பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் அவரது மனைவி டெய்ஸியும் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்து செல்லப் பரஸ்பரம் முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். 14 ஆண்டுகால வாழ்க்கைப் பயணத்திற்குப் பிறகு இருவரும் தனித்தனிப் பாதையில் பயணிக்க முடிவு செய்திருப்பதாக டெய்ஸி வெளியிட்டுள்ள அறிக்கை அரசியல் மற்றும் பொதுவெளியில் கவனம் பெற்றுள்ளது. சிறுவயது முதலே விளையாட்டுத் துறையில் ஆர்வம் கொண்டிருந்த ஆதவ் அர்ஜுனா கடந்த 2015-ம் ஆண்டு தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்று விளையாடியுள்ளார்.
தொடர்ந்து, 2017-ம் ஆண்டு தமிழ்நாடு விளையாட்டுச் சங்கப் பொறுப்பில் இருந்தபோது, ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய அளவிலான போட்டியில் தமிழ்நாடு அணி தங்கப் பதக்கம் வென்றதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில் விளையாட்டுத் துறை சார்ந்த செயல்பாடுகளின் மூலமாகவே ஆதவ் அர்ஜுனாவுக்கு தொழிலதிபர் மார்ட்டினின் மகள் டெய்ஸி அறிமுகமாகியுள்ளார். இந்த அறிமுகம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
சிறுவயது முதலே தனிமையில் வாழ்ந்து வந்த ஆதவ் அர்ஜுனா, தனது காதல் குறித்து மார்ட்டினிடமே நேரடியாகத் தெரிவித்து டெய்ஸியைத் திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்கு மார்ட்டினும் சம்மதம் தெரிவித்த நிலையில் கடந்த 201 ஆம் ஆண்டு அவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில் திருமணத்திற்குப் பிறகு மார்ட்டினின் குடும்பத்துடன் இணைந்த ஆதவ் அர்ஜுனா, அவரது தொழில் நிறுவனமான Arise Group-இல் நிர்வாக இயக்குநராகப் பொறுப்பேற்றார்.
மார்ட்டினிடம் சுமார் ஐந்து ஆண்டுகள் தொழில் சார்ந்த அனுபவங்களைக் கற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் தனது பயணத்தை தொடர்ந்தார். பின்னர் விசிக்காவில் இணைத்து தனது அரசியலை பயணத்தை தொடங்கிய ஆதவ் அர்ஜுனன் சில கருத்து வேறுபாடு காரணமாக விசிகாவில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து பயணித்து தற்போது பொதுப்பணித்துறை அமைச்சராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், ஆதவ் அர்ஜுனாவுடனான திருமண வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவருவதாக டெய்ஸி தற்போது அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒருவருக்கொருவர் வாழ்வில் 14 ஆண்டுகளாகப் பங்காக இருந்த பிறகு, அது அன்பு, புரிதல் மற்றும் மாற்றம் நிறைந்த பயணமாக இருந்தது. நண்பர்களாக, வாழ்க்கைத் துணைகளாக, பெற்றோர்களாக வாழ்க்கையின் வெவ்வேறு அத்தியாயங்களை ஒன்றாகக் கடந்து வந்தோம்.
இன்று, நானும் ஆதவ் அர்ஜுனாவும் ஒரு ஜோடியாகப் பிரிந்து, தனித்தனிப் பாதைகளை ஏற்றுக்கொள்ளப் பரஸ்பர முடிவு செய்துள்ளோம். இது எங்கள் இருவருக்கும் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கும் அதே வேளையில், எங்கள் குழந்தையின் மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக இணைந்து வளர்ப்பதில் (Co-parenting) எங்கள் உறுதிப்பாடு எப்போதும் மிகப்பெரிய முன்னுரிமையாக இருக்கும். ஆதவ் அர்ஜுனா எப்போதும் எனது மரியாதையைப் பெறுவார்.
அவர் தேர்ந்தெடுக்கும் அனைத்திலும் அவருக்கு மகிழ்ச்சி, அமைதி மற்றும் வெற்றி கிடைக்க மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன். இந்த மாற்றத்தைக் கடந்து செல்லும் நிலையில், எங்கள் புரிதல், கனிவு மற்றும் தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார். 14 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் பிரிந்து செல்ல முடிவு செய்திருப்பதாக வெளியான இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பேசுபொருளாகியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.