தமிழ்நாடு

விஜய்யுடன் சேர்ந்து பதவியேற்க உள்ள 9 அமைச்சர்கள்.. சற்று நேரத்தில் தொடங்கும் பதவியேற்பு!

விஜய்யுடன் சேர்ந்து மொத்தம் 9 அமைச்சர்கள் பதிவேற்க உள்ள நிலையில் அவர்களது பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது...

Mahalakshmi Somasundaram

தவெக தலைவர் விஜய் நேற்று 118 எம்.எல்.ஏ க்களுடன் தனது பெரும்பான்மையை நிரூபித்த நிலையில் இன்னும் சற்று நேரத்தில் நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் சற்று முன் நேரு உள்ள விளையாட்டு அரங்கிற்கு வந்த விஜய்யை டிஜிபி மற்றும் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனன் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

மேலும் இந்த பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி கலந்து கொள்ள உள்ள நிலையில் சற்று நேரத்தில் அவரும் அரங்கத்திற்கு வர உள்ள நிலையில், ராகுல் காந்தியை விஜய் வரவேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் விஜய்யின் உறவினர்கள், அவருடன் பயணித்த திரைபிரபலங்கள் ஆகியோர் நேரு உள்விளையாட்டு அரங்கில் கூடியுள்ளனர்.

இந்நிலையில் விஜய்யுடன் சேர்ந்து மொத்தம் 9 அமைச்சர்கள் பதிவேற்க உள்ள நிலையில் அவர்களது பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது. ஆனந்த், ஆதவ் அர்ஜுன, செங்கோட்டையன், வெங்கட்ராமன், நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகியோர் பதிவியேற்க உள்ளனர். இன்னும் எந்த துறைகள் என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படாத நிலையில் பதவி ஏற்கும் போதே விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

முதலமைச்சராக பதவி ஏற்றவுடன் விஜய் தலைமை செயலகத்திற்கு சென்று முதலமைச்சருக்கான அறையில் அமரவுள்ளார். எனவே தலைமை செயலகத்தில் விஜய்யை வரவேற்க பூக்கோலங்கள் மற்றும் வாழை மரங்கள் காட்டி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் விஜய் பதவியேற்றவுடன் “ஜோசப் விஜய் ஆகிய நான்” என உறுதிமொழி எடுக்க உள்ள நிகழ்வை எதிர்பார்த்து அனைவரும் காத்திருந்த நிலையில் பொறுப்பு ஆளுநர் வருகை தந்தவுடன் சரியாக 10 மணியளவில் அந்த நிகழ்வு நடைபெற உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.