2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழக சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா தற்போது வெற்றி பெற்றுள்ளார். சுமார் 16000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தவெக கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா, வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்ட நிலையில் காலையில் பின்னடைவை சந்தித்து வந்தார். பின்னர் முன்னிலையை பற்றிய அவர் தொடர்ந்து தக்க வைத்து தற்போது வெற்றியை உறுதி செய்துள்ளார்.
ஆதவ் அரசியலுக்கு வந்து, முதன் முறையாக தேர்தலை சந்தித்து வெற்றியும் பெற்றுள்ளார். முதலில் 2011 முதல் 2016 வரை திமுக ஆட்சியில் ஸ்டாலின் மேற்கொண்ட நமக்கு நாமே பயணத்தின் ஏற்பாட்டாளர்கள் குழுவில் ஒருவராக இருந்த அர்ஜுனா. பின்னர் திமுகவிற்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்து வந்தார். 2023-இல் திருச்சியில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டில் கலந்து கொண்டு தன்னை இணைந்து கொண்டார். பின்னர் அவரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் துணைப் பொதுச் செயலாளராக நியமித்தார்.
2024 டிசம்பரில் கட்சியின் சில அறிவுறுத்தலை மீறியதாகக் கட்சியை விட்டு இடைநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் 2024 டிசம்பர் 14-ஆம் தேதி அன்று விசிகவில் இருந்து நிரந்தரமாக விலகுவதாக அறிவித்தார்.அதன் பிறகு தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்து, தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார். 2025-இல் கரூரில் நடந்த தவெக கூட்டத்தில் நடந்த விபத்தில் ஆதவ் அர்ஜுனா-வுக்கு எதிராக வழக்குகள் பதியப்பட்டது.
வெற்றி பெற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த ஆதவ் அர்ஜுனா “இன்று புரட்சி பிறந்த நாள்” என்றும் “எங்கள் தலைவரின் பிரசாரத்தை முடக்கினார்கள், அவதூறு பரப்பினார்கள், ஆனால் தமிழக மக்கள் மாற்றத்திற் விரும்பி எங்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளனர்” என்றும் தெரிவித்தார். மேலும் “இன்றைய வரலாறு இந்தியாவே எதிர்பார்க்காத வரலாறு” என்றும் "இந்த வரலாற்று வெற்றியை கரூரில் இழந்த 41 பேருக்கு சமர்ப்பிக்கிறோம்” என்றும் குறிப்பிட்டு பேசியிருந்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.