nda allaince 
தமிழ்நாடு

உடையும் அதிமுக-பாஜக கூட்டணி! அமித்ஷாவின் ஒற்றை வார்த்தையில் வெலவெலத்து போன இ.பி.எஸ்..!

பலமுறை அண்ணாமலை பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமையும் என பேசியிருந்தார். ஆனால் அதிமுக -வின் ராஜேந்திர பாலாஜி இந்த கூற்றை ...

மாலை முரசு செய்தி குழு

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நெருங்க நெருங்க இங்கு அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. சொல்லப்போனால் தற்போது வரை மும்முனை போட்டிதான் நிலவுகிறது. திமுக மற்றும் அதன் கூட்டணி  அதிமுக மாற்றம் அதன் கூட்டணி மற்றும் தவெக. ஆனால் இத்துணை போட்டிகள் இருந்தாலும் அரசியல் களம் திமுக -விற்கு சாதகமாக இருப்பதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

அதிமுக -பாஜக கூட்டணி 

தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக விளங்கும் அதிமுக திடீரென பாஜக -வுடன் கூட்டணி அமைத்துள்ளது. அமித்ஷா நேரில் வந்து அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்தார். ஆனால் திமுக -வை வீழ்த்த இது போதாது என எடப்பாடிக்கு நன்றாக தெரியும். அதனால்தான் அதிமுக நிர்வாகிகள் ஒரு நாளைக்கு இரண்டு முறை “தம்பி விஜய் வர வேண்டும்” என தாம்பூலம் வைத்து அழைக்கின்றனர். 

அதிமுக -வில் மற்றுமொரு பிரச்னை என்னவென்றால் பாமக.. பாமக அதிமுக கூட்டணியில் இருப்பது உறுதியாகி இருந்தாலும், ராமதாஸ் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. மேலும் ராஜ்யசபா எம்.பி சீட் விவகாரத்தில் பிரேமலதாவும் எடப்பாடி மீது கோவத்தில்தான் உள்ளார். ஆகையால் தான் அதிமுக -வின் கூட்டணி வியூகம் குறித்து தற்போது வரை எந்த நிலைத்தன்மையும் இல்லை. 

பாஜக -வின் முழுமுதற் குறிக்கோள் திமுக -வை ஆட்சி கட்டிலில் இருந்து அகற்றிவிட்டு தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதுதான். அதற்காகத்தான் உள்துறை அமைச்சர் அமித்ஷா சும்மா சும்மா தமிழகம் வந்து போகிறார். தற்போது வருகிற 22 -ஆம் தேதி இந்து பாசிச பாஜக முருகர் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளது. மேலும் மதவாத அரசியல் செய்யும் பாஜக -வால் தமிழ்நாட்டில் கால் ஊன்ற முடியாததற்கு காரணம் இங்குள்ள திராவிட சித்தாந்தம் தான் காரணம். இருப்பினும் எப்படியேனும் ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என பாஜக போராடி வருகிறது.

இதற்கிடையில் பலமுறை அண்ணாமலை பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமையும் என பேசியிருந்தார். ஆனால் அதிமுக -வின் ராஜேந்திர பாலாஜி இந்த கூற்றை திட்டவட்டமாக மறுத்தார். அதனை பிறகு தற்போது இபிஎஸ் சிற்று பயணம் எல்லாம் மேற்கொண்டு வருகிறார். கடந்த சில தினங்களாக தான் அதிமுக -பாஜக கூட்டணி ஓரளவுக்கு சுமூகமாக செல்வது போல தெரிந்தது. ஆனால் தற்போது அமித்ஷா அதற்கும் ஆப்பு வைத்துள்ளார். 

அமித்ஷா தற்போது 3 ஆவது முறையாக, தமிழ்நாட்டில் அதிமுக -பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமையும் என சொல்லியிருக்கிறார். அதிமுக தான் ஆட்சி அமைக்கும் கூட்டணி ஆட்சிக்கு இடமில்லை, எனக்கூறப்பட்டு வந்த நிலையில் அமித்ஷாவின் இந்த உறுதியான நிலைப்பாடு பல சிக்கல்களுக்கு வழி வகுத்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.