Vijay cabinet 2026 Vijay cabinet 2026
தமிழ்நாடு

"வெளியானது புதிய அமைச்சர்களின் இலாகாக்கள்!" 2 அமைச்சர் பதவிகள் காலியாக விடப்பட்டுள்ளது ஏன்?

தற்போது அமைச்சர்களுக்கு இலாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Vinvizhi Leninton

ஆளுநர் மாளிகையில் தவெக கட்சி சார்பில் 23 அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில், தற்போது அமைச்சர்களுக்கு இலாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. புதியதாக பதவியேற்கும் 23 அமைச்சர்களில் காங்கிரஸ் கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 9 அமைச்சர்கள் பட்டியல் வெளியானது, அதையடுத்து இன்று அவர்கள் முதல்வர் விஜய் தலைமையில் பொறுப்பேற்று கொண்டனர்.

இந்த அமைச்சரவையில் விசிக இணைவார்கள் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் தற்போது காங்கிரஸ் மற்றும் தவெக-வை சார்ந்தவர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். மேலும், அதிமுகவின் ஒரு பிரிவினர் தங்களது ஆதரவினை தவெக-விற்கு தெரிவித்தனர். இதனால் அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்றும் அவர்கள் தரப்பில் இருந்து எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், அதிமுகவிற்கு அமைச்சர் பதவி தந்தால் எங்களது கூட்டணியை குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்று 2 கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் கூறப்பட்டது.

தற்போது, அமைச்சர்களின் இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

1. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை - செங்கோட்டையன்

(கோபிச்செட்டிப்பாளையம்)

2. போக்குவரத்துத்துறை - விஜய் தமிழன் பார்த்திபன் (சேலம் தெற்கு)

3. இந்து அறநிலையத்துறை - ரமேஷ் (ஸ்ரீரங்கம்)

4. உயர் கல்வித்துறை - விஸ்வநாதன் (மேலூர் )

5. நிதித்துறை - மரியவில்சன் (ஆர்.கே.நகர்.)

6. மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை - விக்னேஷ் (கிணத்துக்கடவு)

7. மீன்வளத்துறை - ஸ்ரீநாத் (தூத்துக்குடி)

8. வனத்துறை - ரஞ்சித்குமார் (காஞ்சிபுரம்)

9. பால்வளத்துறை - விஜயலட்சுமி (குமாரபாளையம்)

10. கால்நடைத்துறை - கமலி (அவிநாசி )

11. வேளாண் துறை - வினோத் (கும்பகோணம்)

12. சுற்றுச்சூழல் துறை - திருவாடனை எம்.எல்.ஏ. ராஜீவ்

13. வீட்டுவசதித்துறை - ராஜ்குமார் (கடலூர் )

14. கூட்டுறவுத்துறை - காந்திராஜ் (அரக்கோணம் )

15. சிறு,குறு, நடுத்தர தொழில்துறை - மதன்ராஜா (ஓட்டபிடாரம் )

16. சமூகநலன், மகளிர் நலத்துறை - ஜெகதீஸ்வரி (ராஜபாளையம்)

17. சுற்றுலாத்துறை - ராஜேஷ் குமார் (கிள்ளியூர் )

18. கைத்தறி, ஜவுளித்துறை - விஜய் பாலாஜி (ஈரோடு கிழக்கு )

19. வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை - லோகேஷ் தமிழ்ச்செல்வன் (ராசிபுரம் )

20. AI, தகவல் தொழில்நுட்பத்துறை -. குமார் (வேளச்சேரி)

21. வெளிநாடுவாழ் தமிழர் நலன் - தென்னரசு (ஸ்ரீபெரும்புதூர் )

22. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை - சம்பத் குமார் (கோவை வடக்கு)

23. தொழிலாளர் நலத்துறை - முகமது பர்வேஸ் (அறந்தாங்கி )

24. மனிதவளத்துறை - சரத்குமார் (தாம்பரம் )

ஆகியோர் பதவியேற்றுள்ளார். மேலும் 2 அமைச்சர்களுக்கான இடங்கள் காலியாக விடப்பட்டுள்ளது. இந்த 2 இடங்களும் 'ஐயூஎம்எல்' மற்றும் 'விசிக' ஆகிய கட்சிகளுக்கு கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. தற்போது 'ஐயூஎம்எல்' அமைச்சரவையில் இடம்பெறுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், விசிக இதனைத்தொடர்ந்து அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.