stalin vs eps 
தமிழ்நாடு

அமித்ஷா போட்ட தப்பு கணக்கு..கலங்கி நிற்கும் எடப்பாடி..! “ஸ்டாலின் இத மட்டும் செஞ்சா போதும்” - யாருக்கானது 2026 தேர்தல்!!?

பாஜக -வின் முழுமுதற் குறிக்கோள் திமுக -வை ஆட்சி கட்டிலில் இருந்து அகற்றிவிட்டு தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதுதான். அதற்காகத்தான்...

Saleth stephi graph

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நெருங்க நெருங்க இங்கு அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. சொல்லப்போனால் தற்போது வரை மும்முனை போட்டிதான் நிலவுகிறது. திமுக மற்றும் அதன் கூட்டணி  அதிமுக மாற்றம் அதன் கூட்டணி மற்றும் தவெக. ஆனால் இத்துணை போட்டிகள் இருந்தாலும் அரசியல் களம் திமுக -விற்கு சாதகமாக இருப்பதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

அதிமுக -பாஜக கூட்டணி 

தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக விளங்கும் அதிமுக திடீரென பாஜக -வுடன் கூட்டணி அமைத்துள்ளது. அமித்ஷா நேரில் வந்து அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்தார். ஆனால் திமுக -வை வீழ்த்த இது போதாது என எடப்பாடிக்கு நன்றாக தெரியும். அதனால்தான் அதிமுக நிர்வாகிகள் ஒரு நாளைக்கு இரண்டு முறை “தம்பி விஜய் வர வேண்டும் என தாம்பூலம் வைத்து அழைக்கின்றனர். 

அதிமுக -வில் மற்றுமொரு பிரச்னை என்னவென்றால் பாமக.. பாமக அதிமுக கூட்டணியில் இருப்பது உறுதியாகி இருந்தாலும், ராமதாஸ் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. மேலும் ராஜ்யசபா எம்.பி சீட் விவகாரத்தில் பிரேமலதாவும் எடப்பாடி மீது கோவத்தில்தான் உள்ளார். ஆகையால் தான் அதிமுக -வின் கூட்டணி வியூகம் குறித்து தற்போது வரை எந்த நிலைத்தன்மையும் இல்லை. 

பாஜக -வின் முழுமுதற் குறிக்கோள் திமுக -வை ஆட்சி கட்டிலில் இருந்து அகற்றிவிட்டு தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதுதான். அதற்காகத்தான் உள்துறை அமைச்சர் அமித்ஷா சும்மா சும்மா தமிழகம் வந்து போகிறார். தற்போது வருகிற 22 -ஆம் தேதி இந்து பாசிச பாஜக முருகர் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளது. மேலும் மதவாத அரசியல் செய்யும் பாஜக -வால் தமிழ்நாட்டில் கால் ஊன்ற முடியாததற்கு காரணம் இங்குள்ள திராவிட சித்தாந்தம் தான் காரணம். இருப்பினும் எப்படியேனும் ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என பாஜக போராடி வருகிறது.

எடப்பாடியின் மவுனம்!

இதற்கிடையில் அண்ணாமலை பாஜக தலைமையிலான்  கூட்டணி ஆட்சியே 2026 -இல் அமையும் என பேசியுள்ளார்.

ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக -விற்குத்தான் வாக்கு வாங்கி அதிகம். அதுமட்டுமின்றி தமிழகத்தில் கூட்டணியின்  தலைமையும் அதிமுக -தான் அப்படியிருக்கையில் அண்ணாமலையின் எந்த பேச்சுக்கு பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது. ஆனால் இந்த விவகாரத்திற்கு எதுவும் பேசாமல் எடப்பாடி மவுனம் சாதித்து வருகிறாரார். இதனால் களத்தில் பாஜக -வினருடன் இணைந்து பணியாற்ற அதிமுக -வினர் மறுக்கின்றனர்.

திமுக செய்ய வேண்டியது என்ன?

ஏற்கனவே ஒரு ஆங்கில பத்திரிகையின் ஆரூடத்தை வைத்து பார்த்தால் தற்போது வரை திமுக -விற்குத்தான் கணிசமான வெற்றி வாய்ப்பு உள்ளது. ஆனால் திமுக -வின் மிகப்பெரிய பலவீனம் அதன் ஊழல் செயற்பாடுகளும்,  மோசமான எதிர்வினை பேச்சுகளும் தான். வருகிற 10 மதங்களுக்காவது ஸ்டாலின் தனது கழக தொண்டர்களிடம் ஊழல் வேளைகளில் ஈடுபடாமல் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் தேர்தல் வேலைகளை கவனித்தால் நிச்சயம் வெற்றி வாய்ப்பை பெறலாம், காரணம் தேர்தல் சமய சர்ச்சைகள் நிச்சயம் ஒட்டு வங்கிகளை பாதிக்கும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.