மேலும் தமிழக வெற்றி கழக சார்பில் வெளியிடப்பட்ட வீடியோவில் எம்.எல். ஏ காமராஜ் காருக்குள் அமர்ந்து கடிதத்தில் மகிழ்ச்சியுடன் கையெழுத்திடுவது தெரியவந்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com